அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரி வாரியம்: அதிமுக உண்ணாவிரதம்

Updated : ஏப் 03, 2018 | Added : ஏப் 03, 2018 | கருத்துகள் (98)
Share
Advertisement
CM Palanisamy, ADMK Fasting, Cauvery management board, அதிமுக உண்ணாவிரத போராட்டம் , காவிரி மேலாண்மை வாரியம், உண்ணாவிரதம் போராட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், 
AIADMK fasting protest, fasting protest, Chief Minister Edappadi Palanisamy, Deputy Chief Minister Panneerselvam,

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், அதனை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சென்னையில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை. இதனால், மத்திய பா.ஜ., அரசு மீது முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மூன்று மாதம் அவகாசம் கோரியும் மத்திய அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும், வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி, மதுரையில் செல்லூர் ராஜூ, உதயகுமார், கோவையில் அமைச்சர் வேலுமணி திருப்பூரில் உடுமலை ராதாகிருஷ்ணன், ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் திருவாரூர் காமராஜ், கடலூர் எம்சி சம்பத், தஞ்சாவூரில் துரைக்கண்ணு, சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி, நாமக்கல்லில் தங்கமணி, சரோஜா, திருவண்ணாமலையில் சேவூர் ராமச்சந்திரன், திருவள்ளூரில் பெஞ்சமின், திண்டுக்கல்லில் சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடக்கிறது. திருச்சியில் கே.பி.முனுசாமி, புதுச்சேரியில் மாநில செயலர் புருசோத்தமன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JANANI - chennai,இந்தியா
03-ஏப்-201818:16:38 IST Report Abuse
JANANI thamilagathukku thevaiyaana melaanmai vaariyathai mathiya arasu amaithe theera vendum
Rate this:
Cancel
ram - chennai,இந்தியா
03-ஏப்-201817:47:34 IST Report Abuse
ram அதிமுக அரசு காவேரி பிரச்சனையை சுலபமாக முடிக்க முயற்சித்து வருகிறது
Rate this:
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
03-ஏப்-201818:39:05 IST Report Abuse
பலராமன்ஹை ?...
Rate this:
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
03-ஏப்-201817:26:00 IST Report Abuse
த.இராஜகுமார் தக்காளி, வெஜிடபிள் பிரியாணியை வெளுத்து வாங்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் இன்று காலையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டிருக்கும் நிலையில் மாவட்டம்தோறும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.உண்ணாவிரதப் பந்தலிலிருந்து தொண்டர்கள், மகளிரணியினர் பகுதி பகுதியாகப் பிரிந்து வந்து சாப்பிடும் போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுவும் காவிரி மேலாண்மைக்கான போராட்டம்தான். ஆனால், இது உண்ணும் போராட்டம்” என்று கலாய்த்துச் செல்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X