சென்னை: சென்னை மெரினாவில் தடையை மீறி போராடியவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்துக்காக, போராட்டம் நடத்தியதால் சொந்த ஜாமினில் விடுவித்தது சென்னை காவல்துறை.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடக்கலாம் என உளவுத்துறையினர் தகவல்படி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் இளைஞர்கள் போராட்டம் நடத்துவது போன்ற புகைப்படங்கள் வெளியானது.
போராட்டக்காரர்களை தேடிய போலீஸ்
இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். போராட்டக்காரர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE