காவிரி வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் வேண்டும்: மத்திய அரசு| Dinamalar

காவிரி வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் வேண்டும்: மத்திய அரசு

Added : மார் 31, 2018 | கருத்துகள் (110)
Advertisement
Cauvery Board, Supreme Court verdict, Central Government petition, காவிரி வாரியம், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு , காவிரி மேலாண்மை வாரியம் , சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு , காவிரி பிரச்னை, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு, ஸ்கீம் விளக்கம் , 
 Central Government petitioned the Supreme Court, Cauvery Management Board,Cauvery dispute, Cauvery Water Treatment Committee,

புதுடில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி பிரச்னையில், மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழுவை, ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என, பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறு வார அவகாசம், நேற்று முன்தினத்துடன்(மார்ச் 29) முடிந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், காவிரி வாரிய உத்தரவில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தீர்ப்பை அமல்படுத்த 3 மாத அவகாசம் அளிக்க வேண்டும். தீர்ப்பாயத்தின் பரிந்துரைகளை மாற்றி நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா? மத்திய அரசு உருவாக்கும் வாரியத்திற்கு, தீர்ப்பாயத்தை விட கூடுதல் கடமைகள் இருக்கலாமா? என கூறப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
03-ஏப்-201815:42:58 IST Report Abuse
vnatarajan காங்கிரஸ் கட்சியின் மேலிடம் வாரியம் அமைக்க திருநாவுக்கரசின் குரலுக்கு ஆதரவு கொடுக்கிறதா அல்லது வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகாவின் சித்தராமைய்யாவிற்கு ஆதரவு கொடுக்கிறதா. அல்லது இரண்டும் இல்லாமல் மவுனம் காத்து வாயையும் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு இருக்கிறதா. அப்படியும் இல்லை என்றால் மோடியே இதை கையாளட்டும் என்று கண்டதும் காணாமலும் இருக்கிறதா. சோனியாவும் ராகுலும்தான் இதற்கு பதில் சொல்லணும் வாரியம் அமைந்தால்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற அதிக வாய்ப்புண்டு. இதற்காகவே தமிழ் நாட்டில் திமுகா வுடன் கைகோர்த்து காங்கிரஸ் தர்ணா செய்து வருகிறது. இதற்கெல்லாம் அஞ்சாமல் கர்நாடகா தேர்தல் முடியும் வரை மோடி வாரியத்தை அமைக்காமல் இருந்தால் பிஜேபி கர்நாடகாவில் வெற்றி பெற்றுவிடுமோ என்ற பயமும் காங்கிரஸிற்கு இருக்கிறது.தற்போது சோனியாவும் ராகுலும் மதில் மேல் பூனையாக இருக்கிறார்கள். சித்தராமையாவிற்கு ஆதரவா அல்லது திருநாவுக்கரசுக்கு ஆதரவா அவர்கள் இருவரும்தான் வாய் திறக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
01-ஏப்-201813:00:41 IST Report Abuse
Unmai vilambi ஜெயலலிதா இறந்த அன்றே தமிழ்நாட்டை டெல்லியில் அடகுவைத்தாகிவிட்டது . இனி எப்படி கூவினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை .
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
31-மார்-201822:23:34 IST Report Abuse
s t rajan போங்கய்யா வெங்காயங்களா.. போய் உங்கள் அன்னை சோனியா வீட்டு முன்னாலே கூடி ஒப்பாரி வையுங்க....ஒரே ஒரு மாகாணத்தில் இருக்கக் கூடிய செய்த ராவணனை தலையில் அடித்து காவிரி வாரியம் அமைக்க ஒத்துக்க சொல்லி வங்கிக் கத்துக்கு......காங்கிரஸ் தேர்தலில் ஜெயிககணுமுன்னு நினைக்கலாம்..... ஆனா பிஜேபி நினைக்கக் கூடாதா.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X