'கந்து வட்டியும், காக்கி சட்டைகளும்' லஞ்ச வேட்டையும், லாவணி அதிகாரியும்...

Added : ஏப் 10, 2018 | |
Advertisement
சூரிய பகவான் திருப்பூரை உண்டு... இல்லை.. என்று கொளுத்தி கொண்டிருந்த ஒரு முற்பகல் வேளை. சித்ராவும், மித்ராவும், சிவன்மலை செல்வதற்காக வண்டியில் சென்று கொண்டிருந்தனர். ''கொஞ்சம் காத்து அடிக்கிறதால பரவாயில்லை. ஏன்... மித்து?'' என்று சித்ரா சொன்னதும், ''ஆமாங்க்கா. யாருக்காவது பனிஷ்மென்ட் தரோணும்னு நினைச்சா, கொளுத்தற வெயில்ல, பத்து நிமிஷம் நிக்க வைச்சா போதும். என்ன
'கந்து வட்டியும், காக்கி சட்டைகளும்' லஞ்ச வேட்டையும், லாவணி அதிகாரியும்...

சூரிய பகவான் திருப்பூரை உண்டு... இல்லை.. என்று கொளுத்தி கொண்டிருந்த ஒரு முற்பகல் வேளை. சித்ராவும், மித்ராவும், சிவன்மலை செல்வதற்காக வண்டியில் சென்று கொண்டிருந்தனர். ''கொஞ்சம் காத்து அடிக்கிறதால பரவாயில்லை. ஏன்... மித்து?'' என்று சித்ரா சொன்னதும், ''ஆமாங்க்கா. யாருக்காவது பனிஷ்மென்ட் தரோணும்னு நினைச்சா, கொளுத்தற வெயில்ல, பத்து நிமிஷம் நிக்க வைச்சா போதும். என்ன சொல்றீங்க,'' என்றாள் மித்ரா.''பனிஷ்மென்ட்னு நீ சொன்னதும், எனக்கு 'சவுத்' தாலுகா ஆபீஸ்தான் ஞாபகத்துக்கு வருது,'' சித்ரா சொல்லி முடிப்பதற்குள், ''அதென்ன அந்தமான் ஜெயிலா?''குறுக்கிட்டாள் மித்ரா.''திருப்பூர் 'சவுத்' தாலுகா ஆபீஸ் சிட்டிக்குள்ள இருந்தாலும், 'தொடர்பு எல்லைக்கு அப்பால்' என்கிற மாதிரி ஆகிருச்சு. ரெவின்யூ டிபார்ட்மென்ட்டில், யாரையாவது, 'பனிஷ்' பண்ணனும்னா, 'சவுத் தாலுகா'வுக்கு துாக்கி போட்டுடறாங்க''''பஸ் வசதி இல்லாததால, மக்களும் தலை காட்றது இல்ல. குறிப்பா, 'லேடி' அதிகாரிகளுக்கு பெரிய தொல்லை. 'எங்களை ஏன்தான் இப்படி பண்றாங்களோ,' என்று கண்ணீர் வடிக்கிறாங்களாம்,'' என்று விளக்கினாள் சித்ரா.''ஆமாங்க்கா, நானும் கேள்விப்பட்டேன். 'கள்' போராட்டத்துக்கு வந்த விவசாயிங்க, திடீர்னு தர்ணா செஞ்சு, டென்ஷன் ஆக்கிட்டாங்க. அதனால, 'எந்த பேச்சாக இருந்தாலும், 'சவுத் தாலுகா'வுல வச்சுக்கணும். அப்பத்தான் யாரும் தொந்தரவு பண்ண வரமாட்டாங்க,'ன்னு பேசியிருக்காராம்,'' என்றாள் மித்ரா.அதற்குள், இளநீர் கடை தென்படவே, வண்டியை நிறுத்திய சித்ரா, ''ரெண்டு இளநீர் கொடுங்க,'' என்றாள். இருவரும் இளநீர் குடித்து விட்டு, மீண்டும் புறப்பட்டனர். ''நீங்க 'சவுத்'னு சொன்னதால், எனக்கு ஞாபம் வருது.. 'சவுத்' எம்.எல்.ஏ., எங்க காணோம்... அ.தி.மு.க., உண்ணாவிரதத்தில கூட பார்க்க முடியலையே,''என்றாள் மித்ரா.''ஓ... உனக்கு விஷயம் தெரியாதா? ஜி.எச்.,ல் நடந்த பங்ஷனில், சேர் ஒடைஞ்சு கீழே விழுந்திட்டாராம். அதனால, கை, கால் அடிபட்டு 'ட்ரீட்மென்ட்'ல இருக்காராம்,'' என்று சித்ரா சொன்னதும், ''அதானா சேதி. ஓ.கே.., சித்து அக்கா. இந்த கூட்டுறவு தேர்தல் எப்படி போயிட்டு இருக்கு,'' கேள்வி கேட்டாள் மித்ரா.''ஏகதேசம் பேசியே முடிச்சுட்டாங்க.. எதிர்க்கட்சியில யாருமே பிரச்னை பண்ணலையாம். ஆளுங்கட்சியிலதான், கோஷ்டி பூசல் வந்து, சமாதானம் செஞ்சாங்களாம். சில பக்கம் தேர்தல் நடந்துட்டுதான் இருக்கு. ஆமா... 