கல்யாண ஏற்பாடு ஜோரு; காத்திருக்குது ஊரு!

Added : மார் 20, 2018
Share
Advertisement
அ ன்றைய தினம் அதிகாலை, ரேஸ்கோர்ஸ் வட்டச்சாலையில், சித்ராவும், மித்ராவும் 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தனர்.'காஸ்மோ பாலிடன்' கிளப்பை தாண்டியபோது, அங்கிருந்த 'ஜிம்' தரைமட்டம் ஆகியிருந்ததை பார்த்து, ''என்னப்பா இது... யார் செஞ்ச வேலை'' என, சித்ரா கொந்தளித்தாள்.''ஆளுங்கட்சிக்காரங்க செய்ற அட்டகாசம் கொஞ்ச நஞ்சமில்லை. ஏரியாவுக்குள்ள 'தாதா' மாதிரி சுத்திக்கிட்டு
கல்யாண ஏற்பாடு ஜோரு; காத்திருக்குது ஊரு!

ன்றைய தினம் அதிகாலை, ரேஸ்கோர்ஸ் வட்டச்சாலையில், சித்ராவும், மித்ராவும் 'வாக்கிங்' சென்று கொண்டிருந்தனர்.'காஸ்மோ பாலிடன்' கிளப்பை தாண்டியபோது, அங்கிருந்த 'ஜிம்' தரைமட்டம் ஆகியிருந்ததை பார்த்து, ''என்னப்பா இது... யார் செஞ்ச வேலை'' என, சித்ரா கொந்தளித்தாள்.''ஆளுங்கட்சிக்காரங்க செய்ற அட்டகாசம் கொஞ்ச நஞ்சமில்லை. ஏரியாவுக்குள்ள 'தாதா' மாதிரி சுத்திக்கிட்டு இருக்காங்க. போலீஸ்காரங்க உதவியோடு, இடிச்சு தள்ளியிருக்காங்க. இந்த மாதிரி 'வண்டு' முருகன்களை கணக்கெடுத்து, காலி செஞ்சாங்கன்னா, ஊரு நல்லா இருக்கும்,'' என்றாள்மித்ரா.''அதுக்கெல்லாம்... நம்மூரு போலீஸ்காரங்க லாயக்கில்லைப்பா,'' என, நொந்து கொண்டாள் சித்ரா.''ஏன்க்கா... இப்படிச் சொல்லிட்டீங்க...'' என்ற மித்ராவிடம், ''செல்வபுரத்துல ஒரு பிரச்னை நடந்துருக்கு. விசாரிக்க போன லேடி எஸ்.ஐ.,யையும் தடுத்திருக்காங்க. அதனால, அரசாங்க ஊழியரை பணி செய்ய விடாம, வழக்கு பதிஞ்சிருக்காங்க. பிரச்னைக்குரிய ஆள் யாருன்னு போலீஸ்காரங்ககண்டுபிடிச்சிட்டாங்க. அவரை கைது செஞ்சு, 'உள்ளே' தள்ளாம, முன்ஜாமின் வாங்கிக்கிங்கன்னு, கெஞ்சிக்கிட்டு இருக்காரு, அங்க இருக்கற இன்ஸ். அவரோ, முடிஞ்சா கைது செஞ்சு பாருங்கன்னு, 'தில்'லா ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்காரு... அந்தளவுக்கு போலீஸ்காரங்களுக்கு மரியாதை இல்லாமப் போச்சு...'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா... நானும் ஒரு விழாவுல, நேர்ல பார்த்தேன். வி.ஐ.பி.,க்கு உயர் பதவியில இருக்கற அந்த அதிகாரி, 'சல்யூட்' அடிச்சிருக்காரு. திரும்ப 'சல்யூட்' அடிக்கல; மரியாதைக்குக் கூட சிரிக்காம, கண்டுக்காம போனாருக்கா,'' என்றாள் மித்ரா.''அரசியல்வாதிகளிடம் வளைஞ்சு போனா, இப்படித்தாம்பா. அனுபவ படணும்'' என்ற சித்ரா, ''திருமணத்துக்கு தடபுடலா ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்களாமே,'' என்றாள்.''