'கள்'ளானாலும், காசு; 'புல்' ஆனாலும் 'மவுசு'

Added : மார் 13, 2018
Share
Advertisement
வெயிலின் தாண்டவம் சற்று அதிகரித்த அன்று, அலுவலகம் முடிந்து, சித்ரா, மித்ரா வீட்டுக்கு சென்றாள். ''மணி ஆறாகியும், வெயில் குறையலையே,'' என்றவாறே வரவேற்றாள் மித்ரா. ''எங்கே, மம்மியை காணோம்?'' என்ற சித்ராவின் கேள்விக்கு, ''பக்கத்தில, வி.ஜி.வி., கார்டன் வரைக்கும் போயிருக்காங்க. அங்க, சக்திகலா ஆன்டியும், அவங்க குழந்தைகளும், 'டிரக்கிங்' போய், தீ விபத்தில சிக்கிட்டாங்க
'கள்'ளானாலும், காசு; 'புல்' ஆனாலும் 'மவுசு'

வெயிலின் தாண்டவம் சற்று அதிகரித்த அன்று, அலுவலகம் முடிந்து, சித்ரா, மித்ரா வீட்டுக்கு சென்றாள். ''மணி ஆறாகியும், வெயில் குறையலையே,'' என்றவாறே வரவேற்றாள் மித்ரா. ''எங்கே, மம்மியை காணோம்?'' என்ற சித்ராவின் கேள்விக்கு, ''பக்கத்தில, வி.ஜி.வி., கார்டன் வரைக்கும் போயிருக்காங்க. அங்க, சக்திகலா ஆன்டியும், அவங்க குழந்தைகளும், 'டிரக்கிங்' போய், தீ விபத்தில சிக்கிட்டாங்க இல்லையா. அதனால, அவங்க பெரியம்மாகிட்ட கேட்டுட்டு வர போயிருக்காங்க,'' என்றாள் மித்ரா.''மித்து, கொடுமைய பார்த்தியா. சந்தோஷமா போனவங்க, துயரத்தோட திரும்பியிருக்காங்க. ஒன்பது பேர் இறந்துட்டாங்களாம். 'பாரஸ்ட்' ஏரியான்னா, கொஞ்சம் யோசிச்சு இருக்கணும். ஆஸ்பத்திரியில, 'ட்ரீட்மென்ட்டில்' உள்ளவர்கள், எல்லோரும் நல்லபடியா குணமாகனும்,'' என்று ஆதங்கப்பட்டாள் சித்ரா.இருவரும், கிச்சனுக்குள் புகுந்து, டீ வைக்க துவங்கினர். ''கோடை காலம் துவங்கும் முன்பே வெப்பம் அதிகரித்து விட்டது. குடிநீர் பிரச்னையை தான் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை,'' என்றாள் மித்ரா. ''கிடைக்கிற தண்ணீரை முறையாக, சேமிக்க வேண்டும். அனாவசியமாக குடிநீரை வீணடிக்க கூடாது,'' என்றாள் சித்ரா.''நாம்தான் இப்படி சொல்றோம். பெரிய ஆட்கள் சிலர் கண்டு கொள்வதில்லை. போன வாரம், ேஹாலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்ட் நீச்சல் குளத்தில், கலர் பொடியை கலந்து, தண்ணீரை வீணாக்குனாங்களாம். இதைப்பத்தி, பேஸ்புக்கில் வந்ததுக்கு, 'வேணுமின்னே, கலர் பொடி போடலை. கலர் பொடி பூசுன குழந்தைகள் குளிச்சதில், தண்ணி கலராயிடுச்சு,'ன்னு விளக்கம் சொன்னாங்களாம்,'' என்றாள் சித்ரா.''தன்னோட ஏரியாவுல 'சரக்கு' விற்கக்கூடாதுன்னு, மீண்டும் வந்த போலீஸ் அதிகாரி, 'ஸ்டிரிட்டா' ஆர்டர் போட்டுட்டாராம்,'' என்று லிங்கேஸ்வரர் ஊர் மேட்டரை மித்ரா சொல்ல, ''ஓ. அதுவா. இப்ப, வில்லேஜில் பரவலாக, 'கள்'விக்கிறது அதிகமாயிடுச்சாம். தோப்புக்கு இவ்வளவுன்னு நிர்ணயம் பண்ணி, போலீஸ்காரங்க, 'வசூலில்' பட்டைய கிளப்பறாங்களாம்.''