இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டயர் வெடித்ததா ? : டில்லி வந்த 102 பயணிகள் உயிர் பிழைத்தனர்

Updated : ஜூன் 15, 2010 | Added : ஜூன் 15, 2010 | கருத்துகள் (114) | |
Advertisement
புதுடில்லி: டில்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் மற்றொரு துயர சம்பவம் தவிர்க்கப்பட்டது. துபாயில் இருந்து மங்களூரூ வந்த விமானம் தரையிறங்கியபோது எரிந்து சாம்லான துயர சம்பவத்தில் 160 கருகி பலியாயினர். இந்த சம்பவ துயர அலை நீங்குவதற்குள் மீண்டும் ஒரு இந்திய விமானம் ஒரு பெரும் விபத்து நடக்க நேரிட்டு நூலிலையில்
airlinese,shaved,closely, ஏர்லைன்ஸ், விமானம்,டயர்,வெடித்தது, எரிந்தது,டில்லி,வந்த,102,பயணிகள்,உயிர்,பிழைத்தனர்,

புதுடில்லி: டில்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் மற்றொரு துயர சம்பவம் தவிர்க்கப்பட்டது. துபாயில் இருந்து மங்களூரூ வந்த விமானம் தரையிறங்கியபோது எரிந்து சாம்லான துயர சம்பவத்தில் 160 கருகி பலியாயினர். இந்த சம்பவ துயர அலை நீங்குவதற்குள் மீண்டும் ஒரு இந்திய விமானம் ஒரு பெரும் விபத்து நடக்க நேரிட்டு நூலிலையில் தவிர்க்கப்பட்டது.

 

மும்பை- போபால்- இந்தூர் - டில்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் ( ஐ. சி., 113 ) விமானம் இன்று காலை 11.10 மணி அளவில் டில்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் விமானத்தின் இரண்டு டயர்கள் ஒரே நேரத்தில் வெடித்தது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் 102 பேரும் என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தில் உறைந்தனர். பெரும் பதட்டம் அடைந்தனர். இதற்கிடையில் உடனுக்குடன் தகவல் பரிமாறப்பட்டு விமானத்தை சாதுர்யமாக பைலட் தரையிறக்கினார். தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

டயர் வெடிக்கவில்லை;  ஏர் லைன்ஸ் மறுப்பு : இந்த சம்பவம் குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது: டயர் வெடித்தது என்ற தகவல் பரவியது. ஆனால் டயர் வெடிக்கவில்லை காற்று வெளியேறி குறைவாக இருந்தது என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பைலட்டுக்கு தரையிறங்க உத்தரவிடப்பட்டது. தயார் நிலையில் இருந்த தீயணைக்கும் படையினர் தயராக இருந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து கூல் செய்தனர். பயணிகள் பத்திரமாக உள்ளனர்.

 

கடந்த 22 ம் தேதி ஏர் இந்திய விமான விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு சம்பவம் விமான பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு முறையான பராமரிப்பு , முன்சோதனை குறைபாடுதான் காரணமாக இருக்கும் என விமானத்தில் பயணிப்போர் கருத்து தெரிவிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - singapore,இந்தியா
20-ஜூன்-201022:45:30 IST Report Abuse
 Anand நம்ம எல்லோரும் குறை சொல்ல மட்டும் முன்னாடி வரோம் , உங்க யாராலாவது வேற எந்த நாட்டு flightlayum விபத்து ஏற்படாதுன்னு உத்திரவாதம் தர முடியுமா . சில்க் ஏர் கு 900 டாலர் குடுக்க உங்களுக்கு மனசு வருது . ஏர் இந்தியா ன்ன 100 டாலர் நா ஓகே நு சொல்றிங்க.
Rate this:
Cancel
க.இரவி - Muscat,ஓமன்
20-ஜூன்-201016:14:17 IST Report Abuse
 க.இரவி நான் Air India விமானத்துல பயணம் செய்ய பையப்படல, எதாவது தப்பு தண்டா ஆயி நம்ம உயிர் போயிடுச்சின்னா நம்ம ஊரு அரசியல் நாயிங்க Insurance பணத்த என்ன நம்பி வாழும் என்னுடைய குடும்பத்துக்கு ஒழுங்கா சேர்க்காது. அதுதான் நான் வேறே நாட்டு விமானத்த செலக்ட் பண்ணுறேன் அட்லீஸ்ட் என்னுடைய குடும்பம் எனக்கு பிறகு கஷ்ட படக்கூடாது என்பது என் விருப்பம்.
Rate this:
Cancel
நாட்டமை - marthandam,இந்தியா
16-ஜூன்-201021:23:58 IST Report Abuse
 நாட்டமை சரி சரி எல்லாரும் கூவி முடிச்சாச்சா ?? நன்று என்னது ஏர் இண்டியாவை மூடனுமா என்ன முட்டாள்தனமான கமெண்ட் அவங்க அப்படி செஞ்சாங்கன்னா அப்புறம் எல்லாம் தனியார் ராஜாங்கம் தான் சாதாரணமா பிளைட்டுல போறதுக்கு இரண்டு முறை யோசிக்கற மக்கள் அப்புறம் மறந்துட வேண்டியது தான் பழையபடி மாட்டு வண்டி இல்லன்னா கால்நடை தான் ஏன்னா தனியார் ஒன்னும் charity நடத்துவதற்க்கு விமானம் ஓட்டவில்லை கவனத்தில் கொள்க!! ஏர் இண்டியாவின் டிக்கெட் விலையை ஒட்டி தான் மற்ற விமானங்கள் தங்களின் விலையை குறிக்கின்றன ! என்னது air arabia கம்மியா தர்ரானா எத்தனை நாளைக்குன்னு பாரு அப்பு எல்லாம் வியாபாரம் சூடு புடிக்கற வரை தான் அப்புறம் பாரு அப்பு நீ அவனுக அடிமை !!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X