பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மக்கள் கோபத்திற்கு
ஆளாக நேரிடும்: ரஜினி

சென்னை : ''தமிழக மக்களின் ஒரே கோரிக்கை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே. நியாயமான இந்த கோரிக்கையை, மத்திய அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்,'' என, நடிகர் ரஜினி கூறினார்.

Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்


சென்னை, போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டில், நடிகர் ரஜினி நேற்று அளித்த பேட்டி: காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பில், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என, உறுதியாக கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் கண்ணீர்:


ஆனாலும், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசுக்கு, நான் சொல்வது ஒன்று தான். தமிழக மக்களின் நியாயமான, ஒன்றுபட்ட ஒரே கோரிக்கை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே. இதை, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அமைக்க வேண்டும். இல்லையென்றால், தமிழக மக்களின் கோபத்திற்கு, மத்திய அரசு ஆளாக நேரிடும்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடக்கும் போராட்டங்களில், பல்வேறு கட்சிகள், வியாபார சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. நாம், 50, 100 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்காக போராடவில்லை. ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்துள்ள, சிறு விவசாயிகளுக்காக போராட்டம் நடத்துகிறோம்.

சிறு விவசாயிகளின் நிலத்தில், முப்போகம் விளைந்தாலும், இரண்டு வேளை தான் அவர்களால் சாப்பிட முடியும். அவர்களின் கண்ணீர் துடைக்க, அவர்களை முன்னிறுத்தி போராட வேண்டும். அப்போது தான், போராட்டத்திற்கு வலு கிடைக்கும். இதை, கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாவிட்டாலும், ஏழை விவசாயிகள் புரிந்து கொள்வர்.

பஞ்ச பூதங்கள் சேர்ந்தது தான் இயற்கை. இந்த பூதங்கள் தான், மனித உடம்பிலும் உள்ளன. பஞ்ச பூதங்கள் மாசடைய இடம் தரக்கூடாது; மீறி தந்தால், உலகமும், மனித குலமும் அழிந்து விடும். மண், தண்ணீர் மற்றும் காற்று மாசுபட விடக்கூடாது.

நிம்மதி கிடைக்காது:


அத்தகைய தொழிற்சாலைகளால், அரசுக்கு, பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும், பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்தாலும், அதை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு சம்பாதிக்கும் பணத்தால் நிம்மதி கிடைக்காது; சந்ததிகளும் நன்றாக இருக்காது.

Advertisement

அதற்காக, தொழிற்சாலை கூடாது என, சொல்ல வில்லை. சுற்றுச்சூழல் மாசடையாமல்,தொழிற்சாலை அமைக்க வேண்டும் என, வலியுறுத்துகிறேன். காவிரி பிரச்னைக்காக, எல்லோரும் இணைந்து போராடுகிற போது, என் இயக்கம் சார்பாக, தனியாக போராட்டம் நடத்த வேண்டியதில்லை. நடிகர் சங்க மவுன போராட்டத்தில் பங்கேற்கிறேன். இவ்வாறு ரஜினி கூறினார்.

'கமல் என் எதிரியல்ல' :

நடிகர் ரஜினி மேலும் கூறியதாவது: ஐ.பி.எல்., போட்டியை நிறுத்த வேண்டும் என, எல்லோரும் கேட்கின்றனர்; நிறுத்தினால் நல்லது. அப்படி இல்லையெனில், தமிழக மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர்கள், கறுப்பு, 'பேட்ஜ்' அணிந்து விளையாடினால், உலகம் முழுவதும், இப்பிரச்னை கவனிக்கப்படும். இதற்கு, அணிகளின் நிர்வாகத்தினர் உள்பட, அனைவரும் ஆதரவு தர வேண்டும். நியாயமான கோரிக்கைக்காக போராடுகிறோம்; தவறு ஏதும் செய்யவில்லை. இதற்காக, கர்நாடகாவில், என் படத்தை வெளியிட மாட்டோம் என, மிரட்டினால், அதை, தயாரிப்பாளர்கள் பார்த்துக் கொள்வர். சட்டம் - ஒழுங்கு பிரச்சனை வந்தால், கர்நாடக அரசு நிச்சயம் பாதுகாப்பு தரும் என்ற, நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில், காவிரி பிரச்னை பெரிதாக நடக்கும் போது, அண்ணா பல்கலைக்கு, கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை, உயர் பதவியில் நியமித்தது தவறு. கமல் என் எதிரி அல்ல; ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம், லஞ்சம், இலங்கை மக்களின் கண்ணீர் போன்றவையே, என் எதிரிகள். இவையெல்லாம் ஒழிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஏப்-201818:22:48 IST Report Abuse

