தகவல்களை திருடி தான் காங்., வெற்றி பெற்றதா? ரவிசங்கர் கேள்வி

Updated : மார் 21, 2018 | Added : மார் 21, 2018 | கருத்துகள் (12)
Share
Advertisement
Cambridge Analitika,Rahul Gandhi,Ravi Shankar Prasad, காங்கிரஸ், ரவிசங்கர் பிரசாத், ராகுல், பேஸ்புக் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனலிடிகா,  காங்கிரஸ் தலைவர் ராகுல், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமூக வலைதளங்கள்,  தேர்தல் தகவல்கள், Congress,  Rahul, Facebook Information,  Congress leader Rahul, Union Minister Ravi Shankar Prasad, Social Web Site, Election Information,கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம்,Cambridge Analytica Institute,

புதுடில்லி : கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், பேஸ்புக் மூலம் தகவல்களை திருடி அதனை பயன்படுத்தி, தேர்தல் தகவல்களை கசியவிட்டதாலேயே பா.ஜ., 2014 தேர்தலில் வெற்றி பெற்றதாக காங்., தலைவர் ராகுல் கூறி இருந்தார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் தகவல்கள் கசிந்திருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தகவல்களை திருடியும், முறைகேடு செய்தும் தான் காங்., கட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றதா? சமூக வலைதளங்களில் ராகுல் பிரபலமாகி உள்ளதில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவின் பங்கு என்ன?

இந்திய தேர்தல் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர அனைவருக்கு உரிமை உண்டு. கருத்துக்களையும், யோசனைகளையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொள்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். அதே சமயம் இந்தியாவின் தேர்தல் முறையில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தலையிடுவதை சகித்து கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுக்கிறோம். இந்தியர்களின் விவரங்கள் , பேஸ்புக் அமைப்பின் உதவியுடன் திருடப்பட்டிருந்தால், அதனை பொறுத்து கொள்ள மாட்டோம். இந்தியாவில் வலிமையான ஐடி சட்டம் உள்ளது. இதனை பயன்படுத்தி, உங்களுக்கு சம்மன் அனுப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மறுப்பு

ஆனால், இதனை காங்கிரஸ் மறுத்துள்ளது. பா.ஜ.,வின் பொய் தொழிற்சாலையில் தயாரான மற்றொறு தகவல். கேம்ப்ரிட்ஜ் அனால்டிகாவை காங்கிரஸ் எப்போதும் பயன்படுத்தியதில்லை எனக்கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201819:27:26 IST Report Abuse
Srinivasan Kannaiya தகவல்களை திருடியும், முறைகேடு செய்தும் தான் காங்., கட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றதா? ஒண்ணுமே புரியவில்லை... ரகசியங்களை திருடி எப்பிடி வெற்றி பெறமுடியம்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-மார்-201819:06:42 IST Report Abuse
J.V. Iyer இதுவரையில் ஸ்கேம்-கிரேஸ் கட்சி ஜெயித்ததெல்லாம் இப்படித்தானா?? அதனால்தான் சந்தேகப்படுகிறார்கள். பா.ஜ.க. இடைத்தேர்தலில் தோற்றதற்கு காரணம்?? ஸ்கேம்-கிரேஸ் கட்சி செய்த சதியா?? கொட்டப்பராந்து கூட்டுவண்டிய தூக்கிட்டுப்போச்சுன்னா கேட்பவர்களுக்கு மதி எங்க போச்சு?
Rate this:
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
21-மார்-201819:06:17 IST Report Abuse
Kuppuswamykesavan , ஒரு விசயம், சொல்றதா இருந்தா?, தெளிவாக, விளக்கமாக, விபரமாக, அல்லது சுறுக்கமாக புரியும்படி கூறுங்க, இப்படியா?, சஸ்பென்ஸ் வைப்பீங்க?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X