லாரியில் நசுங்கிய செய்தியாளர் :மணல் மாபியாக்களின் வெறிச்செயல்| Dinamalar

லாரியில் நசுங்கிய செய்தியாளர் :மணல் மாபியாக்களின் வெறிச்செயல்

Added : மார் 26, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 லாரியில் நசுங்கிய செய்தியாளர்  :மணல் மாபியாக்களின் வெறிச்செயல்போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், மணல் கொள்ளை குறித்த செய்தியை சேகரித்த செய்தியாளர், லாரியில் நசுங்கி இறந்த, 'வீடியோ' அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த, சந்தீப் சர்மா, 35, 'டிவி' சேனலில் செய்தியாளராக பணிபுரிந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
சமீபத்தில், பிண்ட் மாவட்டத்தில், சந்தீப் சேகரித்த மணல் கொள்ளை குறித்த செய்தி, 'டிவி'யில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து, மணல் கொள்ளை கும்பலிடம் இருந்து, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக, சந்தீப், போலீசாரிடம் புகார் அளித்து இருந்தார்.
அந்தப் புகார் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மணல் கொள்ளையர்களுடன், போலீசாரும் உடந்தையாக இருப்பதாக, சந்தீப் சந்தேகப்பட்டார்.

கடந்த ஞாயிறன்று வேகமாக வந்த ஒரு லாரி மோதியதில், பைக்கில் இருந்து கீழே விழுந்த சந்தீப், சக்கரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்த இந்த கோர விபத்து குறித்த வீடியோ, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், பீஹார் மாநிலத்தில், நவீன் நிச்சல் மற்றும் விஜய் சிங் என்ற இரு செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகள் பயன்படுத்திய காருக்கு, பொதுமக்கள் தீ வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
27-மார்-201814:40:41 IST Report Abuse
balakrishnan மணல் கொள்ளை இந்திய முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது, இந்த தேசிய அல்லக்கைகள் என்னமோ தமிழகத்தில் மட்டுமே நடக்குது என்று பீலாவிட்டன,
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
27-மார்-201812:46:47 IST Report Abuse
christ பல இடங்களில் குற்றவாளிகள் + போலீஸ் மாமூல் பரிவர்த்தனை அமோகமாக நடைபெறுவதால் குற்றங்கள் நடைபெறுவதை கண்டும் காணாமலும் ஆக்கப்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
27-மார்-201812:25:59 IST Report Abuse
Syed Syed digitel india vin amoga valarchi idhudan.
Rate this:
Share this comment
Arsh - Frankfurt,ஜெர்மனி
27-மார்-201813:33:34 IST Report Abuse
Arshஉங்க வீட்டு குழாயில தண்ணி வராட்டியும் டிஜிட்டல் இந்தியாவ தான் குறை கூறுவீரோ...
Rate this:
Share this comment
karupanasamy - chennai,இந்தியா
27-மார்-201813:44:27 IST Report Abuse
karupanasamyஇந்தியர்களுக்காக அனுதாபம் கூட தெரிவிக்காத உங்களால் யாரையும் குறை கூற அருகதை இல்லை....
Rate this:
Share this comment
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
27-மார்-201814:09:37 IST Report Abuse
Enrum anbudanஎவனா இருந்தாலும் நாடு ரோட்டில் விட்டு கல்லால் அடிக்க வேண்டும் அதை கூறுவதை விட்டு விட்டு டிஜிட்டல் இந்தியாவாம்? என்ன புத்தி பாய் உங்களுக்கு?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X