பொது செய்தி

தமிழ்நாடு

போலி வரதட்சணை புகாரில் துன்புறுத்தல் தமிழக அரசுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

Added : ஏப் 06, 2018
Advertisement

சென்னை, போலி வரதட்சணை புகாரில், பல் டாக்டரின் குடும்பத்தினரை கைது செய்து துன்புறுத்திய வழக்கில், தமிழக அரசுக்கு, மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மதுரை, அண்ணா நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார்; பல் டாக்டர். இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், தாக்கல் செய்த மனு:என் மனைவிக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.அதனால், மூன்று லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, என் மீதும், என் தாயார் விஜயலட்சுமி மீதும், மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில், மனைவி சக்திதேவி பொய் புகார் அளித்தார்.அப்போதைய இன்ஸ்பெக்டர் நிர்மலா, அதை, ஐந்து லட்சம் ரூபாயாக மாற்றி, எங்கள் குடும்பத்தினரை மிரட்டினார்.இந்நிலையில், துாத்துக்குடி இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்.ஐ., ஆதிலட்சுமி ஆகியோர், என் வீட்டுக்கு வந்து, என்னையும், டாக்டரான என் அம்மாவையும், துாத்துக்குடி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.அங்கு நிர்வாணமாக்கி, என்னை சங்கிலியால் கட்டி வைத்து துன்புறுத்தினர். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை பார்க்கும் போது, போலீஸ் அதிகாரிகள் நாகராஜன், நிர்மலா, ஆதிலட்சுமி ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது.எனவே, பாதிக்கப்பட்ட பிரவீன்குமார், அவரது தாயார் விஜயலட்சுமிக்கு, தலா, 1.50 லட்சம் ரூபாய் என, மூன்று லட்சம் ரூபாயை, நான்கு வாரத்திற்குள், தமிழக அரசு வழங்க வேண்டும்.இந்த பணத்தை மூன்று போலீசாரிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X