பதிவு செய்த நாள் :
இந்திய தேர்தலை அலசிய கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா

மும்பை: இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி கள் நீண்ட காலமாக, பிரிட்டனின், கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்தி வந்துள்ளதாக, அந்த நிறுவனத் தின் முன்னாள் ஊழியர், கிறிஸ்டோபர் வைலி கூறியுள்ளார்.

 இந்திய, தேர்தலை, அலசிய, கேம்ப்ரிட்ஜ் ,அனலிடிகா


அமெரிக்க அதிபர் தேர்தலில், கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் சேவை பயன் படுத்தப் பட்டதாகவும், அந் நிறுவனம், 'பேஸ்புக்' தகவல்களை முறைகேடாக பயன்படுத்தி, தன் வாடிக்கையாளர்களுக்கு உதவியதாகவும் எழுந்த புகார், அமெரிக்க அரசியலில், புயலை கிளப்பியது.


அம்பலம்கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவன சேவைகளை, இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் பயன்படுத்தி வருவதாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் அம்பலப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து, 'டுவிட்டர்' சமூக தளத்தில் அவர் கூறியதாவது:


கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூலம், இந்தியா வில் உள்ள அரசியல் கட்சிகள், வாக்காளர்களின் தகவல்களை பெற்று, அதற்கேற்ப தேர்தல் வியூகங் களை வகுத்து வந்துள்ளன. கடந்த, 2003ல், ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலின்போது, அம்மாநிலத்தைச் சேர்ந்த பெரிய கட்சி, இரண்டு பணிகளைநிறைவேற்ற, கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவை நியமித்தது.


அதில் ஒன்று, அக்கட்சியின் கட்டமைப்பு வலிமை குறித்தும், மற்றொன்று, வாக்காளர்களின் மனப் பான்மை குறித்தும் இருந்தது.கடந்த, 2003ல், ம.பி., யில் தேர்தல் நடந்தபோது, கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு நிறுவனமான, எஸ்.சி.எல்., எனப்படும், ஸ்ட்ரேடஜிக் கம்யூனிகேஷன் லேபாரடரி சேவையை, தேசிய கட்சி ஒன்று பெற்றது. தேர்தல் தொடர்பான அறிவியல் ரீதியிலான ஆய்வை மேற்கொள்ளும் பணி, அந்த நிறுவனத்திடம் தரப்பட்டது.


கடந்த, 2007ல், உபி.,யில், முழு அளவிலான அரசியல் கருத்துக் கணிப்பை நடத்தும் பணியை, எஸ்.சி.எல்.,லிடம், தேசிய கட்சி ஒன்று அளித்தது. கடந்த, 2010ல்,ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்காக, தேர்தல் வியூகம் அமைத்தல், தேர்தல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை, எஸ்.சி.எல்., மேற்கொண்டது.கடந்த, 2012ல்,

Advertisement

தேசிய கட்சிக்காக, ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை, எஸ்.சி.எல்., இந்தியா நடத்தியது. இதன் மூலம், அந்த கட்சிக்கு ஓட்டளிக்க தயாராக முழுவதும், வாக்காளர் களின் ஜாதி குறித்த, வீட்டுக்கு வீடு தகவல் சேகரிப்பு பணிகளை, எஸ்.சி.எல்., மேற் கொண்டது. இதை வைத்து, தேர்தல் பிரசார வியூகங்கள் வகுக்கப்பட்டன.


10 அலுவலகங்கள்எஸ்.சி.எல்., இந்தியா, கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்களுக்கு, இந்தியாவில், 10 அலுவலகங்கள் உள்ளன. எஸ்.சி.எல்.,லின் தலைமையகம், உ.பி., மாநிலம், காஜியாபாதில் உள்ளது. இவ்வாறு அவர் கூறிஉள்ளார். இதற்கிடையே, தகவல் கள் கசியவிடப்பட்டது தொடர்பாக, 'பேஸ்புக்' நிறுவனத்திடம், மத்திய அரசு விளக்கம் கேட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aravindhakshan - Chennai,இந்தியா
29-மார்-201817:59:38 IST Report Abuse

Aravindhakshanடிஜிட்டல் முறையில 2019 இல் வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப்பணம் இந்தியாவிற்கு திருப்பி கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் வரவு வைக்கப்படும். அதன் பின் Make in India திட்டத்தின் கீழ் பக்கோடா செய்முறை நாட்டின் ஒவ்வொரு கிராமங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். பக்கோடா செய்ய உள்நாட்டிலேயே இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு முக்கியமாக தமிழக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். பக்கோடா உற்பத்தியில் நம் நாடு விரைவில் தன்னிறைவு பெறும். நாட்டின் நலிந்த விவசாயிகள் சிறந்த வருமானம் பெற்று சுபிட்சமாக வாழ்வார்கள்.

Rate this:
spr - chennai,இந்தியா
29-மார்-201812:52:53 IST Report Abuse

spr"கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூலம், இந்தியா வில் உள்ள அரசியல் கட்சிகள், வாக்காளர்களின் தகவல்களை பெற்று, அதற்கேற்ப தேர்தல் வியூகங் களை வகுத்து வந்துள்ளன." இந்தியாவைப் போன்ற கணிணிப் பயன்பாடு குறைவாக இருக்கும் நாட்டில் இது போல ஒரு தேர்தலின் முடிவை மாற்ற முடியும் என்பது ஏற்கக்கூடியதாக இல்லை சமுதாயத்தில் பிரச்சினைகளை (ஜல்லிக்கட்டு, கூடங்குளம் போராட்டம் JNU மாணாக்கர் போராட்டம் போன்றவை ) உண்டாக்க இயலும் தவிர ஆளும் கட்சிக்கு எதிராக அல்லது ஆதரவாக கருத்துக்களை உருவாக்கி இளைஞர்களை மூளைச்சலவை செய்யலாமே தவிர தேர்தல் முடிவுகளை மாற்ற இயலாது ஏனனெனில், இணைத்து இளைஞர்கள் இணையத்தில் கருத்து சொல்லலாம் தெருவில் போராடலாம் ஆனால் வாக்குப் போட வாக்குச் சாவடிக்குச் செல்வது நடக்கும் கார்யமல்ல

Rate this:
Chelliah Jeyabal - Chennai,இந்தியா
29-மார்-201815:15:39 IST Report Abuse

Chelliah Jeyabalகொடுக்கப்பட்ட ஆர்டர்டுக்குத் தகுந்தாற்போல் 272+ வாங்கிக் கொடுத்தோம் என தனது இணைய தளத்திலேயே எழுதியிருந்தனர். ...

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
29-மார்-201810:02:51 IST Report Abuse

Kuppuswamykesavanபொதுவாக, அரசியல் என்றாலே, சூது மதி நிறைந்தது எனலாம். மேலும், தேர்தல் என்று வந்துவிட்டால், கூறவும் வேண்டுமோ?.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X