லிங்காயத் தனி சமுதாய விவகாரத்தில்...நெருக்கடி : அமைச்சரவையில் இன்று முதல்வர் முடிவு| Dinamalar

லிங்காயத் தனி சமுதாய விவகாரத்தில்...நெருக்கடி : அமைச்சரவையில் இன்று முதல்வர் முடிவு

Added : மார் 19, 2018 | கருத்துகள் (2)

பெங்களூரு: 'வீர சைவம் - லிங்காயத் ஒன்று தான்; அதை பிரிக்கக் கூடாது' என, மடாதிபதிகள் குழுவினர் , மாநில அரசிடம் அன்பான எச்சரிக்கை விடுத்து சென்றதை தொடர்ந்து, தனி லிங்காயத் சமுதாயம் ஏற்படுத்தும்படி, சில மடாதிபதிகள் வலியுறுத்துவதால், முதல்வர் சித்தராமையா, இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறார். தேசிய கட்சியான காங்கிரஸ், மாநில கட்சியான ம.ஜ.த., தலைவர்கள், 'தங்களுடையது மதச்சார்பற்ற கட்சி' என கூறிக் கொள்கின்றனர். ஆனால், கர்நாடக சட்டசபை தேர்தலில், ஜாதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். குறிப்பிட்ட ஜாதிகளின் வாக்காளர்களை ஈர்க்க, கட்சி மேலிடங்கள் திட்டமிடுகின்றன. இவ்விஷயத்தில், ம.ஜ.த.,வை விட, பா.ஜ.,வும், காங்கிரசும் ஒரு படி முன்னே உள்ளன.
ஜாதி ஓட்டுகள் : பண பலம், ஆள் பலம் இருந்தாலும், ஜாதி என்பது உணர்வுப்பூர்வமான விஷயம். ஜாதிகளை ஒருங்கிணைத்து, ஓட்டு வங்கியை அதிகரித்துக்கொள்வதில், பா.ஜ., உள்ளிட்ட மூன்று கட்சிகளுமே ஆர்வம் காண்பித்து வருகின்றன.மாநில அரசு, தன் திட்டங்களின் பலன், நான்கு கோடி மக்களை சென்றடைந்துள்ளது என பெருமை பேசிக்கொண்டாலும், அதனால் மட்டுமே, ஓட்டுகளை அள்ள முடியாது என்பதை உணர்ந்தே தான், ஜாதி அரசியலை முதல்வர் சித்தராமையா கையில் எடுத்துள்ளார்.பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் தலைவர் என கூறிக்கொள்ளும் அவரை, பணிய வைக்கும் நோக்கில், பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் ஓட்டுகளை, தன் வசம் ஈர்க்க, பா.ஜ., திட்டம் வகுத்தது.அது மட்டுமின்றி, காங்கிரஸ் ஓட்டு வங்கியாக திகழும், சிறுபான்மையினர், தலித் ஓட்டுகள் மீதும், பா.ஜ., கண் வைத்தது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ.,வின் ஓட்டு வங்கியாக திகழும் லிங்காயத் ஓட்டுகளை, 'கை' வசமாக்க, காங்கிரஸ் தந்திரம் வகுத்தது.இதை மனதில் கொண்டே, லிங்காயத் சமுதாயத்துக்கு தனி அங்கீகாரம் அளிக்க, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய, முதல்வர் முடிவு செய்திருந்தார்.கமிட்டி சிபாரிசுஇதற்காக, நீர்ப்பாசனத்துறை அமைச்சர், எம்.பி.பாட்டீல் உட்பட, பலரை பகடைக்காயாகவும் முதல்வர் பயன்படுத்தினார்.லிங்காயத்தை தனி சமுதாயமாக அறிவிப்பது பற்றி ஆய்வு நடத்த, முதல்வர் அமைத்திருந்த நீதிபதி ராம் மோகன் தாஸ் தலைமையிலான கமிட்டி அளித்துள்ள அறிக்கையில், லிங்காயத் தனி சமுதாயமாக அறிவிக்கும்படி, சிபாரிசு செய்தது.ஆனால், இவ்விஷயத்தில், அமைச்சர்களுக்குள்ளேயே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால், முதல்வருக்கு நெருக்கடி அதிகரித்தது.இந்த நிலையில், வாரணாசியின் காசி மடாதிபதி தலைமையிலான குழுவினர், 16ம் தேதி, முதல்வரை சந்தித்து, 'எக்காரணத்தை கொண்டும், லிங்காயத் தனி சமுதாயமாக அறிவிக்கும்படி, சிபாரிசு செய்யக்கூடாது. ஒரு வேளை, அவ்வாறு செய்தால், பெரும் போராட்டம் நடத்துவோம்' என, எச்சரித்தனர்.இந்த நிலையில், முதல்வர் சித்தராமையாவை, கிருஷ்ணா அலுவலகத்தில், நேற்று சந்தித்த, லிங்காயத் மடாதிபதிகள் சிலர், சமுதாயம் தொடர்பான அறிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்பி, அதை செயல்படுத்தும்படி, கோரிக்கை விடுத்துஉள்ளனர்.'தன் திட்டம் தனக்கே, 'பூமராங்க்' ஆக மாறிவிட்டதே' என, முதல்வர், அதிர்ச்சியடைந்துள்ளார்.இது தொடர்பாக, இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், விவாதித்து, முடிவு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
16 சதவீத வாக்காளர்களுக்கு ஐஸ் : கர்நாடகாவில், காங்கிரஸ், 34 சதவீதம், பா.ஜ., 30 சதவீதம், ம.ஜ.த., 20 சதவீதம் ஓட்டு வங்கி வைத்துள்ளன. பல்வேறு சமுதாயங்களை சார்ந்த, 16 சதவீத வாக்காளர்கள், எந்த கட்சியுடனும், தங்களை அடையாளப்படுத்தவில்லை.இந்த ஓட்டுகளை ஈர்ப்பவர்களுக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டே, அரசியல் கட்சியினர் போட்டி போட்டு, பணம், மது, பரிசுப் பொருட்கள் வழங்கி, ஓட்டுகளை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X