அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., போராட்டம்
பிரதமருக்கு பாதுகாப்பு

சென்னை அருகே நடைபெறும், ராணுவ கண்காட்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு, கருப்புக்கொடி காட்டி, எதிர்ப்பு தெரிவிக்க, தி.மு.க., கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,பிரதமர்,மோடி,பாதுகாப்பு


காவிரி டெல்டா பகுதிகளில், தி.மு.க., செயல் தலைவர், நேற்று, இரண்டாம் நாளாக, காவிரி மீட்பு பேரணியில் பங்கேற்றார். அப்போது, ''பிரதமர் மோடி காரில் வந்தாலும் சரி, ஹெலிகாப்டரில் பறந்து வந்தாலும் சரி, கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்; எங்களை ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தாலும், கவலைப்பட மாட்டோம்,'' என, ஸ்டாலின் பேசினார்.


பிரதமர் மோடி, 11ம் தேதி, சென்னைக்கு வருவதாக இருந்தது. எனவே, அன்றைய தினம், கருப்புக் கொடி காட்ட, அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தற்போது, பிரதமர் வருகை, 12ம் தேதிக்கு மாறியுள்ளதால், அன்று, கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட உள்ளது.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக, பிரதமர் நேருவை கண்டித்து, தி.மு.க., சார்பில், கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் இந்திரா, 'மிசா' சட்டத்தை கொண்டு வந்தார். அவர் பதவி இழந்த பின், மதுரைக்கு வந்தபோது, தி.மு.க., வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். அது, வன்முறையில் முடிந்தது. தற்போது, மோடிக்கு எதிராக, கருப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

தி.மு.க., நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் காவிரி உரிமை, கேள்விக் குறியாக்கப்பட்டுள்ள நெருக்கடியான இந்த நேரத்தில், தமிழக மக்கள் அனைவரும், தங்களின் ஆழமான அதிருப்தியையும், ஒன்றுபட்ட

Advertisement

எதிர்ப்பையும் பிரதமருக்கு தெளிவாக உணர்த்த வேண்டும். இதற்கு, தங்கள் இல்லங்களில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும். ஒவ்வொருவரும் கருப்பு சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க.,வினரின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, சென்னை விமான நிலையம் முதல், ராணுவ கண்காட்சி நடைபெறும், திருவிடந்தை வரை, வரலாறு காணாத வகையில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ssk - chennai,இந்தியா
09-ஏப்-201821:49:27 IST Report Abuse

ssk2019+2024+2029= மோடி ,..... எங்க தல

Rate this:
Thiyagarajan - Bangalore,இந்தியா
09-ஏப்-201819:00:30 IST Report Abuse

Thiyagarajanஇந்திய பிரதமரை கேவல படுத்தும் சுடாலின் யார்? இவர் கட்சி ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தார். பிஜேபி அரசு நடவடிக்கை எடுக்காமல் இல்லை. எல்லா மாநில கருத்துக்களையும் கேட்டு வாரியம் அமைப்பதில் தவறொன்றும் இல்லை. இங்கே பெங்களூரில் குடிக்கவே தண்ணி இல்லை.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
09-ஏப்-201818:37:20 IST Report Abuse

r.sundaramஇந்த நாலு வருடங்களில் எந்த ஒரு பி ஜெ பி காரனும் ஏதாவது சம்பாதித்ததாக சொல்ல முடியுமா? ஆனால் அதற்க்கு முன்னால் நடந்த பத்து வருடங்களை பாருங்கள். அந்த பத்து வருடங்களில் சம்பாதிக்காதவர்கள் இல்லை. இது ஏன் இவர்களுக்கு புரியவில்லை. குமரி மாவட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரப்போகும் துறைமுக திட்டத்தையும் அறியா மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது மேலால் அவர் குறிப்பிட்ட திட்டங்களில் ஒன்றுதான். துறைமுகத்தை எதிர்ப்பது அந்த வாட்டிகன் வாரிசுகள்தான். மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டமும் பெரியதாக இருக்கும், அதை அமுல்படுத்த நாள் எடுக்கும், பலன் கிடைக்க நாட்கள் ஆகும். அதை பார்க்கும்போது இந்த நாலு வருடங்கள் என்பது மிக சிறிய காலம். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் சகட்டுமேனிக்கு மத்திய அரசை குற்றம் சொல்வது சரியல்ல. மேலும் இந்த பி ஜெ பி அரசு பதவி ஏற்கும் முன் அரசு இருந்த நிலை என்ன, இன்று அரசு இருக்கும் நிலை என்ன என்பதை பார்க்க வேண்டும். அடுத்த பொது தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட முழு பட்ஜெட், அதில் ஏதாவது ஜனரஞ்சகமான திட்டம் இருந்ததா? இதிலிருந்தே அவர்களின் நம்பிக்கை தெரிய வில்லையா? இந்தியாவை அடகுவைத்தாவது சம்பாதிக்க நினைப்பவர்கள் ஆட்சியில் கடந்த பல வருடங்களாக இருந்ததினால், இவர்களுக்கு உண்மை புரிய கொஞ்சம் நேரமாகும். அதுவரை நாம் பொறுமை காக்க வேண்டும்.

Rate this:
09-ஏப்-201820:31:07 IST Report Abuse

ரபேல் ஊழல் நாயகன் மோடி:ஒரு வருடத்தில் 18000 மடங்கு சம்பாதித்த அமித்ஷா மகன். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ...

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
09-ஏப்-201823:01:09 IST Report Abuse

Sahayamபேங்க் லோன் விவகாரம் வரும் தம்பி , ஆட்சியை விட்டு இறங்கும் போதுதான் எல்லாம் வெளி வரும் ...

Rate this:
மேலும் 70 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X