பொய் குற்றச்சாட்டு; கெஜ்ரிவால் மன்னிப்பு

Added : மார் 15, 2018 | கருத்துகள் (59)
Share
Advertisement
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

புதுடில்லி: பஞ்சாப் முன்னாள் அமைச்சர் மீது தான் சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை எனவும் அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பஞ்சாப் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது. பஞ்சாபில் நடந்து வரும் போதை பொருள் கலாச்சாரத்திற்கு பா.ஜ., மற்றும் அகாலிதள அரசை கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அகாலிதள அரசின் வருவாய் துறை அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா மீது நேரடியாக குற்றம்சாட்டினார். மேலும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு பதவிக்கு வந்தால், அகாலி தள தலைவர்களை சட்டை காலரை பிடித்து ஜெயிலில் தள்ளப்படுவர் எனவும் பேசினார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் மீது மஜிதியா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் அவரது குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை என தெரிவித்து மஜிதியாவிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :'' கடந்த காலங்களில் போதை பொருள் புழக்கம் தொடர்பாக நான் தங்கள் மீது வைத்த குற்றச்சாட்டிகள் அதாரமற்றவை என தற்போது நான் அறிகிறேன். அதில் நாங்கள் எந்த அரசியலும் செய்யவில்லை, ஊர்வலங்கள், பொதுகூட்டங்கள், டி.வி., பத்திரிக்கை பேட்டிகள், சமூகவலைதளங்களில் நான் தாங்கள் குறித்து கூறிய குற்றச்சாட்டிற்கு அம்ரிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள்.

னாங்கள் மீது நான் கூறிய அனைத்து குற்றச்சாட்டுக்களையும், திரும்ப பெறுகிறேன். இதனால் தாங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், தாங்களை சார்ந்தோருக்கும் ஏற்பட்ட மனகஷ்டத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் பா.ஜ., எம்.எல்.ஏ., மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
16-மார்-201811:46:15 IST Report Abuse
Nallavan Nallavan மோதியின் பதினைந்து லட்சம் என்ற பிரபலமான வாக்குறுதி தேர்தல் காலப் பேச்சு ...... அவரும் ஒரு அரசியல்வாதியே .... மோதியை மோசடி என்று விமர்சனம் செய்தவர்கள் கூட "இதற்காக மோதி மன்னிப்புக் கேட்காவிட்டாலும் வருத்தம் தெரிவிப்பது தான் நியாயம்" என்பது விந்தையாக இருக்கிறது .... ஆனால் கெஜ்ரி பேசியது அவதூறு ..... சட்டப்படி நடவடிக்கைக்குரியது ..... மோதியின் அந்த பதினைந்து லட்சம் வாக்குறுதி வீடியோவை வைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் "கனம் நீதிபதி அவர்களே .... மோசடி சொன்னபடி பைசா தரலை" என்று முறையிட்டால் கூட வழக்குத் தள்ளுபடி தான் ஆகும் ..... இரண்டுக்கும் இருக்கும் வேறுபாடுகள் கூட அறிவாளிகளுக்குப் புரியாதது மற்றொரு விந்தையே .....
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
16-மார்-201817:58:45 IST Report Abuse
Pannadai Pandianதேர்தல் நேரத்தில் அவதூறு பேசி பாஜக-அகாலி வெற்றிக்கே வேட்டு வைத்தது இந்த போர்ஜரிவால் பேச்சு. தேர்தல் தோல்விக்கு என்ன நஷ்ட ஈடு கொடுப்பார் ???...
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
16-மார்-201819:37:41 IST Report Abuse
Nallavan Nallavanஉங்க காதை கிட்ட கொண்டுவாங்க .... வேற யாருக்கும் சொல்லிடாதீங்க ..... பாஜக கூட்டணி பஞ்சாப் -ல தோத்ததுக்கு அதெல்லாம் சின்ன காரணம் ..... பாஜக கூட்டணி ஆட்சி பஞ்சாப் -ல உருப்படியா ஒண்ணும் சாதிக்கலை -ன்றதே உண்மை .......
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
16-மார்-201811:41:22 IST Report Abuse
Nallavan Nallavan கெஜ்ரிவால் அவதூறாகப் பேசிய சில நிமிடங்களில் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டிருந்தால் அவர் பரந்த மனதுள்ளவர் ...... நல்ல குணம் கொண்டவர் .... ஆனால் நடந்தது அவ்வாறில்லை ...... எழுத்து பூர்வமாக விளக்கமளித்து மன்னிப்புக் கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என்கிற நிலையில் அதைச் செய்திருக்கிறார் ..... இதைப் பல அறிவாளிகள் பரந்த மனது, நல்ல குணம் என்றெல்லாம் விமர்சித்துள்ளார்கள் .... அவர்களுக்கு நன்றி .....
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
16-மார்-201818:01:41 IST Report Abuse
Pannadai Pandianகொஞ்ச நாளைக்கு இவானா உள்ள தள்ளினாள், கொசுக்கடியால் இருந்து இந்த கோடையில் தப்பிக்கலாம்....நாட்டு மக்கள் கருதி, டெங்கு காய்ச்சர் தடுப்பதை கவனத்தில் கொண்டு, இவனை தனிமை சிறையில் அடையுங்க....கவனம் தேடி வேலையில கோடு போட்ட சட்டை, அரைக்கால் சட்டை மட்டும் போதும்....
Rate this:
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
16-மார்-201811:40:59 IST Report Abuse
Karuthukirukkan ஆம் ஆத்மீ கட்சியிடம் வழக்கு நடத்த பணம் இல்லை என்று கூறிவிட்டார்கள் .. இப்படி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் .. கால கொடுமை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X