குழந்தையை வெள்ளையாக்க கருங்கல்லில் தேய்த்த பாசக்கார தாய்

Added : ஏப் 02, 2018 | கருத்துகள் (21)
Advertisement
மத்திய பிரதேசம்,பள்ளி ஆசிரியை சுதா திவாரி, தத்து குழந்தை, உத்தரகாண்ட் குழந்தைகள் காப்பகம், கருங்கல்லில் தேய்த்த தாய்,  Madhya Pradesh, Uttarakhand Children Archive,  School Teacher Sudha Tiwari, adoptive child,

போபால் : மத்திய பிரதேசத்தின் நிஷத்புரா பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுதா திவாரி. இவரது கணவர் தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.

சுதா திவாரி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உத்தரகாண்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தை கருப்பாக இருந்ததால், தத்தெடுத்தது முதல் அதிருப்தியில் இருந்த சுதா, அக்கம் பக்கத்தினரிடம் யோசனை கேட்டுள்ளார். அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில், 5 வயதாகும் அந்த குழந்தையின் உடலை கருங்கல்லில் வைத்து தேய்த்துள்ளார். இதனால் அந்த குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.

அந்த குழந்தையை கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சுதாவின் சகோதரியின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற குழந்தை நல அமைப்பினரும், போலீசாரும் குழந்தையை மீட்டுள்ளனர். ஆசிரியை சுதாவையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் சுதா, அந்த குழந்தையை சட்டவிதிகளுக்கு புறம்பாக தத்தெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குழந்தை, குழந்தைகள் நல அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
03-ஏப்-201805:36:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஏ கருத்தவன்லாம் கலீஜாம் கெளப்பிவிட்டாங்க, .. அந்த கருத்த மாத்து .. உழைச்சவன் டா நம்மாளு ஒதுங்கி நீக்காத, வா வா தெறிக்க விடு ...
Rate this:
Share this comment
Cancel
Ganesh - chennai,இந்தியா
03-ஏப்-201800:02:37 IST Report Abuse
Ganesh Poor child. இதைத்தான் கர்மா வினை என்பார்கள் போல. பாவம் இந்த குழந்தை.
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
02-ஏப்-201821:04:20 IST Report Abuse
kundalakesi நான் பார்த்த வரை அறிவு கெட்ட பூபதிகள் யூபி மபி பிஹாரில் மிக அதிகம். ஆனால் ஏமாற்றுவதில், டிக்கெட்டில்லா (முக) பயணங்களில், சின்ன திருட்டுக்களில் , படா தேர்ச்சி . இங்க ராமனும் புத்தனும் அசோகனுக்கு மௌர்யனும் பிறந்து கோலோச்சினார் எனுமளவுக்கு வறுமையும் ஏமாற்றும். ஜாக்கிரதை , இப்போ தமிழகமும் இந்த மோடில் இருக்கிறது.
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
03-ஏப்-201813:03:46 IST Report Abuse
Pasupathi Subbianஇவ்வளவு அடிமட்ட புத்திசாலிகள் தமிழகத்தில் இல்லை. மற்றபடி பேராசை, சோம்பேறித்தனம், இலவசம் என்று அலைவது பொதுவான அம்சம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X