உடன் பிறப்புகளின் ஆளுங்கட்சி கூட்டு... ஒருபோதும் வாங்கப்போவதில்லை ஓட்டு!| Dinamalar

உடன் பிறப்புகளின் ஆளுங்கட்சி கூட்டு... ஒருபோதும் வாங்கப்போவதில்லை ஓட்டு!

Added : மார் 13, 2018
Share
அதிகாலையில், சைக்கிளை எடுத்துக் கொண்டு, வாலாங்குளம் பாலத்துக்கு அருகில் சித்ராவும், மித்ராவும் வந்து விட்டனர். அங்கே சைக்கிளை நிறுத்தி விட்டு, சாலையோரமாக நடக்கத் துவங்கினர்.''இந்த ஏரிய மட்டுமல்ல இந்த ஏரியாவையே, 'ஸ்மார்ட் சிட்டி'யில தலைகீழா மாத்தப்போறாங்களாம்... 'பிபிடி'கலக்குது... ஆனா எந்த நுாற்றாண்டுல வேலை நடக்கும்னு தான் தெரியலை!'' என்று கடுகடுப்பாய்
உடன் பிறப்புகளின் ஆளுங்கட்சி கூட்டு... ஒருபோதும் வாங்கப்போவதில்லை ஓட்டு!

அதிகாலையில், சைக்கிளை எடுத்துக் கொண்டு, வாலாங்குளம் பாலத்துக்கு அருகில் சித்ராவும், மித்ராவும் வந்து விட்டனர். அங்கே சைக்கிளை நிறுத்தி விட்டு, சாலையோரமாக நடக்கத் துவங்கினர்.''இந்த ஏரிய மட்டுமல்ல இந்த ஏரியாவையே, 'ஸ்மார்ட் சிட்டி'யில தலைகீழா மாத்தப்போறாங்களாம்... 'பிபிடி'கலக்குது... ஆனா எந்த நுாற்றாண்டுல வேலை நடக்கும்னு தான் தெரியலை!'' என்று கடுகடுப்பாய் ஆரம்பித்தாள் மித்ரா.''அதுவரைக்கும் காத்திருக்காம, இந்த கரையோர ஆக்கிரமிப்பை எடுக்கிறதுல இவுங்களுக்கு என்னதான் பிரச்னை?'' என்று கேட்டாள் சித்ரா.''டவுன் பிளானிங் ஆபீசர்களுக்கு, சம்பாதிக்கிறதுக்கும், ஆளுங்கட்சிக்காரங்க சொல்ற வேலையச் செய்யுறதுக்குமே நேரம் பத்தலை... கார்ப்பரேஷன்ல, மேல இருந்து கீழ வரைக்கும் அப்பிடித்தான் இருக்குது. பில்டிங் அப்ரூவல்களுக்கான 'ரோஸ்' கலர் ஃபைல்னா, உடனுக்குடனே கையெழுத்தாயிருதாம்... மத்த வேலைகள் சம்மந்தப்பட்ட காக்கிக் கோப்புகள்னா பாக்கி வச்சிர்றாங்களாம்!'' என்றாள் மித்ரா.''குளத்து வேலைகள் தான், கிணத்துல போட்ட கல்லு மாதிரிக் கிடக்குதுன்னா, கட்டடக் கழிவு மறுசுழற்சி திட்டமும், ஒரு வருஷமா 'பேஸ்மென்ட்'லயே நிக்குது... எப்பக் கேட்டாலும், 'மெஷின் வந்துட்டு இருக்கு'ங்கிறாங்க. அது வராமலே, பல லட்ச ரூபா பணத்தை எடுத்து, காம்பவுண்ட் கட்டுனதா கணக்குக் காமிச்சு, காசை அடிச்சிட்டாங்க!'' என்றாள் சித்ரா.''அது மட்டுமா... 'சோலார் பவர் யூனிட்' துவங்கி, ரெண்டு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் போறோம்ணு, மூணு வருஷமா சொல்லிட்டே இருக்காங்க. அதுலயும் அணுவும் அசையாம இருக்கு!'' என்றாள் மித்ரா.''