அதிகாரிகளுக்கு 'முட்டு' கொடுக்கும் 'குட்டி' ராஜாக்களின் ராஜாங்கம்!

Added : ஏப் 03, 2018
Share
Advertisement
''அப்பப்பா.... எங்கு பார்த்தாலும், காவிரி... காவிரி'ன்னு ஒரே போராட்டமா இருக்குதே...'' என்றவாறு, ஹெல்மெட்டுடன், மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்தாள் சித்ரா. அப்போதுதான், பக்கத்து வீட்டிலிருந்து திரும்பிய மித்ரா, ''இப்பதான் வந்தீங்களா?'' என்றதும், ''ஆமாம், என்ன காலையிலயே, பக்கத்து வீட்டுக்கு 'விசிட்' என்ன விசேஷம்?'' என்று கேள்வி எழுப்பினாள்
அதிகாரிகளுக்கு 'முட்டு' கொடுக்கும்  'குட்டி' ராஜாக்களின் ராஜாங்கம்!

''அப்பப்பா.... எங்கு பார்த்தாலும், காவிரி... காவிரி'ன்னு ஒரே போராட்டமா இருக்குதே...'' என்றவாறு, ஹெல்மெட்டுடன், மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்தாள் சித்ரா.

அப்போதுதான், பக்கத்து வீட்டிலிருந்து திரும்பிய மித்ரா, ''இப்பதான் வந்தீங்களா?'' என்றதும், ''ஆமாம், என்ன காலையிலயே, பக்கத்து வீட்டுக்கு 'விசிட்' என்ன விசேஷம்?'' என்று கேள்வி எழுப்பினாள் சித்ரா.

''நாலு நாள் தொடர்ச்சியா லீவுக்கு அப்புறம், ஸ்கூலுக்கு போறதுக்கு, பக்கத்து வீட்டு 'வாலு' ஒரே அடம் பண்ணிச்ச. நாந்தான் சமாதானம் செய்து அனுப்பிட்டு வந்தேன்,'' என்றாள் மித்ரா.

''குழந்தைங்க அடம் பிடிக்கறது சகஜம்தானே. ஆனா, ஆபீசர்களே சில சமயம், அடம் பிடிக்கறாங்களாம்,'' என்று புதிர்போட்டாள் சித்ரா.

''அப்படி யாரை சொல்றீங்க?'' என்று ஆர்வமாக கேட்டாள் மித்ரா.

''நம்ம மாவட்ட மதுவிலக்கு ஆபீசர் தான். அவரோட ஜீப்புல 'ரோலிங் லைட்' வைத்துள்ளார். ஆனானப்பட்ட பிரதமரே, தன்னோட காரில் வைச்சுக்கலை. இதைப்பத்தி மேலிடத்துக்கு புகார் போனது. ஆனாலும், தன் ஜீப்பில் விளக்கு இருந்தே ஆக வேண்டும் என அடம் பிடித்த அவர், 'ப்ளூ' கலருக்கு பதில், மூன்று கலர்களில் 'லைட்'டை மாட்டிட்டாராம்,'' என்றாள் சித்ரா.

''அவர் ஏன், இப்படி, 'லைட்' விஷயத்தை, 'லைட்டா' எடுத்துக்கிட்டு, இருக்கிறாருன்னு தெரியலையே? ''அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...''என்று கவுண்டமணி பாணியில் சிரித்தாள் மித்ரா.

''மகாவீர் ஜெயந்தி அன்னைக்கு, 'சரக்கு' விற்பனை 'வழக்கம் போல்' தான் இருந்துதா?'' கேட்டு கொண்டிருக்கும் போதே, மித்ராவின் அம்மா, 'ஜில்'லுன்னு மோர் கொண்டு வந்தார். அதை வாங்கி, ஒரே மடக்கில் குடித்த சித்ரா, ''மகாவீர் ஜெயந்தி அன்னைக்கு, 'சரக்கு' விற்பனை அமோகமாக நடந்துதாம்?'' என்றாள்.

''அது எல்லாம் 'மாமூலாக' ஒரு குறையுமில்லாமல், நடந்திருக்கு. லிங்கேஸ்வரர் ஊரில், சட்ட விரோத 'சரக்கு' விற்கிற ஆட்களுக்கு, போலீசார் தரப்பில் முதல்நாளே எச்சரிக்கையா சொல்லிட்டாங்களாம். அன்னைக்கு காலையில மறுபடியும் ஒரு ரவுண்ட் போய் எச்சரிக்கை செஞ்சிருக்காங்க. ஆனாலும், ஆளுங்கட்சி பிரமுகர்கள் 'பாரில்' ஜோரா 'சரக்கு' வித்தாங்களாம். அதிலும், குறிப்பா, பேரவை பொறுப்புல உள்ள ஒருத்தர், 'என்னை, யாரும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லியே வித்தாராம்,'' என்றாள் மித்ரா.

''அடடா... வார்த்தைகளை 'சிந்தா'மல், 'மணி'போல் பேசுகிறாயே. இதைக்கேளு. மாநாடு முடிஞ்சு வந்ததும் போலீசை கண்டிச்சு போராட்டம் நடத்தறதாக தோழர்கள் முடிவு பண்ணியிருக்காங்களாம் தெரியுமா?'' என்றாள் சித்ரா.

''ஆமாங்க்கா, நானும் கேள்விப்பட்டேன். மன்னார்குடியில் நடந்த மாநில மாநாட்டுக்கு, கோவைலிருந்து கொடி பேரணி போயிருக்காங்க. ஆனால், வாகனங்களில் கொடி கட்டக்கூடாதுன்னு,
போலீசார் தடை போட்டிருக்காங்க. இதனால், தோழர்களுக்கு 'செம' கோபமாம். இருந்தாலும், முடிச்சுட்டு வந்து, இவங்களை ஒருகை பார்த்துக்கலாமுன்னு போய்ட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

மேஜையில் இருந்த நாளிதழை வாசித்த சித்ரா, ''இந்த காவிரி பிரச்னையில், ஆளாளுக்கு மாறிமாறி போராட்டம் அறிவிச்சா, ஜனங்க என்ன பண்ணுவாங்களோ?. அதிலும், விவசாயிகளை விட, உதிரிக்கட்சிக்காரங்களோட அலப்பறை தாங்க முடியலை,'' என்றாள்.

''விவசாயிகள்னு சொன்னதும் ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வருது. சப்-கலெக்டர் ஆபீசில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில மத்தவங்களுக்கு என்ன வேலையின்னு தெரியலை.

''தனிப்பட்ட பிரச்னையை பேசி, விவசாயிங்க நேரத்த எடுத்துக்கறாங்க. அதிலும், பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஒருத்தரு, தடிமனான வார்த்தையில பேசி, நேரத்த வீணடிக்கறாருன்னு, விவசாயிகள் நொந்து போயிட்டாங்க,'' என்றாள் மித்ரா.

''இது அவங்களுக்கே புரியணும்,'' என்ற சித்ரா, ''கூட்டுறவு தேர்தல்ல, எதிர்க்கட்சிகளுக்கு வேட்டு வைக்க ஆளுங்கட்சி எப்படியெல்லாம் நாடகம் போடறாங்க'' என்றாள்.

''என்னக்கா நீ, 'பாரின் ரிட்டர்ன் மாதிரி பேசறே. போன தடவையும் இப்படித்தானே நடந்தது,''
என்றாள் மித்ரா.

''தி.மு.க., காரங்களுக்கு, வேட்புமனுவே கிடைக்கலையாம். 'இது எங்க ஆட்சிப்பா. கூட வந்து வம்பு பண்ணாதீங்க. நாளைக்கு நீங்க வந்தாலும் நாங்க வரமாட்டோம். போயிட்டே இருங்கப்பு'ன்னு ஆளுங்கட்சிக்காரங்க அனுப்பி வச்சாங்களாம்'' என்றாள் சித்ரா.

''இன்னும் ஓ.பி.எஸ்.,- ஈ.பி.எஸ்., கோஷ்டி பூசல் இருக்குதாமா?'' என்று பொடி வைத்தாள் மித்ரா.

''ஆமாமா. பொங்கலுார் யூனியன் சொசைட்டியில, ஓ.பி.எஸ்., ஆதரவு தலைவர்கள் இருந்தாங்களாம். ஆனா, இந்த தடவ வேற ஆளுக்கு 'சீட்' கொடுத்தாங்களாம். இதை எதிர்த்து, சண்முகமானவர், சி.எம்., வரைக்கும் பிரச்னையை கொண்டு போயிட்டாராம். எல்லாத்தையும் கேட்ட, சி.எம்.,. 'ரொம்ப கோவப்படாதேப்பா. பேசிக்கலாம்,'னு சொல்லி சமாதானம் செஞ்சிருக்காரு. அப்புறம்தான், பழைய தலைகளுக்கு 'சீட்' கிடைச்சிருக்குதாம்,'' என்று விளக்கினாள் சித்ரா.

''அரசியல்வாதிகளிடம் 'கோஷ்டி' என்றால், அதிகாரிகள்கிட்ட 'ஈகோ' பிரச்னை. திருப்பூர் பி.டி.ஓ., ஆபீசுல, தனி அலுவலர் 'ரிட்டயர்டு' ஆகறாராம். கடைசி நேரத்துல எதுக்கு வம்புனு,
எதிலும் சீக்கிரம் கையெழுத்து போடறதே இல்லையாம். இதனால, பல பைல், முடங்கி
இருக்குதாம்.
பல 'மாஜி' ஊராட்சி தலைவருங்க, 'எவ்வளவு நெம்பினாலும் வேலை ஆகலை. வருமானமும் இல்லை. இவரு ஏன்தான் இப்படி 'ஈகோ' பார்க்குறாரு'ன்னு, புலம்புறாங் களாம்,'' என்றாள் சித்ரா.

''பேசாம எல்லாத்தையும், திரு'நாகேஸ்வர'ம் போகச்சொல் லுங்க, பரிகாரம் பண்ணா காரியம் ஆயிருமாம்,'' என்றாள் மித்ரா.

''எந்த கோவிலுக்கு போனாலும், என்ன பரிகாரம் பண்ணினாலும், அதிகாரிங்க திருந்த மாட்டாங்கடி. இப்ப பாரு. பி.டி., யோட கார், யூனியனில் நிறுத்தியிருக்காங்கன்னு பேசினோம் தெரியுமா? காரு 'கண்டம்' ஆகற நேரத்துல, 1.60 லட்சம் ரூபாய்க்கு, 'ரிப்பேர்' பார்த்ததா கணக்கு எழுதியிருக்காங்களாம். இவங்களாவது திருந்தறதாவது?'' என்று சலித்து கொண்டாள் சித்ரா.

''ஆமா... மறந்தே போச்சு. இந்த தடவ, கார்ப்ரேஷனில், உபரி பட்ஜெட் போட்டுருக்காங்க. ஆனால், அதிகாரிங்க, எங்களுக்கு போதலையேன்னு புலம்பறாங்க. ஒரு மணிக்கு பட்ஜெட் கூட்டம்னு சொல்லிட்டு, 11:30 மணிக்கே நடத்திட்டாங்க. வறுத்த முந்திரி, மிச்சர், டீ யை கொடுத்து, 'டுபாக்கூர்' நிருபர்களை 'ஆப்' பண்ணீட்டாங்க. அதுக்கப்புறம், ஆளுக்கு ஏத்தமாதிரி, 300, 500ன்னு 'பட்டுவாடா' நடந்தது.''

''அதிலும், ஒரு பிரபல 'டிவி' சேனலை சேர்ந்த சிலர், 'எங்களுக்கும், 300தான் தருவீங்களானு, சண்டை போட்டாங்க. இதைக்கேட்ட பி.ஆர்.ஓ.,வுக்கு வேர்த்து விறுவிறுத்துச்சாம்,'' என்று சொல்லி சிரித்தாள் சித்ரா.

''ஆமாங்க்கா. நானும் கேள்விப்பட்டேன். கார்ப்ரேஷனில், 'மன்னருக்கு', 'லெப்ட் அண்ட் ரைட்டா, ரெண்டு இன்ஜினியரோட ஆட்டம் தாங்க முடியலையாம்.

''இவங்க ரெண்டு பேருதான், கார்ப்ரேஷனையே ஆட்டி படைக்கிறாங்களாம். இதெல்லாம், 'மன்னருக்கு' தெரிஞ்சும்கூட, 'அசோக'வன சீதையை போல், அமைதியா இருக்கறாராம்,'' என்றாள் மித்ரா.

''கார்ப்ரேஷன் 'குட்டி' அதிகாரிகளைப்போல, சவுத் ரேஞ்சில், ஒரு குட்டி 'ஏ.சி.,' மாதிரி ஒருத்தர் இருக்கார். இவருக்கு தெரியாம அந்த ரேஞ்சில் எதுவுமே நடக்காதாம். அதுவும், 'மது, மாது, சூது' இப்படி எல்லா சட்டவிரோத செயலுக்கு வசூலாகும் வைட்டமின் 'ப' வை, இவருதான், மேலதிகாரிக்கு பிரிச்சு கொடுப்பாராம்.

''சப்போஸ், யாராச்சும் இடைஞ்சலா இருந்தாங்கன்னா, 'ஏ.சி.,' கிட்ட சொல்லி, அவங்க மீது நடவடிக்கை எடுக்க வைப்பாராம். ஆனா, இதெல்லாம், 'சீறும்' அதிகாரிக்கு தெரியுமா? இல்லையான்னு? நல்ல போலீஸ்காரங்க பேசிக்கிறாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''ஏதோ. போற போக்கைப்பார்த்தால், நான்தான் 'ஏ.சி.,'ன்னு சொன்னாலும் சொல்வார்போல...'' என்று மித்ரா பேசுகையில், அவளது மொபைல்போன், 'நான்தான்டா இந்த நாட்டுக்கு ராஜா' என்று ரிங் டோனை வெளியிட்டது. 'டிஸ்பிளே'வில், 'பூபதி' என்று வரவும், ''அம்மா... சித்தப்பா, கூப்பிடறார்,'' என்று குரல் கொடுத்தாள்.

உடனே, மித்ராவின் அம்மா போனை வாங்கி பேசிவிட்டு, ''டிபன் ரெடி. சாப்பிட்டுட்டே பேசுங்க,'' என்றார். உடனே, ''டிபன், ஆட்டோ செலவுன்னு கவனிச்சாதான், 'பெட்டிஷன்' வாங்கப்படும்'ன்னு, 'போர்டு' எழுதி வைக்காத குறைதான்,'' என்று சித்ரா, மீட்டிங்கில் பேசுவதுபோல் பாவனை செய்தாள்.

''இது, எங்கே.. எதற்கு.. ?'' என்று கேள்விகளை அடுக்கினாள் மித்ரா.

“அவசரப்படாதடி. பக்கத்துல, கோழிப்பண்ணை ஊர்ல இருக்கற மகளிர் ஸ்டேஷனில்தான். புகார் கொடுக்க யார் வந்தாலும் சரி. அதை வாங்கிட்டு வா. இதை வாங்கிட்டு வா..ன்னு ஒரே
நச்சரிப்புதானாம். இங்க தண்டமா செலவு பண்றதுக்கு பேசாம போயிடாலாமுன்னு, சிலர்
திரும்பியும் போயிராங்களாம்,'' என்றாள் சித்ரா.

''ஓ... 50 சதவீத இடஒதுக்கீடுங்கறது இப்படித்தானோ?'' என்று சொல்லி சிரித்த மித்ராவிடம்,

''சரி... சரி. கெளம்பு. இப்ப போனால் தான், சீக்கிரம் சாமி கும்பிட முடியும்'' என்ற சித்ரா பரபரவென புறப்பட்டாள். ''மம்மி.. நாங்க போயிட்டு வர்றோம். நீங்களும், டாடியும், ஈவினிங் வந்துடுங்க,'' என்றவாறே, வண்டியில் அமர்ந்தாள். உடனே, சித்ரா, பெருமாநல்லுார் நோக்கி வண்டியை செலுத்தினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X