இருந்தாலும், இப்ப நிலைமை கொஞ்சம் சரியில்ல. கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிங்கன்னு, அதிகாரி உத்தரவு போட்டிருக்காராம். அதனால கொஞ்சம் கம்மியாயிடுச்சாம்,'' என்றாள் சித்ரா.''எப்டியோ... 'கள்' வித்தாலும் சரி. 'புல்'வித்தாலும் சரி, 'சாமி' காட்டில எப்பவுமே 'பண'மழைன்னு சொல்லுங்க்கா,'' என்று சொல்லி சிரித்தாள் மித்ரா.அதற்குள் டீ தயாராகி விடவே, 'டிவி' பார்த்து கொண்டே, டீ குடித்தனர். “அதிகாரியுடனான 'பனிப்போரில்'ஆளுங்கட்சியும் ஜெயிச்சது தெரியுமா, மித்து?'' என்று பீடிகை போட்டாள் சித்ரா.''என்ன, மேட்டருன்னு சொல்லுங்க,'' என்று மித்ரா ஆர்வமானாள்.“அம்மா ஸ்கூட்டி திட்டத்துல, மானியம் வழங்கும் விழா நடந்துச்சு. முதல் கட்டமா, 100 பேருக்கு மட்டும் ஸ்கூட்டி மானியம் கொடுத்திருக்காங்க. பயனாளிகள் தேர்வில், எம்.எல்.ஏ., சிபாரிசு செஞ்சவங்களுக்கு, மானியம் வேண்டுமுன்னு சொல்லி, தலைமை செயலகத்துல போய் புகார் செஞ்சாங்கன்னு பேசியிருந்தமே ஞாபகம் இருக்கா?'' என்றாள் சித்ரா.''ஆமாங்க்கா,'' என்று மித்ரா சொன்னதும், ''அதுல, 'சவுத்' எம்.எல்.ஏ., சொல்ற ஆளுங்களுக்கு கொடுங்கனு சொல்லிட்டாங்களாம். இது தெரிஞ்ச, சிலர், 'அடடா, சிபாரிசெல்லாம், செல்லாதுன்னு' அசால்ட்டா விட்டுட்டோமேன்னு, வட போச்சேன்னு, 'லபோ திபோ'ன்னு அடிச்சுட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா சிரித்து கொண்டே.“குப்பை அள்ளாம விட்டதால, குப்பை தொட்டியே இல்லாம பண்ணிட்டாங்களாம் தெரியுமா”என்றாள் சித்ரா.“அடப்பாவமே.. இந்த கூத்து எங்கே நடந்துச்சு?” என்றாள் மித்ரா.“மங்கலம் பஞ்சாயத்துலதான்... தனி அலுவலர் அந்த பக்கமே தலை காட்றது இல்லையாம். குப்பை அள்ளாம குவிஞ்சு கிடந்ததால, காத்துல பறந்து போய் பக்கத்து வீட்டுக்குள்ள விழுந்து தொந்தரவு பண்ணியிருக்கு. சலித்து போன மக்கள், 'ஹாலோ பிளாக்'ல கட்டின குப்பை தொட்டிய இடிச்சு, அடையாளமே தெரியாத அளவுக்கு அப்புறப்படுத்திட்டாங்க. ''இப்ப தொட்டி இல்லாததால், ரேஷன் கடைக்கு பக்கத்துல, மக்கள் குப்பைய கொட்றாங்களாம். இந்த விஷயத்தை தனி அதிகாரிகிட்ட சொன்னதற்கு, 'அங்க குப்பை தொட்டி இருந்து தா?ன்னு,' கேட்டாராம். அந்த அளவுக்கு அதிகாரிங்க வேலை செய்றாங்க,”என்றாள் சித்ரா.“திருப்பூர் யூனியன் ஆபீஸ்ல நிறுத்தியிருக்கற, பி.டி.,யோட பழைய கார்ல, ஒவ்வொரு 'ஸ்பேர் பார்ட்'டா காணாம போயிட்டு இருக்கு. அதையே கண்டுபிடிக்க முடியாத அதிகாரிங்க, ஊர் குப்பை தொட்டிய காணம்னா என்ன பண்ண முடியும்,”என்று ஒரு விஷயத்தை போட்டு உடைத்தாள் மித்ரா.“கடைசி முயற்சியா ஜெராக்ஸ் காப்பிய வச்சு சமாளிக்கலாம்னு ரேஷன் கடையில முடிவு பண்ணியிருக்காங்க” என்றாள் சித்ரா.“ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவங்களுக்கா...” என்றாள் மித்ரா.“அது இல்லடி. ஸ்மார்ட் கார்டு இல்லாம பொருளை விற்க முடியாதுங்கறதால, அதோட ஜெராக்ஸ் வாங்கி, 'ஸ்கேன்' பண்ணி, விற்பனையான மாதிரி கணக்கு எழுதிடறாங்களாம். கார்டுதாரருக்கு எஸ்.எம்.எஸ்., போறதால, கார்டுதாரர் போயி கடையில கேட்டாலும், 'தெரியாம கை பட்டிருச்சுங்க'னு சொல்லி சமாளிச்சுடறாங்களாம்.எதிர்த்து கேட்காத ஆட்கள் வரும் போது, கோதுமை மாவு, உப்பு, டீத்துாள் வாங்கனும்னு, அவங்க தலையில கட்டிடறாங்க” என்றாள் சித்ரா.''இப்டி, அதிகாரிங்க இருக்கற வரைக்கும், முறைகேடு நடக்கத்தான் செய்யுங்க்கா. சொைஸட்டி எலக்ஷன் அறிவிச்சதும் ஆளுங்கட்சியில, கோஷ்டி அதிகமாயிடுச்சாம்,'' என்று மித்ரா கேட்டாள்.''ஆமாம், ஆளுங்கட்சியில,, 'பிரளயமே' ஆரம்பிச்சுடுச்சாம். 'மாஜி' சொல்ற ஆள்தான் 'சொைஸட்டி தலைவரா வரணுமாம். அவருக்கு போட்டியா, 'சவுத்' எம்.எல்.ஏ., கோஷ்டியும், 'எங்க ஆட்களுக்கும் பதவி வேணும்'ன்னு, சொல்றாங்களாம்,'' என்று சித்ரா சொன்னதும், ''நாம ஒண்ணா நின்னு போராடினா, எப்படியாச்சும், பாதி பதவியை வாங்கிடலாம். ஒத்துவரலைன்னா, 'டிடிவி' அணிய சேர்த்துக்கிட்டு குட்டைய குளப்பினா, ஈஸியா மீன் பிடிச்சிடலாம்,'ன்னு எதிர்க்கட்சிக்காரங்க, 'பிளேன்' பண்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.“மிட் நைட்ல, லாரி டிரைவர மடக்கி பிடிச்ச எஸ்.ஐ., மேட்டர பத்தி தெரியுமா மித்து,” என்று சித்ரா கேட்டதும், ''ம்..ஹூம்,'' என்றாள் மித்ரா.“கோழி பண்ணை ஊர்ல, கவுண்டமணி கூட அதிக படங்கள் நடிச்சவரோட பேர் கொண்ட எஸ்.ஐ., ஒருத்தர், ஒரு லாரியை நிறுத்தி, டிரைவர்கிட்ட 'நீ குடிச்சிட்டு வண்டி ஓட்டுகிறாய்?ன்னு சொல்லி மிரட்டி, அவர் வச்சிருந்த, 25 ஆயிரம் பணத்தை வாங்கிட்டாராம். உடனே, பதறிப்போன டிரைவர், 'பணத்தை கொடுக்கலைன்னா, இங்கயே 'சூசைட்' பண்ணிப்பேன்னு சத்தம் போட்டதும், ஸ்டேஷனுக்கு வந்து வாங்கிக்கோன்னுட்டு, போனாராம்,'' என்றாள் சித்ரா. ''அப்புறம் பணம் கிடைச்சுதா?'' என்று மித்ரா கேட்டதும், ''இத தெரிஞ்சுகிட்ட, மத்த போலீஸ்காரங்க, அவரை போனில் மிரட்டினாங்களாம். பயந்து போன டிரைவர், மொபைல்போனை, 'ஸ்விட்ச் ஆப்' செஞ்சிட்டாராம். பணம், இன்னும் ஸ்டேஷனில்தான் இருக்குதாம்,'' என்றாள் சித்ரா.''ஏன்தான், போலீஸ்காரங்க, இப்படி பண்றாங்கன்னே தெரியலை. அதுவும், ரூரல் ஸ்டேஷன்களில், போலீஸ்காரங்க பண்ற பல விஷயங்களை, 'மேடம்' தட்டி கேட்குறதே இல்லையாம். இதனால, 'நம்மை, யார் என்ன செய்ய முடியுமுன்னு, தைரியத்துல பொதுமக்கள்கிட்ட இப்படி நடந்துக்கிறாங்க. இதனால, ரூரலில், கிரைம் ரேட், கன்னாபின்னான்னு ஏறுதாம்,'' என்றாள் மித்ரா.