பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கட்டாயம்!
அரசு பணிகளில் சேர்வோர்
5 ஆண்டு ராணுவ சேவை செய்வது...

புதுடில்லி,: ராணுவம் மற்றும் இதர படைப் பிரிவுகளில் பணியாற்ற, தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கையில் கடும் பற்றாக்குறை நிலவுவதால், மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேரும் இளைஞர்கள், ஐந்தாண்டு ராணுவத்தில் பணியாற்றுவதை, கட்டாயமாக்க வேண்டும் என, பார்லி., நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.


இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமான படைகளில் பணியாற்றும் வீரர்களின் எண்ணிக் கையில், நீண்ட காலமாகவே பற்றாக்குறை இருந்து வருகிறது.இதை சமாளிக்க, ராணுவ அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து, ராணுவ அமைச்சகத்தின், பார்லி., நிலைக்குழு, சமீபத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.


அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நம் ராணுவத் தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. இதை சமாளிக்க, மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேரும்,இளைஞர்கள், ராணுவத்தில் ஐந்தாண்டு

பணியாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற பரிந்துரையை, ராணுவ அமைச்சகத்திடம், மத்திய அரசு முன்வைத்தது.

அரசு பணி, ராணுவ சேவை, கட்டாயம்


இந்த பரிந்துரையை, மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறையினருக்கு, ராணுவ அமைச் சகம் அனுப்பி உள்ளது. இதுபற்றி, அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம். ஆள் பற்றாக்குறை பிரச்னையை, பணியாளர் மற்றும் பயிற்சி துறை யிடம், சரியான முறையில் ராணுவ அமைச்சகம் முன் வைத்ததாக தெரியவில்லை.

ராணுவ சேவை யில், இளம் அரசு ஊழியர்கள் பணியாற்றுவதை கட்டாயமாக்க தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கபட வேண்டும். அப்போது தான், ராணுவத்தின் பல்வேறு பிரிவு களில் நிலவும்பற்றாக்குறையை எதிர்கொள்ள

Advertisement

முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முப்படைகளிலும்பற்றாக்குறைராணுவத்தில், 7,679 அதிகாரிகள், 20,185 இள நிலை அதிகாரிகள் பணி இடங்கள் காலியாக உள்ளன. கடற்படையில், 1,434 அதிகாரிகள், 14,730 மாலுமிகளுக்கான பணி இடங்கள் காலியாக உள்ளன.ராணுவத்தில், 12.5 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில், 11.5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். 70 ஆயிரம் பேர் பணியாற்ற வேண்டிய கடற்படையில், 57 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். 1.5 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய விமானப் படையில்,1.2 லட்சம் வீரர்கள் உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RamRV -  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-201817:04:21 IST Report Abuse

RamRVசரியான முடிவு. ஆனால் 5 வருடங்கள் அதிகம். 3 வருடங்கள் சரியாக இருக்கும்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
18-மார்-201821:35:30 IST Report Abuse

K.Sugavanamஅடுத்து புகும் இடம் ராணுவமோ?சபாஷ்...

Rate this:
18-மார்-201821:34:55 IST Report Abuse

susainathanbecause now these days nobody interested to joining for armies compared to last 5years its totally lost in armies strength also

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X