பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறியது தெலுங்கு தேசம்

Updated : மார் 16, 2018 | Added : மார் 16, 2018 | கருத்துகள் (69)
Advertisement
Chandrababu Naidu, BJP Alliance,Andhra Special Status, பா.ஜ. கூட்டணி, தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, சந்திரபாபு நாயுடு, நம்பிக்கை இல்லா தீர்மானம் , ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ்,
Telugu Desam Party, Andhra Pradesh Special Status,  Non Confidence Resolution, YSR Congress,

புதுடில்லி : ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் மத்தியில் ஆளும் பா.ஜ., மீது அதிருப்தியில் உள்ளார் ஆந்திரா முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு. இதனால் தனது கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்களை சமீபத்தில் அவர் ராஜினாமா செய்ய வைத்தார். இந்த ராஜினாமாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் பா.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. விலகல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பார்லி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக எந்த கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை தான் ஆதரிக்க தயாராக உள்ளதாக சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varaghamurthy Ck - Chennai,இந்தியா
17-மார்-201800:51:12 IST Report Abuse
Varaghamurthy Ck ஆந்திர முதல்வர் ஆந்திராவை மட்டுமே பார்க்கிறார். ஆந்திரா இந்தியாவில் இருப்பதை மறந்து விட்டார் போலும். சிறப்பு அந்தஸ்து ஆந்திராவிற்கு கொடுத்தால் அது அண்டை மாநிலங்களை குறிப்பாக தமிழகத்தை பாதிக்கக்கூடும். இந்தியாவை ஒரு கூட்டு குடும்பம் போல நடத்த வேண்டும். இருக்கிறவர் இல்லாதவருக்கு கொடுத்து வழங்கினால் தான் அனைவரும் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக வாழ முடியும். இன்னொரு ஜம்மு காஷ்மீர் உருவாக வேண்டாமே
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
16-மார்-201820:05:05 IST Report Abuse
yaaro வேற வழியில்லை நாயுடுவுக்கு. இன்னும் ஐந்து வருடங்களில், அனைத்து மாநிலங்களிலும் பிஜேபி ஆளும் கட்சியாகவோ அல்லது பிரதான எதிர்கட்சியாகவோ வரும். இது தென்மாநிலங்களிலும் நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
16-மார்-201818:40:01 IST Report Abuse
balasubramanian இடைத்தேர்தல் தோல்வியை வைத்து நாயுடு சந்தர்ப்பவாத திடீர் முடிவெடுத்து விட்டார்.ஆட்சியை கவிழ்த்து சுய லாபத்திற்காக ஒரு தேர்தலை நடத்தி இந்நாட்டு மக்களின் தலையில் வரிச்சுமை ஏறும் துரோகத்தை செய்ய நினைக்கிறார் .இதுவே அவருக்கு பெரும் பின்னடைவைத்தரும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X