ராஜ்யசபா தேர்தலில் 87 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராஜ்யசபா தேர்தலில் 87 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

Updated : மார் 22, 2018 | Added : மார் 22, 2018 | கருத்துகள் (10)
Advertisement
Rajya Sabha Election,Mahendra Prasad,Crorepatis Candidates,ராஜ்யசபா தேர்தல், 87 சதவீதம் கோடீஸ்வரர்கள், கோடீஸ்வர வேட்பாளர்கள், மகேந்திர பிரசாத் , ஐக்கிய ஜனதாதள கட்சி, தேர்தல் கண்காணிப்புக்குழு, ஜெயாபச்சன், அச்சுதானந்தா,  87 percent crorepatis,   United National Party, Election Monitoring Committee, Jaya Bachan, Achyutananda,

புதுடில்லி : ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்களில் 87 சதவீதம் பேர் (55 வேட்பாளர்கள்), கோடீஸ்வர வேட்பாளர்கள் என தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஐக்கிய ஜனதாதள கட்சியின் மகேந்திர பிரசாத் வசம் ரூ.4,078 கோடி சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

16 மாநிலங்களில் 58 காலியிடங்களுக்கான லோக்சபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை (மார்ச்,23) நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் 64 பேரில் 63 பேரின் பிராமண பத்திரங்களை ஆராய்ந்து, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான தேர்தல் கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை:

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 63 பேரில் 55 பேர் கோடீஸ்வரர்கள். சராசரியாக ரூ.122 கோடி சொத்துக்களுக்கு சொந்தமானவர்கள். இதில் 26 பேர் பா.ஜ., கட்சியையும், 10 பேர் காங்., கட்சியையும், 3 பேர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியையும், 2 பேர் ஐக்கிய ஜனதாதள கட்சியையும் சேர்ந்தவர்கள்.

அதிகபட்சமாக ஐக்கிய ஜனதாதள கட்சியின் மகேந்திர பிரசாத் ரூ.4,078 கோடி சொத்துக்களும், குறைந்தபட்சமாக பிஜூ ஜனதா தள கட்சியின் அச்சுதானந்தா ரூ.4.96 லட்சம் சொத்துக்களையும் கொண்டுள்ளனர்.

மேலும், ஜெயாபச்சனுக்கு (சமாஜ்வாதி கட்சி) ரூ.1,001 கோடி சொத்துக்களும், பி.எம்.பரூக்குக்கு (மதசார்பற்ற ஜனதாதளம்) ரூ.766 கோடி சொத்துக்களும், அபிஷேக் மனு சிங்விக்கு(ரூ.649 கோடி) சொத்துக்களும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Gopalan - Bangalore ,இந்தியா
22-மார்-201815:32:55 IST Report Abuse
V Gopalan How to close down Parliament? Common man has to eke out his livelihood facing challenges of price rise, petroleum products increase, traffic snarl, children education, marriages of their kids et all. In such a situation, these MPs without transacting business,as they are elite class, they do not bother as to how much public money is being drained without any fruitful discussions. Why not Supreme Court pull the Parliament, without telling that court cannot interfere. It is public money. Once the public revolution is flared up like Egypt, Syria, Libya no court, parliament will come on their way. These persons enjoy at our cost. There is no possibility is at sight to mend these MPs. President started his entourage slowly like ex PM without taking cognizance of what is going in Parliament and Assemblies, because his salary is also increased and his tenure is fixed and if the BJP gets next term it is sure his continuation. It is a fault of Father of Nation who was responsible for getting freedom at the sacrifice of lakhs of citizens. Even if he is alive, he himself would be a mute spectator and repent himself. It is a sin of democracy at tha hands of wrong people in right place.
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
22-மார்-201810:32:02 IST Report Abuse
Nalam Virumbi ராஜ்ய சபா என்பதே தேவை இல்லாத ஒன்று. அல்லது நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற சதவிகித அடிப்படையில் கட்சிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
smoorthy - bangalore,இந்தியா
22-மார்-201809:10:11 IST Report Abuse
smoorthy பணம் பந்தத்தோட தான் சேரும் என்பது உண்மை ஆகிறது / இவர்களுக்கு தினப்படி தவிர வேறு எந்த சலுகையும் வீட்டு வசதி , retired MP பென்ஷன் எதுவும் கொடுக்க கூடாது / அரசியல் சாணக்கியர் கள் செய்வார்களா / கண்டிப்பாக மாட்டார்கள் / இது தான் ஜனநாயகம் /
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X