அரசியல் செய்தி

தமிழ்நாடு

தெலுங்கு தேசம் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் ஆதரவு

Updated : மார் 16, 2018 | Added : மார் 16, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 TDP Quits NDA, Opposition Opinion,Mamata Banerjee, தெலுங்கு தேசம் தீர்மானம், எதிர்க்கட்சிகள் கருத்து, பா.ஜ கூட்டணி, நம்பிக்கையில்லா தீர்மானம், மேற்கு வங்க முதல்வர் மம்தா, மல்லிகார்ஜூனா கார்கே, சீதாராம் யெச்சூரி , BJP Alliance, Non-confidence Resolution, West Bengal Chief Minister Mamata, Mallikarjuna Garghe, Sitaram Yechury,மம்தா பானர்ஜி, TDP pulls out of NDA, Break Janta Promise, NDA Quake, Telugu Desam Resolution, no-confidence motion

புதுடில்லி: பா.ஜ., கூட்டணியிலிருந்து தெலுங்கு தேச கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமுல், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதனை ஆதரித்து ஓட்டளிப்போம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே சந்திரபாபு முடிவு குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்து:
மேற்கு வங்க முதல்வர் மம்தா: பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகுவது என்ற தெலுங்கு தேசத்தின் முடிவை வரவேற்கிறேன். இந்த முடிவு நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்ற உதவும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், ஆரம்பம் முதலே ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற முடிவை நாங்கள் ஆதரித்து வருகிறோம். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் போது அரசின் தோல்வி குறித்து பேச வேண்டும். இது தொடர்பாக பலரிடம் பேசி வருவதாக தெரிவித்தார்.

ஆந்திர மாநில காங்., தலைவர் ரகுவீரா ரெட்டி கூறுகையில், லோக்சபாவில் தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கும் எனக்கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சி பொது செயலர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், பா.ஜ., அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மார்க்சிஸ்ட் ஆதரிக்கும். சிறப்பு அந்தஸ்து என்ற உறுதிமொழியை நிறைவேற்றாமல் ஏமாற்றியது மன்னிக்க முடியாதது என்றார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தியாகி கூறுகையில், பெரிய கூட்டணியில் சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆபத்து இல்லை என்றார்.

பா.ஜ.,வின் நரசிம்மராவ் கூறுகையில், தெலுங்கு தேசம் கட்சிக்கு 2019ல் தோல்வி கிடைக்கும். அரசுக்கு எதிராகவும் தெலுங்கு தேச கட்சிக்கு எதிராகவும் மக்கள் கோபமடைந்துள்ளனர் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
17-மார்-201805:30:28 IST Report Abuse
Gnanam எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஒரு கட்சி உருவாக்குங்கள். ஆக, நாட்டில் இரண்டே கட்சிகள்தான். மக்களுக்கும் வாக்கு பதிவு செய்ய திண்டாடமிருக்காது. அதுவா அல்லது இதுவா என்று நல்ல முடிவு எடுக்கலாம். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kumz - trichy,இந்தியா
17-மார்-201801:36:01 IST Report Abuse
Kumz மும்தா பானர்ஜி எப்படியோ மேற்குவங்கத்தை முசுலிம் நிலமாக்கிவிட்டீர் இனி முழு இந்தியாவையும் கலவர பூமியாகணும்னு எதிர் பார்க்குற
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-மார்-201800:53:34 IST Report Abuse
Mani . V ம்.......தமிழ்நாட்டிலும்தான் இரண்டு முதுகெலும்பே இல்லாத ஜென்மங்கள் இருக்கிறதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X