பொது செய்தி

இந்தியா

விற்றது டீ: பெற்றது கோடி

Updated : மார் 31, 2018 | Added : மார் 31, 2018 | கருத்துகள் (70)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய பயணத்தின் போது, சுவைத்த தேநீரை மறக்க முடியாத பெண் ஒருவர், அமெரிக்காவில் அதனை தயாரித்து விற்று கோடீஸ்வரியாகியுள்ளார்.அமெரிக்காவின் கொலராடாவை சேர்ந்தவர் புரூக் எடி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், 2002 ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் சுவைத்த தேநீர் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. சொந்த ஊருக்கு திரும்பிய பின்னரும் அதன் சுவையை
Bhakti Chai Tea, USA Woman,Brook Eddie,பக்தி சாய் தேநீர், அமெரிக்கா பெண், அமெரிக்காவின் கொலராடா,  புரூக் எடி, பக்தி சாய் நிறுவனம், இந்தியாவில் சுற்றுப்பயணம் ,அமெரிக்கா சிறந்த தொழில்முனைவோர் பட்டியல், 
 America Colorado,  Bhakti Chai Company, Tour in India, America Best Entrepreneur List,

புதுடில்லி: இந்திய பயணத்தின் போது, சுவைத்த தேநீரை மறக்க முடியாத பெண் ஒருவர், அமெரிக்காவில் அதனை தயாரித்து விற்று கோடீஸ்வரியாகியுள்ளார்.

அமெரிக்காவின் கொலராடாவை சேர்ந்தவர் புரூக் எடி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், 2002 ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் சுவைத்த தேநீர் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. சொந்த ஊருக்கு திரும்பிய பின்னரும் அதன் சுவையை எடியால் மறக்க முடியவில்லை.
கொலரடா நகரில் ஏராளமான காபி கடைகள் உள்ளன. அங்கு சென்று அவர் தேநீர் சுவைத்த போதும், இந்தியாவில் கிடைத்த சுவை அவருக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து, 2006 முதல், வீட்டில் தேநீர் தயாரித்து, பக்தி சாய் என்ற பெயர் வைத்து, தனது காரில் பின் பகுதியில் வைத்து பகுதி நேரமாக விற்பனை செய்ய துவங்கினார். இஞ்சி மற்றும் மசாலா சேர்த்து அவர் தயாரித்த தேநீருக்கு பலர் வாடிக்கையாளர்களாக மாறினர். இதனையடுத்து, புரூக் தயாரித்த தேநீர் பல காபி கடைகளில் விற்பனையானது.


முழு நேர வேலை:மேலும், 2007 முதல் இணையதளம் மூலமும் விற்பனை துவங்கினார். வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, முழுநேர வேலையை விட்டுவிட்டு, தேநீர் விற்பனையில் முழு கவனம் செலுத்தினார்.விற்பனை மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்யும் வகையில் 2008 ல் பக்தி சாய் நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்தது.

எடி புரூக்கின் கடும் உழைப்பு காரணமாக, அமெரிக்காவின் தொழில்முனைவோர் பத்திரிகையின், சிறந்த தொழில்முனைவோர் பட்டியலில் 5வது இடத்திற்குள் வந்தார். இந்த வருடம் 7 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக பக்தி சாய் நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
parentsin@gmail.com - chennai,ஆஸ்திரேலியா
05-ஏப்-201818:19:02 IST Report Abuse
parentsin@gmail.com டி யா காப்பியா எல்லாம் அவசியமில்லை. முதலிலே ஒரு அர்ப்பணிப்பு , செய்யும் தொழிலிலை குறித்த அறிவு எல்லாவற்றிற்கும் மேலாக தேவ செயல் நேரிட வேண்டும். அவ்ளோதான்.
Rate this:
Cancel
Civilion - Trichy,இந்தியா
01-ஏப்-201810:51:42 IST Report Abuse
Civilion பக்தி சாய் அல்ல பத்தி சாய்
Rate this:
Cancel
Raju - jersi,யூ.எஸ்.ஏ
01-ஏப்-201803:47:52 IST Report Abuse
Raju Brook எட்டி டீக்கு copy ரைட் வாங்க வேண்டும். gst போடவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X