காவிரி விவகாரம்: ஏப்.,2ல் அ.தி.மு.க., உண்ணாவிரதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரி விவகாரம்: ஏப்.,2ல் அ.தி.மு.க., உண்ணாவிரதம்

Updated : மார் 30, 2018 | Added : மார் 30, 2018 | கருத்துகள் (61)
Advertisement
O Panneerselvam, CM Edappadi Palanisamy, AIADMK fasting,காவிரி வாரியம், அதிமுக உண்ணாவிரதம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியம், உண்ணாவிரத போராட்டம் , சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, காவிரி வாரிய விவகாரம்,  
Cauvery Board,  Deputy Chief Minister O. Panneerselvam, Chief Minister Palanisamy, Cauvery Management Board, Supreme Court verdict, Cauvery Board affair,

மதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.


எங்களது குரல் ஒலிக்கும்


மதுரையில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தின் ஜீவாதார உரிமை எந்த நேரத்திலும் பறி போய் விட முடியாது என்ற அளவிற்கு எங்களது குரல் என்றென்றும் ஒலிக்கும். அதற்கு அடையாளமாக அதிமுக சார்பாக வரும் ஏப்ரல் 2ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடக்கும். இந்த போராட்டம் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
மத்தியில் இருப்பவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் பேசப்படும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் போராட்டம் நடக்கும். இதில் அதிமுக தொண்டர்கள், விவசாயிகள், ஒட்டுமொத்த மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


வெளிமாநிலத்திற்கு போங்க


முதல்வர் பழனிசாமி பேசுகையில், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. காவிரி வாரிய விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உணர்வூப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கடந்த 16 நாட்களாக பார்லிமென்ட்டை முடக்கியுள்ளோம். ஏப்ரல் 2ம் தேதி நடக்கவிருக்கும் உண்ணாவிரதபோராட்டம் மூலம் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்துவோம். தமிழகத்தில் காலியிடங்கள் நிரம்பிவிட்டதால், புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லலாம். இங்கு எந்த காலியும் இல்லை. இவ்வாறு முதல்வர் பேசினார்.

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnan - Chennai,இந்தியா
31-மார்-201810:10:01 IST Report Abuse
krishnan தயவு செய்து தேதிய மாற்றவும் ஏப்ரல் 2 பதிலா ஏப்ரல் 1 என கூறவும் அதுதான் தமிழர்களான உங்களுக்கும் / எங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Prem Kumar - Bangalore,இந்தியா
30-மார்-201819:49:52 IST Report Abuse
Prem Kumar In India a convenient agitation for political parties is hunger fast. Though they will announce that fast will be for 12 hours starting morning 6 am and ends 6 pm, but normally it will start around 10 am when the leader will arrive to participate . However exactly one leader will come around 5.30 PM to end the fast by offering some juice. These leaders should know that on Ekadasi fasting day ( twice in a month) most of aged Brahmins both males and females ( even some youngsters also) won't take anything which is in food form, for 24 hours starting 6 am to next day 6 am . Like my late grandmother, some even do not drink water also. A self-controlled, real, true, sincere and more than that, not a show up fasting , doing it purely without any publicity.
Rate this:
Share this comment
Cancel
Prem Kumar - Bangalore,இந்தியா
30-மார்-201819:48:19 IST Report Abuse
Prem Kumar இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு மிக சவுகரியமான போராட்டம் என்பது, காலை 6 மணி என அறிவித்து 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வெற்றிகரமாக நடத்தும் உண்ணாவிரத போராட்டம் தான். இதைவிட அதிகமான நேரம் - நீர் கூட அருந்தாமல் - பல பிராமணர்கள் ஏகாதசி அன்று (மாதம் இரண்டு முறை) உபவாசமிருக்கிறார்கள் என்பதை இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X