வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரி ஆண்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

Added : மார் 26, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் ஆண்டு விழா நடைபெற்றது.கல்லுாரி தலைவர் விஜயா முத்துவண்ணன் தலைமை தாங்கினார். முதன்மை செயலாக்க அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். ஜோசப் இக்னோஷியஸ் வரவேற்றார். முதல்வர் அன்பழகன் கல்லுாரியின் ஆண்டறிக்கை வாசித்தார்.விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார், பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்றுவித்த பேராசிரியர்களுக்கும் வெகுமதிகளையும், விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.இதையடுத்து, தேர்ச்சி விகிதம் அதிகளவில் பெற, சிறப்பாக பணிபுரிந்த 16 பேராசிரியர்கள், அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய துறை தலைவர் ஒருவருக்கும், கல்லுாரி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர் ஒருவர் உட்பட மொத்தம் 18 பேருக்கு 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கமோதிரங்கள் வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்ட பேராசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் இரு பேராசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.விழாவில், 33 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, புதிய கண்டுபிடிப்புகளை படைத்தோருக்கு பரிசுதொகைகள் வழங்கப்பட்டது. இதில், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.பேராசிரியை ஜெயா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X