வன்கொடுமை சட்ட தீர்ப்பு : மறுஆய்வு செய்ய கோரிக்கை

Added : மார் 22, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: 'எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்திஉள்ளது.'எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் புகார் அளிக்கப்பட்ட உடனேயே, அதிகாரிகள் அல்லது சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுஉள்ளது.இந்த தீர்ப்பு குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், ஆனந்த் சர்மா கூறியதாவது:பா.ஜ., ஆட்சியில், தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அவர்களுக்கு எதிராக அமைந்து விடும்; தலித் மக்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்து விடும்.இந்த தீர்ப்பு குறித்து, மத்திய அரசு எந்த கருத்தையும் கூறவில்லை; அப்படியானால், இந்தத் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனரா... தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.இல்லையென்றால், தலித் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Ramanathan - tiruchi,இந்தியா
22-மார்-201815:11:15 IST Report Abuse
Sundararaman Ramanathan காங்கிரஸ் என்னும் ஒரு சுயநல சக்தி எப்போதுமே குழப்பம்செய்தும் ,பிரித்தாளும் சூழ்ச்சி செய்தும் நாட்டை பிளவுபடுத்தி தீயசக்திகள் சங்கமம் ஆகவே இருந்துள்ளது .சட்டங்களை தவறாக பயன்படுத்தி ஆதாயம் தேடும் ஒரு கட்சி இதுதான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X