ஓட்டுக்காக இந்துக்களை பிரிக்கிறதா காங்.,: விவாதம்

Updated : மார் 21, 2018 | Added : மார் 20, 2018 | கருத்துகள் (121)
Share
Advertisement
Veera saiva Lingayat,CM Siddaramaiah,Karnataka Congress, கர்நாடகா அரசு, வீர சைவ லிங்காயத்து சமூகம், தனி மதம், முதல்வர் சித்தராமையா, பசவேஸ்வரா ,ஓட்டு வங்கி,முன்னாள்  உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே , காங்கிரஸ் அரசு, இந்து மதம், 
Government of Karnataka, Veera saiva Lingayat community, Separate religion, Chief Minister Siddaramaiah, Basaveshwara, Vote Bank, 
Former Home Minister Sushilkumar Shinde, Congress government, Hinduism, Congress,Divides,Hindus ,

கர்நாடகாவில், வீரசைவ லிங்காயத்து சமூகத்தை, தனி மதப்பிரிவாக அங்கீகரித்து, அம்மாநில காங்., அரசு பரிந்துரை செய்ததன் மூலம் இந்துக்களை பிரிக்கும் முயற்சியில் காங்., அரசு இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்நாடகாவில், காங்.,கை சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். கர்நாடகாவில், 12ம் நுாற்றாண்டில் பிறந்த பசவேஸ்வரா என்பவர் பக்தி இயக்கத்தை தோற்றுவித்து, பரப்பினார். இவரை பின்பற்றுவோர், வீரசைவ லிங்காயத்து என்றும், லிங்காயத்து என்றும் அழைக்கப்பட்டனர். இந்த லிங்காயத் சமூகத்தினரை தனி மதப்பிரிவாக காங். அங்கீகரித்துள்ளது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் அம்மாநிலத்தில் ஓட்டு வங்கிக்காக இந்துக்களை பிரித்தாளும் காங்.கின் இந்த செயல் குறித்து தனியார் ஆங்கில டி.வி.சானலில் விவாதம் நடந்தது.

முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு மத்தியில் காங்., ஆட்சியின் போது லிங்காயத்து சமூகத்தினை தனி மாதமாக அங்கீகரிக்க கோரிய கடிதத்திற்கு பதில் அளித்து உள்துறை அமைச்சராக இருந்த சுஷில்குமார் ஷிண்டே பார்லியில் உரையாற்றினார்.

அப்போது முடியாது என பேசியதும் இப்போது அதே லிங்காயத்து சமூகத்தினரை தனி மதமாக பரிந்துரைத்து அதே காங். அரசு ஒப்புதல் அளித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவாதத்தில் இந்து அமைப்பின் சாத்வி, மூத்த பத்திரிகையாளர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவாதம் வருமாறு

சாத்வி ஜெயபாரதி: செய்தி தொடர்பாளர், திவ்ய ஜோதி ஜக்ரதி சான்ஸ்தான்.

காங்.கின் இந்த செயல்பெரும்பான்மை இந்துக்கள் உள்ள நாட்டில் இந்துவாக இருப்பது கடினமாகிவிடும்

ஞான்ஷாம் திவாரி: செய்தி தொடர்பாளர் , சமாஜ்வாதி கட்சி .

இது போன்ற ஒரு அரசியலை ஒதுக்கி தள்ள வேண்டும். இதனை பா.ஜ.வும் கடுமையாக எதிர்க்கவேண்டும்.

ஸ்மித் பத்ரா: பா.ஜ. தேசிய செய்தி தொடர்பாளர்.

நாட்டு மக்களை மட்டுமல்ல, லிங்காயத்து சமூகத்தினை முட்டாளாக்குகிறது காங்கிரஸ் கட்சி.

ஜெகந்நாதன்: மூத்த பத்திரியைாளர்.

ஒரு மதச்சார்பற்ற கட்சி இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதை மதச்சார்பற்ற அரசு எவ்வாறு தீர்மானிக்கின்றது

சுமந்த் சி.ராமன்:அரசியல் விமர்சகர்

இந்து மதத்தைச் சேர்ந்த லிங்காயத்தினர் ஏன் அந்தமதத்தினை விட்டு வெளியேறி தனி மதமாக விரும்ப வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (121)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamiliyans - NJ,யூ.எஸ்.ஏ
21-மார்-201818:42:08 IST Report Abuse
tamiliyans என்னதான் இருந்தாலும் கண்ணடத்தான் நம்மள மாதிரி அரசியல்ல வரமாட்டான். டக்குன்னு நமக்கு மதம் கிடையாது நாங்க ஒரு இனம்ன்னு சொல்லி சேபா லேண்ட் ஆவ தெரியல்ல.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
21-மார்-201818:11:48 IST Report Abuse
Vijay D Ratnam இதுதான் சொந்த செலவில் ஆப்பு வைத்துக்கொள்வது என்பது. முதலில் இந்த லிங்காயத்து சமூகத்தினர் 80 சதவிகிதம் பேர் தங்கள் சமூகத்தை தனிமதமாக அறிவிப்பதை விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார்கள். எப்படியாவது ஆட்சியை தக்கவைக்கவேண்டும் என்று காங்கிரஸ் தவிக்கிறது. இந்த பைத்தியக்காரத்தனத்தின் மூலம் அநேகமாக தமிழ்நாடு மாதிரி கர்நாடகாவிலும் காங்கிரஸ் துடைத்தெறிப்படும்.
Rate this:
Cancel
SUPPIAH - ipoh,மலேஷியா
21-மார்-201818:08:36 IST Report Abuse
SUPPIAH தமிழன் 2013 ம் ஆண்டு இதே காங்கிரஸ் அரசு தானே லிங்காயத் சமூகத்தினரின் கொறிக்கியை நிராகிருத்தினர். இப்பொது எப்படி இந்த மாற்றம். இந்த கிருஸ்தவர் காங்கிரஸ் தலைவர் பிரிட்டிஷ் (டிவைட் அண்ட் ரூல் ) பாணியில் ஹிந்து சமூகத்தை பிரித்து ஆலப்பாக்கிறார்கள். எல்லா ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் கட்சியை ஒதுக்கவேண்டும். இந்து மதத்தை ஒழிப்பதற்கு இந்த முதற்ட் கட்ட சூழ்ச்சியை கையாண்டுள்ளனர், இந்துக்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.இந்த குள்ள நரிகள் சூழ்ச்சிக்கு பணிந்து விட குடாது.இந்துக்கள் எல்லாம் ஒன்று படுவோம், இந்து எதிர்ப்பாளர்களை துரத்தி அடிப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X