புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், அதிக எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைத்திருப்பதற்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சிறைச்சாலைகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகஅளவில் கைதிகளை அடைத்து வைத்துள்ளது தொடர்பான வழக்கு,உச்சநீதிமன்றத்தில்நிலுவையில் உள்ளது.'இந்த நிலைமையை சீராக்க, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பது பற்றி, 2017 மார்ச்சுக்குள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சிறைத்துறை, ஐ.ஜி.,க்கள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக, பதில் எதுவும் இதுவரைஅளிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள், எம்.பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, நாடு முழுவதும் உள்ள சிறைகளில், அதிக எண்ணிக்கையிலான கைதிகளை அடைத்து வைத்திருப்பதற்கு, அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
'உங்களால் கைதிகளை உள்ளே வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால், வெளியே அனுப்பி விடுங்கள்; அவர்களை சிறையில் மிருகங்களைப் போல அடைத்து வைக்கக் கூடாது' என,நீதிபதிகள் கூறினர்.
இது தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.'விளக்கம் அளிக்கவில்லை என்றால், அது நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும்' என்றும், நீதிபதிகள்தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE