பதிவு செய்த நாள் :
தேர்தல், 'பாண்டு' ரூ.222 கோடிக்கு விற்பனை :
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தகவல்

புதுடில்லி: அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், கறுப்பு பணத்தை தடுக்க வும், மத்திய அரசு அறிமுகப்படுத்திய, தேர்தல், 'பாண்டு' எனப்படும், பத்திரங்கள், 222 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக, பார்லி., யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பாண்டு, ரூ.222 கோடி, விற்பனை


தேர்தலின்போது, அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த, கடந்த ஆண்டு, மத்திய பட்ஜெட்டில், தேர்தல் 'பாண்டு'களை, நிதி அமைச்சர்,

அருண் ஜெட்லி அறிமுகப்படுத்தினார்.ஒவ்வொரு ஆண்டும், பொதுத் தேர்தல் நடக்கும் சமயத்தில், மத்திய அரசு குறிப்பிடும், 30 நாட்களிலும், இந்த தேர்தல் பாண்டுகள் விற்பனை செய்யப்படும்.


ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில், நன்கொடை வழங்க விரும்புவோர், தங்களது முழு விபரங்களை அளித்து, பாண்டுகளை வாங்கலாம்.முந்தைய தேர்தலில், 1 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகளை பெற்ற அரசியல் கட்சிகளுக்கு, இந்த பாண்டுகளை நன்கொடையாக கொடுக்கலாம். நன்கொடை வழங்குபவரின் விபரம் ரகசியமாக வைக்கப்படும்.


அதே நேரத்தில், கட்சிகளுக்கு வரும் நன்கொடை களின் விபரம் தெரிய வரும்.பாண்டுகள் கிடைத்த, 15நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட கட்சியினர், கட்சியின் அதிகாரபூர்வ வங்கிக் கணக்கில் செலுத்தி, பணமாக மாற்றிக் கொள்ளலாம்; அதன் பின் மாற்ற இயலாது.இதற்கான அரசாணை, கடந்த ஜனவரி யில் வெளியிடப்பட்டதையடுத்து, முதற்கட்ட

Advertisement

தேர்தல் பாண்டு, மார்ச், 1 - 10 வரை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் முக்கிய கிளை களில், விற்பனை செய்யப்பட்டது.


தேர்தல் பாண்டு விற்பனை குறித்து, லோக்சபா வில் கேட்க பட்ட கேள்விக்கு,மத்திய நிதிதுறை இணை அமைச்சர், பொன்.ராதா கிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்த பதிலில், மார்ச், 9 வரை, 222 கோடி ரூபாய்க்கு, தேர்தல் பாண்டுகள் விற்பனை யானதாக தெரிவித்து உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-மார்-201810:01:49 IST Report Abuse

Pugazh Vஉடனே தலித் மாயாவதி என்று ஜாதி அரசியல் பேசுவது பிஜேபி தான். 222 கோடி செலுத்தி யார்யார் வாங்கினார்கள், பொதுத் தேர்தல் எதுவும் இல்லாத சமயத்தில் எதுக்கு வாங்கினார்கள். 30 நாளில் கட்சிகள் அதை பணமாக மாற்றினால் அதனால் அரச/ மக்கள் பெறும் நன்மை என்ன. ஒரு கட்சி100 கோடி பாண்டு பணமாக மாற்றினால் என்ன பண்ணுவாங்க? யார் குடுத்ததுன்னு கண்டு பிடிக்க முடியும். சரி கண்டு பிடிச்சுட்டு..??? ஒரு புண்ணாக்கும் இல்லை. ஏன் தான் இப்படி மக்களை ஏமாற்றி கிட்டே இருக்கிறார் களோ? இதுக்கு ஜால்ரா போட வேற ஒரு கும்பல்

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
18-மார்-201808:56:10 IST Report Abuse

ஜெயந்தன்222 கோடியில் பிஜேபிக்கு மட்டும் 220 கோடி வந்திருக்கும்..

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மார்-201808:26:44 IST Report Abuse

Kasimani Baskaranநேர்மையாக செயல்படுத்தினால் நல்லது... ஜெட்லீ ஏற்கனவே காங்கிரஸ் மயக்கத்தில் இருப்பவர்...

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X