கிபித்து: இந்திய சீன எல்லையான திபெத்தை ஒட்டிய அருணாச்சல் பிரதேச பகுதிகளில் இந்திய ராணுவம் கூடுதல் படைகளை குவித்துள்ளது.
சமீப காலமாக இந்தியா, சீனா இடையிலான டோக்லாம் பிரச்னை விஸ்வரூபமெடுத்து வருகிறது. இரு நாட்டு படைகள் குவிப்பால் பதட்டம் ஏற்பட்டது. சமீபத்தில் படைகள் வாபஸ் பெறப்பட்டாலும் சர்ச்சைகள் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் திபெத் மற்றும் அருணாசல பிரதேச பகுதியில் இந்தியா கூடுதல் படை குவிப்புக்கும் ராணுவ ரோந்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.திபெத்தை ஒட்டிய திபங், டாவ்தேவ்லே பகுதிகளில் ராணுவ படை குவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிபித்து பகுதியின் ராணுவ ஜெனரல் ஒருவர் கூறுகையில்; சீனாவை தற்போது கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் படைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE