அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரஜினி - கமல் மோதலை தடுக்க வாசன் முயற்சி

காவிரி விவகாரத்தில், நடிகர் ரஜினி, தன் நிலைப்பாட்டை தெரிவிக்காததை, கமல் கிண்டலடித்தார். அதற்கு பதிலடியாக, 'நான் இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆக வில்லை' என, ரஜினி கூறினார்.

ரஜினி,கமல்,மோதலை, தடுக்க,வாசன் முயற்சி


இருவருக்கும் இடையே, மோதல் போக்கு வளர்வதை விரும்பாத வாசன், இருவரையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல், கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.


அப்போது, கமலிடம், நிருபர்கள், 'நடிகர் ரஜினி, காவிரி மேலாண்மை வாரியம் உட்பட, பல விஷயங்களில் கருத்து சொல்வதில்லையே' என, கேள்வி எழுப்பினர். அதற்கு கமல், 'இதுமட்டுமல்ல, பல விஷயங் களில், அவர் அப்படித் தான் இருக்கிறார்' என, கிண்டலாக

பதிலளித்தார்ரஜினியை சீண்டும் விதமாக, கமல் பேசியது, ரஜினி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'கமலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்' என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கள், இமயமலையில் இருந்த ரஜினியிடம் தெரிவித்தனர்.


உடனே,ரஜினி, 'நான், என் கட்சி பெயரை அறிவிக்க வில்லை; இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை. தற்போது, ஆன்மிக பயணம் மட்டுமே வந்துள்ளேன். அரசியல் பேச வேண்டிய களம், இதுவல்ல. மனித வாழ்வின் நோக்கமே, தன்னை உணர்வது தான். எனக்குள் இருப்பதை உணர, நான் ஆன்மிக வழியில் பயணிக்கிறேன்' என்றார்.


கமலுக்கு, ரஜினி சொன்ன பதில்,அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்தது. இதற்கிடையில், ரஜினிக்கும், கமலுக்கும் இடையில், இதுபோன்ற மோதல் போக்கு தொடர்ந்து விடக் கூடாது என, அவர்களின் அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பராக திகழும், த.மா.கா., தலைவர், வாசன் விரும்புகிறார்.


ரஜினியும், கமலும், 'சிஸ்டம் சரியில்லை' என, ஆளுங்கட்சியை எதிர்த்து வருகின்றனர். வாசனும், ஆளுங்கட்சியை விமர்சித்து, ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். த.மா.கா.,வுக்கு, மாநில அளவில்,

Advertisement

400 நிர்வாகிகளும், 78 மாவட்ட தலைவர்களும், 4,000 ஊராட்சி நிர்வாகிகளும் உள்ளனர்.
நிர்வாக கட்டமைப்பில், ரஜினி, கமல் ரசிகர் மன்றங்களை விட, வாசனுக்கு ஆட்கள் இருப்பதால், அவருடன் கமலும், ரஜினியும் கூட்டணி அமைக்க வேண்டும் என, த.மா.கா., தரப்பில் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அதற்காக, இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அவர் விரும்புகிறார்.


இதையடுத்து, கமல், ரஜினி இடையே சமரச முயற்சியில், வாசன் இறங்கி உள்ளார். வாசன் சமரச முயற்சியை, ரஜினி, கமல் ஏற்பரா அல்லது தி.மு.க., - அ.தி.மு.க.,வை போல எதிரும் புதிருமாக செயல்படுவரா என்பது, விரைவில் தெரிய வரும். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மார்-201821:16:00 IST Report Abuse

ushadevanநாங்களும் தலைவர்கள் தான் என்று ஆவேசமாய் அறிக்கை விடும் தலைவர்களில் ஒருவராக உங்களை எதிர்பார்க்கவில்லை சார். தந்தைக்கு நிகராக இல்லை ஒருபடி மேலாக வரவேண்டியவர்கள் நீங்கள்.

Rate this:
Renga Naayagi - Delhi,இந்தியா
21-மார்-201809:47:22 IST Report Abuse

Renga Naayagiதந்தையை விட உயரமும் பருமனும் இவருக்கு அதிகம் ...

Rate this:
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
18-மார்-201818:57:55 IST Report Abuse

Sridhar Rengarajanதமிழ்நாட்டு அரசியலில் இருக்கும் ஒன்றிரண்டு நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர் ஜி.கே.வாசன். க்ளீன் இமேஜ் கொண்டவர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மன்னார்குடி மாஃபியா, அதைவிட பத்து மடங்கு பெரிய திருக்குவளை மாஃபியா, அதுக்கு இணையான சிவகங்கை மாஃபியாக்களையெல்லாம் இனி தமிழக மக்கள் தலைதூக்கவே விடக்கூடாது. கம்யூனிஸ்ட், பாஜக வைப்பற்றி கவலை இல்லை. அது நோட்டாவோட போட்டி போடும் கட்சிகள். எதுக்கும் பிரயோஜனமில்லாத வாய்சவடால்களான வைகோ, சீமான், ராமதாஸ், வேல்முருகன், திருமாவளவன், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்ற பஃபூன்களால் எந்த மாற்றமுமிருக்காது. இன்றைய நிலையில் கமல்+ரஜினி+ வாசன் கூட்டணி அமைத்தால் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய அதிர்வலை உண்டாகும்.

Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
18-மார்-201814:02:01 IST Report Abuse

a natanasabapathyVaasane aatchiyil irunthapothu thamizharkalukku nee yethaiyune seyyavillai ippothum yethuvum seyyaamal koothaadikalukkul samarasam seyyappokiraai ithupol thevaiyaa

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X