ஹூஸ்டன்: அமெரிக்காவில் மருத்துவ வாரிய தலைவரை குண்டு வைத்து கொல்ல முயன்ற வழக்கில், இந்திய வம்சாவளி டாக்டருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்கன்சாஸ் மாகாணத்தின் ரசல்வில்லி நகரை சேர்ந்தவர் ரந்தீப் மான். டாக்டராக பணியாற்றி வந்தார். நோயாளிகளுக்கு அதிகப்படியான மருந்து எழுதி கொடுப்பதாக இவர் மீது புகார் வந்ததால், இவரது லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. இதனால், கோபமடைந்த ரந்தீப், மருத்துவ வாரிய தலைவர் ட்ரென்ட் பியர்சை கொல்ல திட்டமிட்டார். மெம்பிஸ் நகரில் உள்ள பியர்சின் வீட்டில் கடந்த 2009ம் ஆண்டு பிப்., 4ம்தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் பியர்சின் கண் மற்றும் காது பாதிக்கப்பட்டது. ஒரு கண் பார்வையிழந்தார்; ஒரு காது, கேட்கும் திறனை இழந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான ரந்தீப் கைது செய்யப்பட்டார்.ஆயுத வழக்கு தொடர்பாக ரந்தீப்புக்கு அமெரிக்க கோர்ட் 45 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. தன்னுடைய ஒரு கண் மற்றும் காது செயல் திறனை இழந்ததால், ரந்தீப்புக்கு கடும் தண்டனை வழங்கும் படி பியர்ஸ் கோர்ட்டில் கோரியிருந்தார். இதை தொடர்ந்து, ரந்தீப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை நடத்த இடையூறு செய்த குற்றத்துக்காக, ரந்தீப்பின் மனைவி சங்கீதாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 23 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் செய்து கொள்ள கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE