புதுடில்லி: எஸ்சி மற்றும் எஸ்டி சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தது. அதில், இந்த சட்டத்தின் கீழ் உடனடி கைது கூடாது. முன்ஜாமின் தரலாம் எனக்கூறப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாங்கள் எஸ்சி/எஸ்டி சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதே எங்களது நோக்கம் எனக்கூறினர்.
தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன், இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்டு வி சாரணையை 10 நாளுக்கு ஒத்திவைத்தனர்.