வட மாநில'பந்த்'; 9 பேர் பலி| Dinamalar

வட மாநில'பந்த்'; 9 பேர் பலி

Updated : ஏப் 02, 2018 | Added : ஏப் 02, 2018 | கருத்துகள் (95)
Advertisement
Supreme Court verdict,Bharat Bandh,SCST Act,பாரத் பந்த், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, வன்முறை, வட மாநிலங்களில் போராட்டம் , தலித் அமைப்புக்கள் போராட்டம், மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கம்,   Scheduled Castes and Scheduled Tribes Act, Supreme Court Judgment, Violence, Struggle in the North india, Dalit Organizations Struggle, Mobile Internet Service Freezing,

புதுடில்லி : தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தை நீர்த்து போக செய்யும் அளவிற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளதாகக் கூறி வட மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தால் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. வன்முறை சம்பவத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு தலித் அமைப்புக்கள் நடத்தும் இந்த போராட்டம் காரணமாக பஸ் சேவை, மொபைல் இன்டர்நெட் சேவைகளை முடக்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்த போதிலும் பல பகுதிகளில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜெய்பூர் - டில்லி இடையேயான ரயில்களையும் போராட்டக்காரர்கள் மறித்துள்ளனர்.

ஜலந்தர், பக்வாரா உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. ஜெய்ப்பூரில் நூற்றுக்கணக்கான பெண்கள் கையில் கட்டை, கம்புகளுடன் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம் உள்ளிட்ட சேவைகளும் முடங்கி உள்ளன. டில்லியிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சில இடங்களில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 8 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ம.பி.,யில் 6 பேர், உ.பி.,யில் 2 பேர் மற்றும் உ.பி.,யில் ஒருவர் என மொத்தம் 9 பேர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
02-ஏப்-201823:47:01 IST Report Abuse
Agni Shiva இந்த போராட்டங்கள் கான் கிராஸ் ஆளும் கர்நாடகாவில் நடைபெற வில்லை. மாறாக மத்திய பிரதேஷ், உததர் பிரதேஷ், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தான் நடந்திருக்கிறது. இதில் இருந்து இதற்கு பின்னால் கரையான்புற்றின் கை இருப்பது மிக தெளிவாக தெரிகிறது. இனி வரும் மாதங்களில் மத்திய அரசிற்கு எதிராக ஒவ்வொரு ஜாதிகளும், கறியில் உப்பில்லை, சத்தில்லை என்ற மிகப்பெரும் காரணங்களுக்காக மிக பெரும் போராட்டங்களை அறிவிப்பார்கள். பல்வேறு ஜாதிகள் தூண்டிவிடப்பட்டு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கும். கலவரங்கள் வெடிக்கும். துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு வன்முறை வெறியாட்டம் நடக்கும். இந்த அனைத்து போராட்டங்களுக்கும் பின்னால், இந்த பரந்த தேசத்தை வெட்டி பிளந்த தேசத்துரோகிகள் கூட்டமான கான் கிராஸ் கட்சியின் ரத்தம் தோய்ந்த கை நிச்சயமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஏப்-201822:30:41 IST Report Abuse
முக்கண் மைந்தன் @ Balakrishnan : இந்தியா பொறந்தே எழுவது (70 ) வருசந்தான் ஆவுது (இது நம்ம Constituition னுக்கும் பொருந்தும்).... இதுல 2000 வருசமா எத்தினி பள்ளிக்கூடம், காலேஜு, Govt & Pvt Sector jobs இருந்துதுன்னு சொல்ல முடியுமா....? 1930 வருசமா எல்லாத்தயும் செஞ்சது இந்தியா துண்டுதுண்டா இருந்தப்ப ஆண்ட ராசாக்களும் வெள்ளக்காரனவளுந்தான்.... சரீ...., உங்களோட தாத்தா, பாட்டன், முப்பாட்டன் செஞ்சதுக்கெல்லாம் ஒங்குளுக்கு ஓரவஞ்சன செஞ்சா ஒத்துப்பீங்களா...? இல்ல, 1930 வருசமா நீங்க பரம்பர பரம்பரயா ஆண்டு அனுபவிச்சிட்டு வர்ற நில-புலன்கள மத்தவங்களோட SHARE பண்ண வேண்டிதுதான....? ஒங்குளுக்கெல்லாம் QUOTA / RESERVATION னும் வேணும், ஆண்டு அனுபவிக்க நில புலன்களும் வேணும்... மத்தவங்க வெரல சூப்பிட்டு இருக்கணுமா....? ஏன்யா இப்டி பினாத்துற....? இந்த பொழப்புக்கு................
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
02-ஏப்-201821:55:40 IST Report Abuse
Loganathan Kuttuva வெளி நாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு பிரச்சனை கிடையாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X