மித்து... மத்த வேலைகள் தான் நடக்குறதில்லை... 'பொலிடிகல் பவர்'ல நடக்குற வேலையெல்லாம் நடந்துட்டு தான் இருக்கு... பத்து வருஷத்துக்கு முன்னால, சங்கனுார் ஸ்கூல்ல, தலைமையாசிரியரா இருந்த ஒருத்தரு மேல, ஏகப்பட்ட ஊழல் புகார் கிளம்பி, அப்போ இருந்த கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, அந்த எச்.எம்.ஐ., 'டிஸ்மிஸ்' பண்ணுனாரு. அவரு, கார்ப்பரேஷனுக்கு எதிரா கேஸ் போட்டு, ஜெயிச்சு, திரும்பவும் வேலைக்கு வந்துட்டாரு!'' என்றாள் சித்ரா.''அவ்வளவு சிறப்பா, கார்ப்பரேஷன் சார்புல கேசை நடத்திருக்காங்களோ?'' என்று கேட்டாள் மித்ரா.''உள்ளுக்குள்ள இருக்குற ரெண்டு ஜூனியர் அசிஸ்டென்ட்கள்தான், இந்த கேசுல அந்த 'எச்.எம்.,' ஜெயிக்கிறதுக்கு நிறைய உதவி பண்ணிருக்காங்க. அவுங்க ரெண்டு பேரும், 20 வருஷமா அதே ஆபீஸ்ல பெஞ்சு தேய்க்கிறாங்களாம்!'' என்றாள் சித்ரா.''இதெல்லாம் இப்ப இருக்குற கமிஷனருக்குத் தெரியாதா?'' என்று குறுக்கே புகுந்தாள் மித்ரா.''அந்த ரெண்டு பேரையும், ஸ்கூல்களுக்கு 'டூட்டி' போட்டு, இவர் தான் மாத்தி விட்ருக்காரு. ஆனா, தனக்கு உதவி பண்ணுன அந்த ரெண்டு பேரையும் பழையபடி அதே இடத்துக்குக் கொண்டு வந்துட்டாராம் அந்த 'எக்ஸ் டிஸ்மிஸ்' எச்.எம்.,... இதுல கொடுமை என்னன்னா, இப்போ அவரு மிடில் ஸ்கூலுக்கு ஹெட்மாஸ்டராவும் ஆயிட்டாராம்!'' என்றாள் சித்ரா.''கல்வித்துறையில மட்டுமில்லாம, கார்ப்பரேஷன் ஸ்கூல்கள்லயும் 'ரெட் போர்ட்' மினிஸ்டர் அதிகமா தலையிடுறாராம்... சமீபமா, கோயம்புத்துாருக்கு அடிக்கடி வந்து, ஏதாவது ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேதான் இருக்காரு... சிட்டியில இருக்குற எம்.எல்.ஏ.,க்கள் பல பேரு, அவரோட நல்ல தொடர்புல இருக்காங்களாமே. கட்சி கலகலத்துச்சுன்னா, கோவையை தன்னோட கோட்டையா மாத்தலாம்னு நினைக்கிறாரோ என்னவோ?'' என்றாள் மித்ரா.''இருக்கலாம்... ஏற்கனவே சத்தமில்லாம, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை, பெருந்துறை வரைக்கும் கொண்டு போயிட்டாரு. இப்போ இருக்குற திட்டத்தைப் பார்த்தா, அன்னுார், அவிநாசிக்கு ஒரு பிரயோஜனமும் இல்லைங்கிறாங்க!'' என்றாள் சித்ரா.இருவரையும் உரசியவாறு, தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ், அசுர வேகத்தில் பறந்து சென்றது. அதைப் பார்த்ததும் கோபமாய்ப் பேசினாள் மித்ரா...''