ஐஐடிக்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐஐடிக்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை

Updated : மார் 31, 2018 | Added : மார் 31, 2018 | கருத்துகள் (11)
Share
பெங்களூரு: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடியில் 34 சதவீத பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பாக வெளியான தகவல்: இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள ஐஐடியில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 4 பேராசிரியர்கள் உள்ளனர். புதிதாக துவக்கப்பட்ட பாலக்காடு, திருப்பதி, கோவா ஐஐடிக்களிலும் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது. கோவா ஐஐடியில்
Lack of professors,Karnataka Dharwad IIT,Chennai IIT,ஐஐடியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை, இமாச்சல பிரதேச மண்டி ஐஐடி, கோவா ஐஐடி,கர்நாடக தாராவாட் ஐஐடி, கோரக்பூர் ஐஐடி, கான்ப்பூர் ஐஐடி, டில்லி ஐஐடி, மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி, 
The lack of professors in IIT, Himachal Pradesh Mandi IIT,
Goa IIT, 
Gorakhpur IIT, Kanpur IIT, Delhi IIT, Mumbai IIT,

பெங்களூரு: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐஐடியில் 34 சதவீத பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல்:
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் உள்ள ஐஐடியில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 4 பேராசிரியர்கள் உள்ளனர். புதிதாக துவக்கப்பட்ட பாலக்காடு, திருப்பதி, கோவா ஐஐடிக்களிலும் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது. கோவா ஐஐடியில் 62 %, கர்நாடக மாநிலம் தாராவாட் ஐஐடியில் 47 %, கோரக்பூர் ஐஐடியில் 46 %, கான்ப்பூர் ஐஐடியில் 37 %, டில்லி ஐஐடியில் 29 % மும்பை ஐஐடியில் 27 % சண்டிகரில் உள்ள ஐஐடியில் 58 சதவீதம், சென்னை ஐஐடியில் 28 சதவீதம், பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.


என்ன காரணம்


பேராசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கல்வியாளர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் ஐஐடியில் பட்டதாரிகள் 15 சதவீதம் பேர் பேராசிரியர் பணிக்கு வருவார்கள். ஆனால், இது தற்போதுகுறைந்து வருகிறது. 50 சதவீத பட்டதாரிகள் வெளிநாட்டிற்கு செல்கின்றனர். சிலர் மென்பொருள் மற்றும் ஐடி நிறுவனத்திற்கு சென்று விடுகின்றனர். நாடு முழுவதும் ஐஐடி மற்றும் என்ஐடிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஆனால், அதற்கு தகுந்தவாறு தகுதியான பேராசிரியர்கள் கிடைக்கவில்லை. போதுமான சம்பளம், பிஎச்டி படிக்க பட்டதாரிகள் ஊக்கப்படுத்தாத காரணங்களால் பேராசிரியர் பணிக்கு வருவதில்லை என்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X