சென்னையில் லேசான தடியடி; திரைப்பட இயக்குனர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் லேசான தடியடி; திரைப்பட இயக்குனர்கள் கைது

Updated : ஏப் 10, 2018 | Added : ஏப் 10, 2018 | கருத்துகள் (140)
Advertisement

சென்னை: காவிரி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் சென்னையில் ஐ.பி.எல், கிரிக்கெட் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை வாலாஜா சாலையில் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.


போலீசார் குவிப்பு

பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கோல்கட்டா அணிகள் மோதும் போட்டி இன்று இரவு நடக்கிறது. இதனையடுத்து, மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனை சுற்றியுள்ள பகுதிகளில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தனிப்பாதை


பல்வேறு சாலைகளில் சேப்பாக்கம் செல்லும் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில், வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் ஓட்டலில் தங்கியுள்ள ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புடன் வீரர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.


பூட்டு போடும் போராட்டம்


போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்பினர் சென்னை அண்ணா சாலையில் கறுப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். திருவல்லிக்கேணி பகுதியிலிருந்து பேரணியாக வந்து சேப்பாக்கம் மைதானத்தை முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இனையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போராட்டம் நடத்த முயன்ற சிலரையும் போலீசார் கைது செய்தனர்.


ரஜினிரசிகர்கள் கைது


இதற்கிடையில் கிரிக்கெட்போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு ரஜினி அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர். கறுப்பு பேட்ஜ் விநியோகித்த 50 பேரை போலீசார் கைது செய்தனர்.


பல்வேறு போராட்டங்களால் சென்னை சேப்பாக்கம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (140)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
11-ஏப்-201808:25:11 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) அட அப்ரசண்டி சிப்சுகளா மேலாண்மை வாரியம் வரும் வரை TASMAC குடியை அருந்த மாட்டேன் என்று இருக்க முடியுமா . மதுக்கடைகளை மூடச் சொல்லி தினமும் போராட முடியுமா ? மானம் கெட்ட நாதாரிகள் .
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
11-ஏப்-201808:21:20 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை திரைப்படம் எடுக்க மாட்டோம். திரை அரங்குகளை ஓட்ட மாட்டோம். ஒத்தையா சேனல் நடத்த மாட்டோம். சொல்வதற்கு துணிவு இருக்கிறதா? எல்லாம் விலைபோகாத கைக்கூலிகள் . பாரதிராஜா கௌதமன் சீமான் போன்ற நபர்களுக்குப் படங்கள் இல்லை. பொழுதுபோக்கிற்கு அப்பாவி தமிழனை தூண்டிவிட்டு வெய்யிலில் அடி வாங்க வைக்கிறான் .
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஏப்-201806:12:58 IST Report Abuse
Kasimani Baskaran தடியடியில் இப்பொழுதுதான் இலேசானது, கடினமானது என்று கேள்விப்படுகிறேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X