நம்மூர்ல இந்த தனியார் ஆம்புலன்ஸ்காரங்க பண்ற அலும்புக்கு அளவே இல்லாமப் போச்சுக்கா... நேத்து கூட, பிரைவேட் ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ் ஆக்சிடென்ட்ல மூணு பேரு பரிதாபமா செத்திருக்காங்க!''''ஆமா மித்து... இப்பல்லாம் '108'க்கு போன் பண்ணுனா, அந்த வண்டி வர்றதுக்கு முன்னால, பிரைவேட் ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ் அங்க வந்திருதாம்... நேத்தும் அப்பிடித்தான் நடந்திருக்கு. யாரோ சம்பாதிக்கிறதுக்கு, இந்த ஆம்புலன்ஸ் டிரைவருக, உசுரைக் கொடுத்து, அடுத்தவுங்க உசுரையும் எடுக்குறாங்க!'' என்றாள் சித்ரா.''அதுலயும் சிட்டிக்குள்ள இருக்குற முத்தான ஹாஸ்பிடல்ல நடக்குறதைக் கேட்டா, 'ரமணா' சீனெல்லாம் தோத்துரும். போன வாரம், பிளஸ்1 எக்ஸாம்க்குப் போன பையனுக்கு லேசா அடிபட்ருக்கு. அவனை இப்பிடித்தான் ஆம்புலன்ஸ்ல கடத்திட்டுப் போயி, ஐ.சி.யு.,ல படுக்க வச்சிட்டாங்க. பையன் எந்திரிச்சு உட்கார்ந்து, 'எக்ஸாம் போகணும்'னு அழுதிருக்கான்!'' என்றாள் மித்ரா.''அச்சச்சோ... அப்புறம்?'' என்றாள் சித்ரா.''பையனோட அப்பாட்ட 'ரொம்ப சீரியஸ்'னு மெரட்டிருக்காங்க... உள்ள பார்த்தா, பையன் உட்கார்ந்திருக்கானாம். கடைசியில 30 பேரைக் கூப்பிட்டு வந்து போராட்டம் நடத்தி, பையனை மீட்டுப் போயிருக்காங்க. ஆனா, பையனோட ஒரு பரீட்சை போச்சு!'' என்றாள் மித்ரா.''போராட்டம்னு சொன்னதும், நம்ம ம.தி.மு.க., ஈஸ்வரன் ஞாபகம் வந்துச்சு... கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்தச் சொல்லி, போன வாரம் கலெக்டர்ட்ட மனு கொடுக்க வந்தவரு, திடீர்னு தர்ணா பண்ணி போராட்டத்துல குதிச்சிட்டாரு. எவ்வளவோ சொல்லியும் கேட்கலைன்னு 'அரெஸ்ட்' பண்ணி, செக்ஷன் 151ல கேஸ் போட்டாங்க!'' என்றாள் சித்ரா.''ஆனா, அவரு சொல்றது நுாத்துக்கு நுாறு உண்மை... சிட்டியில, கஞ்சாவுக்கு அடிமையாகுற காலேஜ் பசங்க, ரொம்ப அதிகமாயிட்டாங்க. போன வாரம், கொடிசியா ரோட்டுல, ஒரு 'பாரின்' காருக்குள்ள நாலு பசங்களோட ஒரு பொண்ணு, கஞ்சா அடிச்சிட்டு, நிலை கொள்ளாத போதையில அலங்கோலமா இருந்திருக்கா... ஒரு போலீஸ்காரர்... நல்ல மனுஷன் பாத்து, 'வார்ன்' பண்ணி அனுப்பி வச்சிருக்காரு!'' என்றாள் மித்ரா.''