Pugazh Vகாவிரி பிரச்னையில் உசுப்பி விட்டு எம் எல் ஏ க்கள் ராஜினாமா அல்லது ரத்த கலவரம் உருவாக்கி ஆட்சியை கலைத்து விட்டு டகால்டி ஓட்டிங் மெஷின் கொண்டு வந்து ஆட்டையை போட பிஜேபி பார்க்கிறது. பதவிக்காக இவ்வளவு கேவலமாக மக்களின் வாழ்வாதாரத்துடனா விளையாடுவது??

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
09-ஏப்-201823:49:32 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)பதவியை விட சொல்லி கோரிக்கை வைத்ததே இ மு க தானே (இடுப்புகிள்ளி முன்னேற்றக் கழகம்) thaan ...

Rate this:
kannan - chennai,ஆஸ்திரேலியா
09-ஏப்-201818:06:14 IST Report Abuse

kannanபோராட்டம் என்றதும் இந்த ஆரம்ப கட்ட அரசியலிலே யே ஓடி ஒளிபவரை எல்லாம் எப்படி நம்புவது சொல்லுங்கள் இவரெல்லாம் அரசியலெல்லாம் செய்ய முடியாது . காசும் செலவு பண்ண மாட்டார், கருணை யம் காட்ட மாட்டார் அமைதியாக ஆன்மிகம் செய்து கொண்டு ஆஸ்ரம வாழ்க்கையே இவருக்கு

Rate this:
kannan - chennai,ஆஸ்திரேலியா
09-ஏப்-201817:58:53 IST Report Abuse

kannanஅந்த காலத்தில் உண்மை அரசியல் வாதிகள் தண்டிக்க பட்டார்கள் சிறைக்கு போனார்கள் சாப்பாடு தண்ணி இல்லாமல் பல மைல் கல் நடந்து கடந்து பச்சை தண்ணீர் பல்லில் படாமல் உண்ணாவிரதங்கள் இருந்து நல்ல காரியங்கள் நிறைவேற கொள்கைகள் வகுத்து உயிரை கொடுத்து உறுதியாக நின்றார்கள். ரஜினி ? எல்லாம் சுயநல அரசியல் தான் இவர் குடும்ப சொத்துக்கள் மனைவி மகள்கள் பண விவகாரங்கள் .பிசினெஸ்ஸுகள் சொத்துக்கள் எல்லாம் காப்பாற்ற தான் சாமர்த்தியமாக எல்லாரும் IPL க்கு கருப்பு பட்ஜெ அணிந்து வருமாம் இதுதான் போராட்டமாம் இதுலே இவருக்கு என்ன உழைப்பு கஷ்டம் பாருங்கள் இவர் mania அவர் குடும்பங்கள் எல்லாமே பெங்களூரு , மைசூர் சேர்ந்த வர்கள் தான். எல்லாம் பொழப்புக்காக சென்னை குடியேறிகள் தான்.இவர்களுக்கு என்ன பெரிய தமிழ் நாட்டு பக்தி சொல்லுங்கள் ரஜனி யை தமிழ் நாட்டு அரசியல் செய்ய அனுமதிக்க கூடாது தமிழர் kamal ஹாசனை வரவேற்போம்

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
09-ஏப்-201823:51:57 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)உங்க கட்சி தலைவர்கள் போல தொண்டர்களை வெயிலில் உருட்டி விட்டு தீக்குளிக்க வைக்கணும் என்று எதிர்பார்கிறீர்களா ? கருப்பு கொடியுடன் இருந்தால் காணொளியில் உலகமே உணரும் என்று கூறுகிறார் அதை நீங்கள் உணராதது ஏனோ ? ...

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X