'சிட்டி'யில் எப்படி மித்து?'' என்றாள் சித்ரா.''அர்பன் பாங்க், வீட்டு வசதி சங்கம் இரண்டும் தான் இழுபறியா இருந்துச்சு. அதையும் பேசி முடிச்சிட்டாங்களாம். குமரன் காலேஜ் இருக்கறதால, வீட்டுவசதி சங்கம் மா.செ., வுக்கும், 'அர்பன்' பாங்க் 'சவுத்' எம்.எல்.ஏ.,வுக்கும் பிரிச்சுட்டாங்களாம். இதுல, இன்னொரு 'மேட்டர்' இருக்கு. ''கூட்டுறவு பதவி கிடைக்காம ஏமாந்தவங்களை 'லிஸ்ட்' எடுத்து, கோவில்களுக்கு 'டிரஸ்டி'யா போட போறாங்களாம். இதைப்பத்தி, முதல்வர் காதிலும் 'சேதி' போட்டுட்டாங்களாம்,'' என்ற மித்ரா, ''நல்லுாரில், பி.ஜே.பி., கொடியை எரிச்ச மேட்டர் என்னாச்சுங்க,'' என கேள்வி கேட்டாள்.''அந்த மேட்டரில், தகவல் பரவி, கட்சிக்காரங்க கூடிட்டாங்க. விசாரணைக்கு போன இன்ஸ்பெக்டர், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தி, சமாதானம் செய்யாம, இங்கும் அங்கும் நடந்துட்டு இருந்திருக்காங்களாம். இதனால, கடுப்பான கட்சிக்காரங்க, வெறுத்து போய், மறியல் செஞ்சிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''பிரச்னைக்கு தீர்வு காண்பதே ஒரு அதிகாரிக்கு அழகு. அதை விடுத்து, இழுத்தடிப்பதில் என்ன கிடைத்து விடப்போகிறது,'' என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா. ''கோழிப்பண்ணை ஊர்ல இருக்கிற மகளிர் ஸ்டேஷனில், புகார் கொடுக்க வர்ற ஆட்களை, 'டிபன் வாங்கிட்டு வா; ஆட்டோ எடுத்துட்டு வா...ன்னு', 'டார்ச்சர்' பண்றதப்பத்தி போனவாரம் பேசினோமே. ஞாபகமிருக்கா?''என்று சித்ரா கேட்டதும், ''ஆமாங்க்கா, அதில் ஏதாவது உண்டா?'' என்று மித்ரா ஆர்வமானாள்.''ம்...ம்... இரு சொல்றேன். அந்த பிரச்னைக்கு காரணமே. அங்கிருக்கிற ஆபீசர்தானாம். புகார், வழக்கு என்று வந்தாலே 'எவ்வளவு தேறும்?' என்று பார்த்து, கறந்து விட்டுத்தான், மறுவேலை பார்ப்பாராம். ஆனால், எல்லாத்தையும் அவரே வைச்சுப்பாராம். ''இதனால், மத்தவங்க, அவங்க லெவலுக்கு, 'டிபன் காபி'ன்னு புகார்தாரர்களை விரட்டுறாங்களாம்,'' என்று சொல்லி முடிக்கவும், 'மாணிக்க(ம்) வீணையேந்தும் மாதேவி கலைவாணி,' மித்ராவின் மொபைல்போன், 'ரிங் டோனை' வெளியிட்டதும், பேசி விட்டு வைத்தாள்.துாரத்தில், சிவன்மலை தெரிய ஆரம்பித்தது. 'முருகா' என கும்பிட்டவாறே, ''சிட்டி கமிஷனர், 'லேடி' இன்ஸ் பெக்டருக்கு, 'செம' டோஸ் விட்டாராம், உங்களுக்கு தெரியுமா?,''சந்தேகத்துடன் கேட்டாள்.''ஆமாம்... நல்ல 'வொர்க்' பண்ணுவாங்கன்னு, ரூரலுக்கு மாத்தினா, பி.ஜே.