உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது திருப்பதி தேவஸ்தானம்?

Added : மார் 28, 2018 | கருத்துகள் (86)
Advertisement
திருப்பதி: திருமலையில், உற்சவமூர்த்தி சிலை, கீழே விழுந்ததில் சேதம் அடைந்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை தேவஸ்தானம் மூடி மறைத்து வருகிறது.திருப்பதி, திருமலையில், தினசரி காலை, 10:00 மணிக்கு, கல்யாணோற்சவ சேவை நடப்பது வழக்கம். அதற்காக, ஏழுமலையான் கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி சிலைகள், அருகில் உள்ள கல்யாணோற்சவ மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த
திருப்பதி,உற்சவர் சிலை,சேதம்

திருப்பதி: திருமலையில், உற்சவமூர்த்தி சிலை, கீழே விழுந்ததில் சேதம் அடைந்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை தேவஸ்தானம் மூடி மறைத்து வருகிறது.

திருப்பதி, திருமலையில், தினசரி காலை, 10:00 மணிக்கு, கல்யாணோற்சவ சேவை நடப்பது வழக்கம். அதற்காக, ஏழுமலையான் கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி சிலைகள், அருகில் உள்ள கல்யாணோற்சவ மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த சிலைகளை, அர்ச்சகர்கள், தங்கள் கைகளால் சுமந்து செல்வர்; பின், இரவில், இந்த சிலைகள் மீண்டும் ஏழுமலையான் கருவறைக்குள் வைக்கப்படும்.

நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலைப்பஸ்வாமி சிலை, கல்யாணோற்சவத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. கல்யாணோற்சவம் முடிந்த பின் சிலைகள் மீண்டும் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, பூதேவி சிலை, அர்ச்சகர் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து, சிலையின் கிரீடம் சேதமடைந்தது.

இதைத் தொடர்ந்து, அர்ச்சகர்கள், சிலையை தனியே எடுத்துச் சென்று, சிலைக்கு சாந்தி ஹோமம், புன்னியாவசனம் உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரியாமல் நடத்தி உள்ளனர். இந்த தகவல்கள், நேற்று காலை தாமதமாக வெளிவந்துள்ளன. ஆனால், தேவஸ்தான அதிகாரிகள் யாரும், இதற்கு விளக்கமளிக்க முன்வரவில்லை. இது குறித்து, வெளியில் தெரிவிக்காமல் தேவஸ்தானம் மூடி மறைத்து வருகிறது.


'திருமலை தேவஸ்தானம், வயதான அர்ச்சகர்களை பணியில் நியமிக்கும் போது, இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. 'அதனால், அர்ச்சகர்களின் வயதுக்கேற்ப, அவர்களுக்கு பணிகளை வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், இது போன்ற சங்கடங்கள் தவிர்க்கப்படும்' என, பக்தர்கள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
31-மார்-201802:43:39 IST Report Abuse
ramasamy naicken திருப்பதியில் கீழே விழுந்து சிலைக்கு சேதம். பழனியில் சிலையவே ஆட்டையை போட்டுவிட்டார்கள்.
Rate this:
Cancel
ஜெய்கிந்த்புரம் - Madurai,இந்தியா
28-மார்-201820:58:26 IST Report Abuse
ஜெய்கிந்த்புரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலைப்பஸ்வாமி - அது மலைப்பஸ்வாமி அல்ல, மலையப்ப ஸ்வாமி - \திருமலையில் இருப்பதால் மலை அப்பர். விழுந்தது என்னமோ பூதேவி. பூமிக்குள் போக விரும்புகிறாளோ என்னவோ.
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
28-மார்-201818:09:23 IST Report Abuse
K. V. Ramani Rockfort சந்திரபாபு நாய்டுவின் அக்கிரமங்கள் அந்த கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும். இதை பார்த்தாவது, தீய சக்திகள் திருந்த கடவுள் கொடுக்கும் வாய்ப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X