இவுங்களாவது பரவாயில்லையே... போராடி, ஜெயிலுக்குப் போறாங்க... உடன் பிறப்புகள் எல்லாருமே, ஆளுங்கட்சியோட 'டை அப்' வச்சுக்கிட்டு சம்பாதிக்கிறதுல தான குறியா இருக்காங்க!'' என்றாள் சித்ரா.''அதுல என்ன சந்தேகம்... போன வாரம், நம்ம உடன் பிறப்பு எம்.எல்.ஏ., 'டாஸ்மாக் பார்' ஏல விவகாரத்துல, தலைய நுழைச்சு, 'ஒன் சி' பாத்துட்டதா பேசிக்கிறாங்க. பத்து 'பார்'க்கு, தன்னோட ஆளுகளை வச்சு, பேருக்கு 'டெண்டர்' போட்டுட்டு, அப்புறமா டி.எம்., டிஆர்ஓ எல்லார்ட்டயும் கூப்பிட்டு, 'நியாயம்' கேட்ருக்காரு. உடனே, 'பார்' விவகாரங்களைக் கவனிக்கிற கருப்பு எம்.எல்.ஏ., சார்புல இந்த 'அமவுன்ட்' செட்டில் ஆயிட்டதாச் சொல்றாங்க!'' என்றாள் மித்ரா.''அது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியலை... ஆனா, அவுங்க ஆட்சியில 'பார்' விவகாரங்கள்ல 'ஆனந்தமா' சம்பாதிச்ச தாடிக்காரரோட 'கிளப்' ஒண்ணு, தொண்டாமுத்துார் ரோட்டுல, காட்டை ஒட்டி இருக்கு. அந்த பச்சை வீட்டுல இருந்து வெள்ளி, சனி, ஞாயிறுகள்ல வர்ற சத்தத்துல, காட்டு யானைங்க காதே கிழிஞ்சிரும்கிறாங்க. அங்க எல்லா 'இல்லீகல்' வேலையும் நடக்குதாம். ஆளுங்கட்சியோட கூட்டணி இல்லாமலா இதெல்லாம் நடக்குது!'' என்றாள் சித்ரா.''இப்பிடி இருந்தா, வர்ற எலக்ஷன்லயும் இங்க ஓட்டு வாங்க முடியாது... அப்புறம், மு.க.,ங்கிற இன்ஷியல், முதல்வர் கனவுன்னு மாறிரும்!'' என்றாள் மித்ரா.''மித்து... இவுங்களை மிஞ்சுறது மாதிரி, சேரன் மாநகர்ல 'அமிர்தமான' உடன் பிறப்பு ஒருத்தர் இருக்காரு...அவர்ட்ட சிக்காத அரசியல்வாதிங்க, அதிகாரிகளே கிடையாதாம். போலீஸ்காரங்க, இன்ஸ்பெக்டர் எல்லாரும் அவரை 'மாமா'ன்னு தான் கூப்பிடுவாங்களாம்... அவரு, 'மாப்ள'ன்னு கூப்பிடுவாராம். போலீஸ் வண்டிகள்ல போயித்தான், அவரு 'பல வேலைகளை' செய்வாராம்!'' என்றாள் சித்ரா.''இந்த கவர்மென்ட்லயுமா அவரோட ஆட்டம் நிக்கலை?'' என்று கேட்டாள் மித்ரா.''அதிகமாயிருச்சாம்...அவரை 'ஆம்பளை ஜெயலட்சுமி'ன்னு சொல்றாங்க... பல போலீஸ் ஆபீசர்கள், நம்மூரு எம்.எல்.ஏ., எல்லாரோட 'வீடியோ'வும் அவர்ட்ட இருக்காம்... அவரைப் பத்தி, ஐ.பி., ஆபீசர்கள், தீவிரமா விசாரிச்சிட்டு இருக்காங்க. அநேகமா, ஒரு பெரிய கேசுல அவரைத் துாக்குவார்ங்கிறாங்க!'' என்றாள் மித்ரா.''நம்ம இப்பிடி நடந்து போனா, கார்ல நம்மளை அடிச்சுத் துாக்கிருவாங்க!'' என்று சித்ரா கூற, இருவரும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X