பொது செய்தி

தமிழ்நாடு

'எனக்கு பின்னால் கடவுள்'- ரஜினி

Updated : மார் 20, 2018 | Added : மார் 20, 2018 | கருத்துகள் (76)
Share
Advertisement
சென்னை: எனக்கு பின்னால் பா.ஜ.,இல்லை; கடவுள், மக்கள் உள்ளதாக இமயமலை சென்று திரும்பிய நடிகர் ரஜினி கூறினார்.மார்ச் 10ம் தேதி இமயமலை கிளம்பி சென்ற ரஜினி, இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். தொடர்ந்து நிருபர்களை சந்தித்தார்.புத்துணர்ச்சிஅவர் கூறியதாவது: சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இமாச்சல பிரதேசம், காஷ்மீர், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு
Aanmeega arasiyal,Actor Rajini, Ratha Yatra,நடிகர் ரஜினி, ரத யாத்திரை, பெரியார் சிலை,  காவிரி வாரியம்,  இமயமலை, ரஜினி மக்கள் மன்றம், ரஜினி அரசியல், ஆன்மீக அரசியல்,  Periyar Statue, Cauvery Board, Himalaya, Rajini makkal mandram , Rajini Politics, Spiritual Politics,

சென்னை: எனக்கு பின்னால் பா.ஜ.,இல்லை; கடவுள், மக்கள் உள்ளதாக இமயமலை சென்று திரும்பிய நடிகர் ரஜினி கூறினார்.

மார்ச் 10ம் தேதி இமயமலை கிளம்பி சென்ற ரஜினி, இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். தொடர்ந்து நிருபர்களை சந்தித்தார்.


புத்துணர்ச்சி

அவர் கூறியதாவது: சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இமாச்சல பிரதேசம், காஷ்மீர், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தேன். அங்கு செல்ல வேண்டும் என ரெம்ப நாள் ஆசை. ஆனால், 8 வருடங்களாக தள்ளி சென்றது. தற்போது, அங்கு சென்றது மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.


கண்டனம்


வேலை நிறுத்தம் கூடாது என்று தான் நான் சொல்வேன். சினிமா துறையில் ஏற்படும் வேலை நிறுத்தத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும். மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் இன்னும் முடியவில்லை. இதன் பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டை, ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. காட்டுமிராண்டிதனமானது.


கலவரத்திற்கு காரணமாக கூடாது

மேலும், ரத யாத்திரை குறித்த அவர் பதிலளிக்கையில், தமிழகம் மதசார்பற்ற மாநிலம். போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மதக்கலவரம் எந்தவிதத்தில் வந்தாலும் அதனை அரசு தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. மதக்கலவரத்திற்கு காரணமாகிவிடக்கூடாது
இமயமலை பயணத்தின் போது பா.ஜ., தலைவர்கள் சந்தித்தது குறித்த கேள்விக்கு, என் பின்னால் பா.ஜ., இல்லை. என் பின்னால் கடவுள், மக்களும் தான் உள்ளனர் என பதிலளித்தார். டிச.31 ல் அரசியல் குளத்தில் இறங்கவில்லை. அதுவரை அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளுக்கு பதிலளிக்க மாட்டேன் எனக்கூறியிருந்தேன். இன்னும் எத்தனை முறை சொல்ல வேண்டும் என தெரியவில்லை.


அழுத்தம் தேவை

ஏப்ரல் 14 அன்று கட்சி பெயர் அல்லது கொடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலில் உண்மையில்லை. காவிரி வாரியம் அமைக்க வேண்டும். இதில் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. . மாநில அரசு இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் இவ்வாறு ரஜினி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் அதுவரை அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளுக்கு பதிலளிக்க மாட்டேன் எனக் கூறியிருந்தேன். இன்னும் எத்தனை முறை சொல்ல வேண்டும் என தெரியவில்லை" என்று சொல்லிவிட்டு பெரியார் சிலை ரத யாத்திரைன்னா முன்னுக்குப் பின் முரணாயிருக்கே நல்லா உளறுகிறார் வயசாயிடுச்சே அப்படிதான் இருக்கும்
Rate this:
Cancel
"????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா
21-மார்-201805:38:35 IST Report Abuse
கடவுள் என்பவன் உனக்கு முன்னாள் இருந்து உன்னை நல்வழியில் நடத்தி செல்பவன், பின்னால் இருப்பவன் எல்லாம் உன்னை தீயவழியில் அழைத்து சென்று அழிவுக்கு காரணமாக இருக்கப்போகும் துரோகிகள் திருடர்கள். உனக்கே தெரியும் முன்னாள் இருப்பவன் வழிநடத்துகிறானா பின்னால் இருப்பவன் வழி சொல்கிறானா என்று, உன் வழி , உன் முடிவு.
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் எனது சமூகம் உனக்கு முன்பாக செல்லும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X