ஆமாக்கா... ஜெ., பிறந்த நாளையொட்டி, 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப் போறாங்க. தொண்டாமுத்துார் யூனியன் முழுக்க அழைப்பு விடுத்துருக்காங்க. இந்த யூனியன்ல மட்டும், 88 ஆயிரம் குடும்பம் இருக்கறதா கணக்கெடுத்து இருக்காங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேட்டி, சேலை, தாம்பூலத்தட்டு கொடுத்து, அழைப்பு கொடுத்திருக்காங்க. 70 விதமான சீர் வரிசை கொடுக்கப் போறாங்களாம். ஊரே இதப்பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கு,'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் சரி... தாமரை கட்சியிலும் 'கசமுசா' நடந்திருக்கும் போலிருக்கே,'' என இழுத்தாள் சித்ரா.''அரசியல் கட்சிகள்ல, பல கோஷ்டிக இருக்கத் தானே செய்யும். மாநில பொறுப்புல இருக்கற கட்சிக்காரர் பொண்ணுக்கு அன்னுார்ல கல்யாணம் நடந்துச்சு. தமிழ் 'இசை'யம்மா வந்திருந்தாங்க. 20 அடி துாரத்துல, தொண்டாமுத்துார்காரங்க வந்திருக்காங்க. ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல மேடைக்கு கூப்பிட்டு இருக்காங்க. தலைமை பொறுப்பை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கற அந்தம்மா, மேடை ஏறாம தவிர்த்திருக்காங்க. 'இசை'யம்மா போனதுக்கப்புறம், ஆதரவாளர்களோடு மேடையேறி, வாழ்த்துச் சொல்லியிருக்காங்க,'' என்ற மித்ரா, ''உடன்பிறப்புக மத்தியிலும் கோஷ்டி பிரச்னை வெடிச்சுக்கிட்டு இருக்கு; இவங்க, ஆளுங்கட்சிக்காரங்கள எதிர்த்து, எப்படி ஜெயிக்கப் போறாங்களோ...'' என, அங்கலாய்த்தாள்.''ஏம்ப்பா... என்னாச்சு...'' என்ற சித்ராவிடம், ''பெரியநாயக்கன் பாளையத்துல, முக்கிய பொறுப்புல ரெண்டு பேரு இருக்காங்க. கறுப்புத்துண்டு கட்சியில இருந்தப்ப, இணை பிரியா நண்பர்களா இருந்தாங்க. தி.மு.க.,வுக்கு வந்ததும், முட்டல் மோதல் அதிகரிச்சிடுச்சு. சென்னையில நடந்த நேர்காணல்ல புகார் மழை வாசிச்சிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தனித்தனியா கொடியேத்தி இருக்காங்க... 'பத்மாலயா'வுக்கும், அறிவரசுக்கும் இதே வேலையாப் போச்சு...'' என புலம்பினாள் மித்ரா.''நீ... வேற... ஆளுங்கட்சியிலும் இப்படித்தாம்ப்பா சண்டை போடுறாங்க... மாச்சம்பாளையத்துல வச்சிருந்த 'பிளக்ஸ் பேனர்'ல ஒருத்தரோட கண்ணை நோண்டியிருக்காங்க... மறுநாளே புதுசா 'பிளக்ஸ்' வச்சிருக்காங்க.அன்னைக்கு இரவே மறுபடியும் நோண்டியிருக்காங்க... விடாப்பிடியா இன்னொரு 'பிளக்ஸ்' தயாரிச்சு மாட்டியிருக்காங்க. அதையும் கிழிச்சிட்டாங்க... 'பெருமாளுக்கே' இப்படியான்னு, ஊருக்குள்ள கொந்தளிப்பா இருக்கு. பொம்பள பேர்ல ஒளிஞ்சிருக்கிற 'மாஜி' செய்யற வேலைன்னு,'' புட்டு புட்டு வைத்தாள் சித்ரா.''மாஜின்னு சொன்னதும், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது... ரெண்டெழுத்து இனிசியல் காரரு, சிட்டி கூட்டுறவு சொசைட்டியில தலைவரா இருக்காரு... அங்க இருக்கற ஊழியர்களை நிரந்தரமாக்குறேன்னு சொல்லி, பல 'ல'கரம் வசூலிச்சிருக்காரு. இன்னும் ரெண்டு மாசத்துல, இவரோடு பதவி போயிடும். வேலை நிரந்தரமாகுமா; கொடுத்த பணம் அவ்ளோ தானான்னு, பலரும் புலம்பிக்கிட்டு இருக்காங்க... '' என்ற மித்ரா, ''கவர்மென்ட் ஆஸ்பத்திரியில உயர் பொறுப்புல இருக்கறவர, ஒரு டாக்டர், விசாரணைக்கு வரவழைச்சிட்டாராமே...'' என, இழுத்தாள்.''