அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடி அரசுக்கு எதிரான தீர்மானம் அ.தி.மு.க.,வின் நிலை என்ன

Added : மார் 19, 2018
Advertisement

சென்னை: ''மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக, அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன என்பதை, கட்சி முடிவு செய்யும்,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:காவிரி பிரச்னைக்காக, தமிழக உரிமையை காக்க, அ.தி.மு.க., பல்வேறு போராட்டங்களை நடத்திஉள்ளது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைநடைமுறைப்படுத்த, ராஜினாமாவை தவிர, மற்ற வகைகளில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில், லோக்சபாவில், தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக, அ.தி.மு.க., போராட்டம் நடத்தி வருகிறது.ஆனால், மத்திய அரசில், 17 ஆண்டுகளாக, தி.மு.க., அங்கம் வகித்த போது, காவிரி விவகாரத்தில், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன என்பதை, கட்சி முடிவு செய்யும்.கட்சியை விட்டு நீக்கப் பட்டுள்ள, கே.சி.பழனிசாமி, தன்னை நீக்கும் அதிகாரம் பழனிசாமி, பன்னீர்செல்வத்திற்கு இல்லைஎன,தெரிவித்து உள்ளார்.அவர், அப்படி பேசக்கூடாது.அவர்கள் இருவருக்கும், கட்சியை வழி நடத்தும் அதிகாரத்தை, கட்சியின்பொதுக்குழு வழங்கியுள்ளது.கே.சி.பழனிசாமி மன்னிப்பு கேட்டால், அதை பரிசீலிக்கலாம். ஆனால், அவர், உள்நோக்கத்தோடு பேசியிருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது.தமிழக பட்ஜெட்டில், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதை, 'நகல்' என, கமல் குறிப்பிட்டுள்ளார்; அவர், பார்வையில் குறைபாடு உள்ளது.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X