பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா?
மோடி மீது சந்திரபாபு புகார்

அமராவதி : தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியதைப் போலவே, ஆந்திராவிலும் குழப்பத்தை ஏற்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கிறார், என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடு புகார் கூறியுள்ளார்.

Modi,Narendra modi,TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,நரேந்திர மோடி,மோடி


நெருக்கடி


ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி உள்ளது.

மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் மிகவும் முக்கியமான கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக ஏற்பட்டபிரச்னையால், மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை தரவலியுறுத்தி, தெலுங்கு தேசம், எம்.பி.,க்கள் பார்லிமென்டில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கட்சி, எம்.பி.,க்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், சந்திரபாபு நாயுடு பேசினார்; அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின், ஆளும், அ.தி.மு.க.,வில் பிரதமர் மோடி குழப்பத்தை ஏற்படுத்தினார். தற்போது அதுபோல், ஆந்திராவிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement


சூழ்ச்சி


ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகரும், ஜன சேனா தலைவருமான பவன் கல்யாண் ஆகியோரை எனக்கு எதிராக, பிரதமர் மோடி துாண்டி விடுகிறார். ஆந்திர மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றாமல், பிரித்தாளும் சூழ்ச்சியில் மோடி ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-மார்-201819:58:36 IST Report Abuse

Pasupathi Subbianஎன்னமோ தமிழகத்தில் தேர்தலில் நின்று வெற்றிபெற பி ஜெ பி முயலுவது போலவும், இங்கே வெற்றிபெற நடவடிக்கை எடுப்பது போலவும் நாம் நினைத்துக்கொண்டு உள்ளோம். அது தவறு. பி ஜெ பியை பொறுத்தமட்டில், தமிழகம் ஒரு எட்டாக்கை. , பிரதமரின் பேச்சு இங்கே எடுபடாது. எந்த ஒரு நல திட்டமும் இங்கே கமிஷன் இல்லை என்றால் நடைமுறை படுத்த முடியாது. இரு கழகங்களும் இங்கே ஆழமாக வேர்விட்டுள்ளன. மக்களுக்கு பி ஜெ பி என்றால் என்ன என்றே தெரியாத நிலை. இதெல்லாம் பி ஜெ பியின் தலைமைக்கு தெரியாதா என்ன. ஜெயலலிதா இறந்தபின் , தமிழகத்தில் , பன்னீரின் ஆட்சி , மக்களும் ஒப்புக்கொண்டனர். அடுத்த காட்சி, சசிகலா, அமைதியாக , வெளியே தெரியாமல் கிடைத்துக்கொண்டு இருந்த கமிஷனை , பொன்முட்டை இடம் வாத்தை அறுத்துப் பார்த்ததுபோல , தானே ஆட்சியை நேரில் நடத்த ஆசைப்பட்டார், அதிமுக தொண்டர்களின் அதிருப்தி, பண்ணீரின் கோபம் , அதிமுக கவிழும் நிலை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் , அடுத்து வரும் தேர்தல், அதிமுக தோல்வியை தழுவ ( பி ஜெ பி வெற்றி என்பது கொஞ்சமும் எண்ணம் இல்லை.) அடுத்து தேர்தல் கில்லாடிகள் திமுக வெற்றிபெறும். அதன் பின் பி ஜெ பிக்கு தமிழகத்தின் 36 எம்பீக்களின் ஆதரவு கிடைக்காது. அவர்கள் மூலம் மேல் சபை , எம்பீக்களின் எண்ணிக்கையும் குறையும், இதனை கருத்தில் கொண்டுதான், பன்னீர், பழனிசாமி இருவரும் ஒற்றுமையாக இருக்க போதிக்கப்பட்டது. இதில் பி ஜெ பி அடைந்த லாபம் எம்பீக்கள் ஆதரவு மட்டுமே. மற்றபடி அறுவடை தமிழக ஆளுநர்களுக்கு மட்டுமே.

Rate this:
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
16-மார்-201816:57:16 IST Report Abuse

இடவை கண்ணன் ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை...ஆந்திராக்கு சிறப்பு தகுதி கொடுத்திருந்தால் அமைதியாக இருந்திருப்பார்...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
16-மார்-201816:18:41 IST Report Abuse

Endrum Indianஏனென்றால் டாஸ்மாக் நாட்டை ஆண்டது தெலுகு இனம் தானே, அந்த கட்சியின் தாய்/தந்தை கட்சியான திராவிடமும் தெலுங்கு பலிஜா இனம் தானே. ஆகவே டாஸ்மாக் நாட்டில் நடப்பது தெலுங்கு நாட்டிலும் நடக்கின்றது. என்ன சந்திர பாபு ஓகேயா???

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X