ஆமாம்ப்பா... கேஷூவாலிட்டியில ரொம்ப வருஷமா வேலை பார்த்துக்கிட்டு இருந்த டாக்டர, அவசர விபத்து சிகிச்சை பிரிவுக்கு மாத்தியிருக்காங்க. இதை ஏத்துக்காத அந்த டாக்டர், குடைச்சல் கொடுத்துக்கிட்டே இருந்திருக்காரு... எல்லாத்தையும் சமாளிச்சிருக்காரு உயரதிகாரி. கடைசியா, மரியாதை இல்லாம நடத்துனாருன்னு மனித உரிமை ஆணையத்துல புகார் கொடுத்திருக்காரு. கமிஷன் விசாரிச்சுக்கிட்டு இருக்கு. நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கறத விட்டுட்டு, தேவையில்லாம சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.''நம்மூருக்கு மறுபடியும் கவர்னர் வர்றாரே... பூகம்பம் வெடிக்குமா,'' என, கொக்கி போட்டாள் மித்ரா.''இதுக்கு முன்னாடி, பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்தாரு. அதுக்கு அப்புறம்தான், விசாரணை நடத்தி, கைது நடவடிக்கை நடந்திருக்கு. ஜாமினில் வெளியே வந்திருக்கிற துணை வேந்தரை பலரும் நேர்ல சந்திச்சு பேசுறாங்க. நெறைய்ய பைல்கள்ல கையெழுத்து போடுறாராம். அவரோட வீட்டுக்கு யார் யார் வந்துட்டு போறாங்கன்னு, போலீஸ்காரங்க உளவு பார்த்துக்கிட்டு இருக்காங்க. இப்ப, மறுபடியும் கவர்னர் வர்றாரு. இனி, யார் யார் சிக்குவாங்கன்னு தெரியல. புது துணைவேந்தர் நியமிக்க அறிவிப்பு வந்தாலும் வரும்னு, பேராசிரியர்கள் மத்தியில பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''அதெல்லாம் சரி... குப்பை கெடங்குல தீப்பிடிச்சது தொடர்பா, மூணு மணி நேரம் விசாரணை நடத்துனாங்களாமே,'' என்ற மித்ராவிடம், ''எப்படிப்பா... ஒனக்கு மட்டும் விஷயம் ஒடனே கெடைச்சிடுது'' என 'சர்ட்டிபிகேட்' கொடுத்த சித்ரா, ''குப்பை கிடங்கு விவகாரத்தை, 'டைகர்' பிஸ்கட் அதிகாரி விசாரிக்கிறாரு. விசாரணை குழுல, அஞ்சு அதிகாரிங்க இருக்காங்க. நான்கு அதிகாரிங்க மட்டும், வெள்ளலுாரர் போயி, கிடங்கு பொறுப்பாளரான ரவிகண்ணனை, ஒரு அறையில ஒக்கார வச்சு, மூணு மணி நேரம் கேள்வி மேல கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துட்டாங்க...''ஒரு அதிகாரி மட்டும் போகலை. அவருதான் வில்லங்கமானவரு. குப்பை கிடங்கு அதிகாரிக்கும், இவருக்கும் ஏழாம் பொருத்தம். இவர் மட்டும் தனியா போயி, ஆய்வு செஞ்சிருக்காரு... அறிக்கையில முறைகேடுகள புட்டு புட்டு வைப்பாங்களா அல்லது, பூசி மெழுகி காப்பாத்துவாங்களான்னு தெரியலை'' என்றாள்.''ஒரு அதிகாரிய 'சஸ்பெண்ட்' செஞ்சதா கேள்விப் பட்டேனே...'' என்றாள் மித்ரா.''