காலத்தின் கட்டாயத்தால் வில்லனானேன் - நடிகர் ஜான்விஜய் பளீச்

Added : ஏப் 01, 2018 | |
Advertisement
பந்தாடும் வேகத்தில் வந்தாடும் சுந்தரன்; சொப்பன சுந்தரிகளும் மயங்கும் சொர்க்கபுரி இந்திரன்; தேக்கந் தோட்டத்து தேகத்தை கொண்ட இந்திரன்; சினிமாவில் மின்ன, நட்சத்திர நாயகனாக வலம் வருவதைவிட, வில்லன், காமெடியன் என்றால் கலக்கலாம் என நுட்பமறிந்து வெற்றி முரசு கொட்டுபவர் நடிகர் ஜான் விஜய்.41. முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜீத், ஆர்யா போன்றோருடன் வில்லனாக களம் கண்டவர்.
காலத்தின் கட்டாயத்தால் வில்லனானேன் - நடிகர் ஜான்விஜய் பளீச்

பந்தாடும் வேகத்தில் வந்தாடும் சுந்தரன்; சொப்பன சுந்தரிகளும் மயங்கும் சொர்க்கபுரி இந்திரன்; தேக்கந் தோட்டத்து தேகத்தை கொண்ட இந்திரன்; சினிமாவில் மின்ன, நட்சத்திர நாயகனாக வலம் வருவதைவிட, வில்லன், காமெடியன் என்றால் கலக்கலாம் என நுட்பமறிந்து வெற்றி முரசு கொட்டுபவர் நடிகர் ஜான் விஜய்.41. முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜீத், ஆர்யா போன்றோருடன் வில்லனாக களம் கண்டவர். தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தார், இதோ...

* உங்களை பற்றிசொந்த ஊர் நாகர்கோவில், சென்னை லயோலா கல்லுாரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தேன். ஒரு குறும்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டேன். அந்த இயக்குனரும் என்னை கதாநாயகனாகத்தான் நினைத்து இருந்தார். அவர் வெளிநாடு போய்விட்டு திரும்புவதற்குள் எனது உடல் அமைப்பு மாறி விட்டது. எனவே, என்னை வில்லனாக நடிக்க வைத்தார். காலத்தின் கட்டாயத்தால் வில்லனானேன்.

* முதல் படம்ஓரம்போ. இதில் துாத்துக்குடியில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் மாதிரி வில்லனாக நடித்தேன். தற்போது சாமி-2 படத்தில் வில்லனாக நடிக்கிறேன். கதாநாயகன் - வில்லன் வித்தியாசம்கதாநாயகர்களை படத்தில் நல்லவர்களாக காட்டுவர். மனதிற்குள் வில்லன் தன்மை இருக்கும். ஆனால் நாங்கள் படத்தில் மனதிலுள்ள வில்லத்தன்மையை காட்டுவோம். ஆனால் வெளியில் நல்லவர்கள்.

* நாயகனாக முயற்சிக்கவில்லையாகதாநாயகனாக நடித்தால் இரண்டு படம் ஓடும். பல படங்கள் ஊத்திக் கொள்ளும். வில்லன் என்றால் எல்லா படங்களிலும் நடிக்கலாம். காமெடி, குணசித்திர நடிகராக இதுவரை 67 படங்களில் நடித்துள்ளேன். மலையாளம், தெலுங்கு, கன்னடம் படத்திலும் நடிக்கிறேன்.

* கபாலி படம் எப்படிகபாலி படத்தில் ரஜினியுடன் நடித்த பின், ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். பலரும் என்னை பற்றி பேசுகின்றனர்.

* பிடித்த இசைஅமைப்பாளர்இளையராஜா. அவரின் திருவாசகம் மிகவும் பிடித்தது. விஜய் ஆண்டனி, சி.எஸ்.சாம் ஆகியோரும் பிடிக்கும்.

* ரஜினி, கமல் கட்சியில் எது பிடிக்கும்இருவரும் ஒன்று சேர்ந்தால் எதையும் ஜெயிக்கலாம். ஒரு மாடு தனியாக இருந்தால் சிங்கங்கள் வேட்டையாடிவிடும்.

* இளைஞர்களுக்கு ஏதாவது...எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வருத்தப்படக்கூடாது. துன்பங்களை கண்டு பயப்படக்கூடாது. சிரிக்க வேண்டும்.
இவரை madhanelangovan@Yahoo.co.inல் தொடர்பு கொண்டு வாழ்த்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X