அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆயுள் முழுக்க சிறைக்கு தயார்
ஸ்டாலின் ஆவேசம்

தஞ்சாவூர் : ''காவிரி பிரச்னைக்காக, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க தயார்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பேசினார்.

D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்


காவிரி உரிமை மீட்பு பயணத்தின், இரண்டாவது நாளான நேற்று, தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில், ஸ்டாலின், நடைபயணத்தை துவங்கினார். தொடர்ந்து, வடக்கூர், செல்லம்பட்டி பகுதியில் வறண்டு கிடக்கும் கல்லணை கால்வாய் ஆற்றையும், வயல்களையும் பார்வையிட்டார். பின், சில்லத்துார் பகுதியில் அமைக்கப்பட்ட பந்தலில், ஸ்டாலின் பேசியதாவது:

காவிரி விவகாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தீர்ப்பை, மோடி அரசு நிறைவேற்ற வேண்டும். ஆனால், மத்திய அரசு தயங்குகிறது. எனவே தான், காவிரி மீட்பு பேரணி நடத்துகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஆதரவாக ஒன்று சேர்ந்துள்ளோம். காவிரி பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை கைது செய்து, வழக்கும் பதிவு செய்து உள்ளனர். இப்பிரச்னைக்காக, எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சிறை செல்ல தயாராக இருக்கிறோம்; ஆயுள் முழுக்க சிறையில் இருக்க தயார்.

வரும், 12ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டப்படுவதில் மாற்றமில்லை; இதில் உறுதியாக

இருக்கிறோம். பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்று அனைவரும் வீட்டில் கறுப்பு கொடியை ஏற்றியும், கறுப்பு ஆடைகள் அணிந்தும், எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

நடைபயணத்தில் காங்கிரஸ் மாநில தலைவர், திருநாவுக்கரசர், இ.கம்யூ., மாநில செயலர், முத்தரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அணைக்குள் மேடை:


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணத்தை, விதிமுறைகளை மீறி, முக்கொம்பு அணைக்கட்டுப் பகுதியில் துவங்கியதும், காவிரி ஆற்றின் நடுவே, மேடை போட்டு பொதுக்கூட்டம் நடத்தியதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புப் பயணத்தை, திருச்சி முக்கொம்பில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று முன்தினம் மாலை துவக்கினார். கூட்டணி கட்சி தலைவர்களும், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்


விழாவுக்கான மேடை, அணைக்கட்டு பகுதியில் போடப்பட்டிருந்தது. முக்கொம்பு, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில்,

Advertisement

சுற்றுலா பயணியருக்கு மட்டுமே அனுமதி உண்டு. எந்தவொரு அரசியல் கட்சியும், இதுவரை இங்கு நிகழ்ச்சி நடத்தியதில்லை. அதேபோல், நேற்று முன்தின பயணத்தின் முடிவில், கல்லணையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கான மேடை, வறண்டு போயுள்ள காவிரி ஆற்றின் நடுவே போடப்பட்டது. உலகின் பழமையான அணைக்கட்டில் அதிக வெளிச்சத்தை பாய்ச்சும் விளக்குகள் போடப்பட்டு, ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது.

அனுமதித்தது யார்?


நீர்நிலையில் இப்படி ஒரு கூட்டத்தை நடத்த அனுமதித்ததே தவறு. அதிலும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அணையில், அதிக வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகள் கட்ட எப்படி அனுமதி கிடைத்தது, யார் கொடுத்தது என, தெரியவில்லை. இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டால், சரியான பதில் சொல்ல யாரும் முன்வரவில்லை.

நீர்நிலையின் நடுவே, பொதுக்கூட்டம் நடத்த ஸ்டாலின் எப்படி சம்மதித்தார்; இதற்கு கம்யூ.,க்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீர்நிலைகளை பாதுகாக்க போராடும் விவசாய சங்கங்கள், எப்படி இதை அனுமதித்தனர்; தமிழக அரசின் பொதுப்பணித் துறை எப்படி இதற்கு அனுமதி கொடுத்தது என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.

ஸ்டாலின் என்பதால், முதல்வர் பழனிசாமி அரசு தாராளமாக நடந்து கொண்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எதிலும் தன்னை, 'பர்பெக்ட்' என, பறைசாற்றிக் கொள்ளும் ஸ்டாலின், இப்படி விதிமுறைகளை மீறி, அரசியல் கூட்டத்தை ஆற்றின் நடுவேவும், அரசு இடத்திலும் நடத்தியிருப்பது, விவசாயிகள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karun Muruga - banglore,இந்தியா
10-ஏப்-201811:00:07 IST Report Abuse

Karun Murugaவெட்டி பந்தா.பேசி பேசிய ....... நீ ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பியா என்ன கத.. நடக்காதது பேசுவது சுடலை ஸ்... ஸ்டைல் என்ன பேசி என்ன புண்ணியம் ஒரு நாள்... ஒரே ஒருநாள்........நடக்காது போல இருக்கு.... செய்ஞ்சா பாவம் சும்மா விடுமா

Rate this:
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
09-ஏப்-201822:05:23 IST Report Abuse

Parthasarathy Ravindranமிசா மறந்து விட்டது. அந்த கட்சியுடன் உறவு இருப்பதால் மறந்து இருப்பார்.

Rate this:
bal - chennai,இந்தியா
09-ஏப்-201821:52:48 IST Report Abuse

balஇவரை பற்றி எழுதி எழுதி எனக்கு கை வலிக்கிறது...

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X