தொடருது சிறைவாசம் சல்மான் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்

Updated : ஏப் 07, 2018 | Added : ஏப் 07, 2018 | கருத்துகள் (32)
Advertisement
ஜோத்பூர்: சல்மான் கான் மீதான ஜாமின் மனுவை ஒத்தி வைத்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். நடிகர், சல்மான் கான், 52. ராஜஸ்தான் மாநிலத்தில், 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்ற வழக்கில், ஜோத்பூர் நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஜோத்பூர் சிறையில், அடைக்கப்பட்டார்.தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, சல்மான் கான் தாக்கல் செய்த மனு,
நடிகர் சல்மான் கான், ஜோத்பூர் நீதிமன்றம்,  மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷி, அரிய வகை மான்களை சுட்டுக் கொன்ற வழக்கு, நடிகர் சல்மானுக்கு  5 ஆண்டு சிறை தண்டனை, சல்மான் சிறைவாசம், மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷி திடீர் இடமாற்றம், 
Actor Salman Khan, Jodhpur court, Jodhpur jail, magistrate Rabindra Kumar Joshi, the case of the killing of rare types of deer,
Actor Salman was sentenced to five years imprisonment, Salman imprisonment, magistrate Rabindra Kumar Joshi's sudden transfer,ஜோத்பூர் சிறை,

ஜோத்பூர்: சல்மான் கான் மீதான ஜாமின் மனுவை ஒத்தி வைத்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். நடிகர், சல்மான் கான், 52. ராஜஸ்தான் மாநிலத்தில், 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்ற வழக்கில், ஜோத்பூர் நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஜோத்பூர் சிறையில், அடைக்கப்பட்டார்.


தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, சல்மான் கான் தாக்கல் செய்த மனு, மாஜிஸ்திரேட், ரவீந்திர குமார் ஜோஷி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. சல்மான் சார்பிலும், அரசு சார்பிலும் நீண்ட விவாதம் நடந்தது. இருதரப்பு வாதத்துக்கு பின், ஜாமின் மனு மீதான தீர்ப்பை, இன்று வழங்குவதாக, மாஜிஸ்திரேட் அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி பிறப்பி்த்த உத்தரவில் 87 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் சல்மான் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷியும் ஓருவர். இவர் ஜோத்பூரில் இருந்து சிரோக் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே வேறு நீதிபதி பொறுப்பேற்கும் வரை சல்மான், சிறைவாசம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
07-ஏப்-201817:49:25 IST Report Abuse
vnatarajan இறந்த மான்களின் சாபமோ என்னவோ திரும்பவும் சிறைக்கு போய்விட்டார். இங்கும் அரசியல் விளையாடுகிறது.
Rate this:
Cancel
mscdocument - chennai ,இந்தியா
07-ஏப்-201814:24:20 IST Report Abuse
mscdocument புள்ளிமான், சல்மான்,நீதி மான் என்ன ஒரு வழக்கு ஒற்றுமை.
Rate this:
Cancel
NAGARAJAN NARAYANASAMY - Thanjavur,இந்தியா
07-ஏப்-201813:47:54 IST Report Abuse
NAGARAJAN NARAYANASAMY இலங்கையில் மசூதி கொளுத்தப்பட்டு அந்த மதத்தை சார்ந்தவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. இலங்கை முழுவதும் தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தான் அமைச்சர்கள் மவுனம் காத்தார்கள். ஏனெனில் சீனா ஆதரவு இலங்கைக்கு உண்டு. ஆனால் இப்போது இந்தியாவில் ஒரு தனி மனிதன் செய்த தவறுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.இவர்கள் வீரம் இடத்தை பொறுத்தது.
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஏப்-201816:19:47 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  இவர்கள் வீரம் இடத்தை பொறுத்தது...... தவறு...இவர்கள் வெட்டி வாய்ச்சவடால் ஊளை சவுண்டு வீரம் இடத்தை பொறுத்தது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X