பி., மேட்டரில், 'சொதப்பிட்டாங்களாம்'. இதை தெரிஞ்சுகிட்ட கமிஷனர், ஒரு 'வாங்கு வாங்குன்னு' வாங்கிட்டாராம். அதே ஏரியாவில், ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறதாம்,'' என்று சித்ரா சொன்னதும், 'பதுருன்னிசா' பேக்கரி என்ற போர்டு தென்பட்டது. ''மித்து, போய், ஒரு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா,'' என்று சித்ரா சொன்னதும், வண்டியில் இருந்து துள்ளிக்குதித்து ஓடிப்போய், வாங்கி வந்தாள் மித்ரா. ஒரே மடக்கில், அரை பாட்டிலை காலி செய்த சித்ரா, ''சரி... உட்காரு. போகலாம்,'' என்று சொல்லி வண்டியை கிளப்பினாள். ''முருகம்பாளையத்தில், பனியன் கம்பெனி நடத்தி நஷ்டமான ஒருத்தர், மெஷின்களை விற்று, கடனை அடைக்க முடிவு செஞ்சாராம். ஆனா, கட்டடத்துக்கு வாடகை பாக்கி இருக்குதுன்னு, பில்டிங் ஓனர், வீரபாண்டி ஸ்டேஷனில் புகார் கொடுத்ததில், அவருக்கு சாதகமாக இன்ஸ்., நடந்துக்கிறாராம். ஒரு பக்கம் தொழில் நஷ்டம். மறுபக்கம் போலீஸ் தொந்தரவுன்னு பாதிக்கப்பட்டவர் 'மணி'போல் 'மொழி' பேசி புலம்புறாராம்,'' என்று சித்ரா கூறி கொண்டே வர, 'ம்..ம்..' கொட்டி கேட்ட மித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊர் மேட்டர் ஒண்ணுமில்லீங்களா?''என்றாள். ''ஏன்.. இல்லாம? கந்து வட்டி தொடர்பாக ஒருத்தர் புகார் கொடுத்தாராம். அதன்மீது, 'கேஸ்' போடறத விட்டுவிட்டு, கந்து வட்டிக்காரங்கிட்ட போய், ஒரு எஸ்.ஐ., பேரம் பேசினாராம். இத்தனைக்கும் அவரு, 'கிரைம்' பிராஞ்சாம். இவரு எதுக்கு, இதில், இன்டரஸ்ட் காட்டராருன்னு,' மத்த போலீஸ்காரங்க, வெளிப்படையாவே பேசறாங்களாம்,'' என்றாள் சித்ரா.அதற்குள், சிவன்மலை வந்து விடவே, வண்டியை பார்க்கிங் செய்து, படியேற இருவரும் துவங்கினர். ''ஏய்.. மித்து. இங்க வா. 'கணேசனை' கும்பிட்டுட்டுத்தான் மேலே போகணும்,''என்று சித்ரா செல்லமாக அதட்டியதும், மித்ரா தோப்புக்கரணம் போட்டாள்.அதன்பின், மெதுவாக படியேற துவங்கியதும், ''அதே ஊரில் உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில், மத்தவங்க யாரும், தலைவர் ஆயிடக்கூடாதுன்னு, ஒரு நல்ல (?) எண்ணத்தில, 2,248 மெம்பரையும் நீக்கிட்டாராம். இந்த லிஸ்டில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களும் அடக்கமாம். இதைக்கேட்டு, கொதிச்சு போய், ஒண்ணா சேர்ந்து எப்படியாவது, பழைய ஆளை விடக்கூடாதுன்னு, ஒரு முடிவோட இருக்காங்களாம்,'' என்று சித்ரா சொன்னதும், ''அக்கா, மேலே போனதும், 'முருகேசன்' ஐயர்கிட்ட சொல்லி, ஒரு ஸ்பெஷல் அர்ச்சனை செய்யணும்,'' என்றாள் மித்ரா.''ஓ.கே., பேஷா செஞ்சிடலாம்,'' என்ற சித்ரா, ''நார்த் ஆர்.டி.ஓ., ஆபீசில், ஆறு பேரோட ஆடுகிற 'லஞ்ச வேட்டை' ஜாஸ்தியா இருக்குதுன்னு, போன வாரம் பேசினோமில்ல. இதைப்பத்தி, பேசுன, 'காலா' பட ஹீரோ பேர் கொண்ட அதிகாரி, 'நான் வந்த பின்தான், பிரச்னைக்கு உரிய நபர்களை வெளியேற்றி, பல மாற்றம் செஞ்சிருக்கேன்,'னு சொல்றார்,''''ஆனா, அவருக்கு சாத கமான ஆட்களை உள்ளே அனுமதிச்சுட்டாருன்னு ஒரு பேச்சிருக்கு. அதிகாரியோட தயவிருக்கிறதால, மக்களிடம் 'வைட்டமின் ப'வை கறப்பதே வேலைன்னு, அந்த ஆறு பேர் கூட்டணி, தங்கு தடையின்றி, எண்ணிட்டே இருக்காங்களாம். இது எங்க போய் முடியுமோ?'' என்று சித்ரா அங்கலாய்க்க, ''சரி.. வாங்க. சீக்கிரம் போய் முரு கனை தரிசிக்கலாம்,'' என்று மித்ரா கூற, விறுவிறுவென இருவரும் படியேறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X