குப்பையில பல கோடி சம்பாதிக்கிறாங்க. தங்க முட்டையிடும் துறையா வச்சிக்கிறாங்க. குப்பை கிடங்கு தீப்பிடிக்கறது இன்னைக்கு நேத்து இல்ல... பல வருஷமா நடக்குது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஒரு வேலை சொல்லியிருக்காரு. அதை செய்யலை. அவரு, வி.ஐ.பி.,யிடம் போட்டுக் கொடுத்ததால, 'சஸ்பெண்ட்' பண்ணியிருக்காங்க. இத, குப்பை கிடங்கு தீப்பிடிச்ச சம்பவத்துல முடிச்சுப் போட்டு, மத்தவங்கள தப்பிக்க வைக்கிறாங்க. இதுல, முக்கியமான அதிகாரி மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல...'' என்றாள் சித்ரா.''கார்ப்பரேசன் மேல ஒரு அதிகாரி வழக்கு போட்டுருக்காராமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''ஆமாப்பா... சீனியரான தனக்கு உயர் பதவி கொடுக்காம, ஜூனியர்களுக்கு கொடுத்திருக்காங்க. அரசாங்க உத்தரவை மாநகராட்சி மீறியிருக்குன்னு, அவமதிப்பு வழக்கு போட்டுருக்காங்க. ஒடனே, இருந்த பதவியையும் பறிச்சு, 'டம்மி'யான இடத்துல ஒக்கார வச்சிட்டாங்க... தகுதியான அதிகாரி யாருன்னு கணக்கெடுத்தா, விரல் விட்டு எண்ணலாம்... அந்தளவுக்கு நிர்வாகம் மோசமா நடக்குது,'' என, புலம்பினாள் சித்ரா.''கார்ப்பரேசன்ல இப்படி. அரசு போக்குவரத்து கழகத்துல ஒரு அதிகாரி பட்டய கெளப்புறாருன்னு கேள்விப்பட்டேனே...'' என்ற மித்ராவிடம், ''மேலாண் இயக்குனரா புதுசா ஒரு அதிகாரி வந்திருக்காரு, மத்தவங்கள கசக்கிப்பிழியுறாராம். பொது மேலாளர்ட்ட புலம்பியிருக்காங்க. அவரோ, 'புதுசா வந்திருக்காரு; ஆரம்பத்துல அப்படித்தான் நடத்துக்குவாரு. கொஞ்ச நாள் பார்ப்போம்; இல்லேன்னா, மேலிடத்துல சொல்லலாம்'னு, சமரசம் செஞ்சிருக்காரு. இதைக்கேள்விப்பட்ட உயரதிகாரி, பொது மேலாளரை அழைச்சு வறுத்து எடுத்துட்டாராம்,'' என்றாள் சித்ரா.''நம்மூர்ல போலீஸ்காரங்க ரொம்பவே மழுங்கிட்டாங்க... '' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''நானும் கூட நேர்ல பார்த்தேன். கடை வீதிகள்ல் பொம்பளைங்க சுதந்திரமா நடந்து போக முடியலை. கொச்சையா பேசுறாங்க. கடைக்குள்ள கூப்பிடுறாங்க. கையப்பிடிச்சு இழுக்காத குறையா, கூட்டத்துக்குள்ள நுழைஞ்சு இடிக்கிறாங்க. கடை ஊழியர்க நடந்துக்கிற விதம் ரொம்பவும் அருவருப்பா இருக்கு...''போலீஸ்காரங்க கண்டுக்காம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காங்க... இதே மாதிரி, கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி, எதையும் கண்டுக்காம இருந்ததால தான், நெலமை எல்லை மீறி, கலவரமா வெடிச்சது; சின்ன பிரச்னையா இருந்தாலும், ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய, போலீஸ்காரங்க 'தில்'லா நடவடிக்கை எடுக்கணும்; இல்லாட்டி, சட்டம் - ஒழுங்கு ரொம்ப பாதிக்கும்,'' என, கொட்டித் தீர்த்த சித்ரா, 'வாக்கிங்' சென்றது போதும்; வீட்டுக்குச் செல்லலாம் என, கெளம்பினாள்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X