அப்போது, கிச்சனுக்குள் சென்று, 'ஸ்நாக்ஸ்' கொண்டு வந்தாள் மித்ரா. அதை எடுத்து சாப்பிட்டு கொண்டே, ''சிட்டி லிமிட்டில், சீதையின் கணவர் பேர் கொண்ட ஒரு ஏட்டு, தனது காரை, மங்கலம் ரோட்டிலுள்ள ஒரு ஒர்க் ஷப்பில் சர்வீஸ் செய்ய சொன்னாராம். 90 சதவீத வேலை முடிஞ்சதும், ஓனர் இல்லாத நேரத்தில போய், காரை எடுத்துட்டு போய்ட்டாராம். இது தெரிஞ்சு, பணம் கேட்டதற்கு, பதிலே இல்லையாம்,'' என்று சித்ரா சொன்னதும், ''சிட்டி போலீசும் இப்படித்தானா?'' என்று அலுத்து கொண்டாள் மித்ரா.''இதுக்கே, இப்படிங்கறயே. சிட்டியில் உள்ள எல்லா 'டாஸ்மாக்' பாரிலும், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருத்தர் வசூல் பண்ணி, போலீசுக்கு கொடுக்கறாராம். அவர், ஸ்டேஷனுக்கு வந்தா, 'சிகப்பு கம்பள வரவேற்பு' கொடுக்காத குறையா, அவர்கிட்ட, அதிகாரிங்க சிலர், வளைஞ்சு, நெளியுறாங்களாம். சம்பளத்தை கவர்மென்கிட்ட வாங்கிட்டு, விசுவாசத்தை வேற எங்கேயோ காட்றது நல்லவா, இருக்கு,'' என்று ஆவேசமாக சொன்னாள் சித்ரா.''ஏங்க்கா... டென்ஷன் ஆறீங்க. இப்ப எல்லாம், எந்த 'ராஜா'கிட்ட போனலும், 'நீதி' கிடைக்காது,'' என்ற மித்ரா, ''கார்ப்ரேஷனில் நடந்த, 'விமன்ஸ் டே' கொண்டாட்டத்தில் ஏதோ பிரச்னையாமா?'' என்றாள்.''ஆமாம். அந்த 'பங்ஷனில்'ஒரு இன்ஜினியரை கூப்பிடலையாம். சமீபகாலமாக, ஆபீசில் அதிகார போட்டி நடக்குதாம். இதையெல்லாம், தெரிஞ்சுகிட்ட பெரிய அதிகாரி வழக்கம்போல,'கப்சிப்'ன்னு இருக்காராம்,''என்று விளக்கினாள் சித்ரா.''நானும் ஒரு மேட்டர் கேள்விப்பட்டேங்க்கா. நிதியாண்டு முடியப்போறதால, பல வார்டுகளில் அவசரமா, பல வேலைக்கு பூமி பூஜை நடத்தறாங்களாம். இல்லாட்டி, நிதி திரும்பி போயிருமாம். சரி, கிடைச்ச வரை லாபமுன்னு,. 'எப்டியோ, கணக்கு காண்பிச்சரலாம்,'ன்னு அதிகாரி்ங்க யோசிச்சு, களத்துல இறங்கிட்டாங்களாம். அதனால, கமுக்கமா, யாரையும் கூப்பிடாம, பூஜை போட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''சரி.. இதையும் கேளு. மாவட்டம் பூராவும், நடக்கும் அரசு தேர்வுகளை வீடியோ பதிவு செய்ய, 'மாஜி' அமைச்சர் மூலம், சசி ஆதரவு 'டிவி' நிருபருக்கு ஆர்டர் கொடுத்துட்டாங்களாம். அவரும், சத்தமில்லாம, இதுல, 'இன்கம்' பார்க்கிறார்,'' என்று சித்ரா சொன்னதும், ''அக்கா.. வெளியிலதான், கீரியும் பாம்பாட்டம் இருப்பாங்க. உள்ளுக்குள்ளே ஒண்ணாயிருக்காங்க. அவருக்கு, 'மாஜி' எதுக்கு, ஆர்டர் புடிச்சு கொடுக்கறாருன்னு, ஆளுங்கட்சிக்காரங்க, யோசிக்க ஆரம்பிச்சாட்டாங்க போல,'' என்றாள் மித்ரா.''அடடா... மணி ஏழு ஆயிடுச்சு. நான் கெளம்பறேன்,'' என்றவாறு, ஹெல்மெட் சகிதம், சித்ரா கிளம்பினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X