எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
புது, 'குண்டு'!
வசதிக்கேற்றபடி முடிவெடுக்க போகின்றனரா?
நீர்வளத்துறை செயலர் போடும்...

தங்கள் வசதிக்கேற்றபடி மாற்றியமைத்துக் கொள்ளும் வகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக, மத்திய நீர்வளத் துறை கூறியுள்ளதால், காவிரி பிரச்னையில் ஏற்பட்டுள்ள இடியாப்ப சிக்கல், அடுத்த கட்டத்தை எட்டுவது உறுதியாகியுள்ளது.

வசதிக்கேற்றபடி முடிவெடுக்க போகின்றனரா? நீர்வளத்துறை செயலர் போடும் புது, 'குண்டு'


காவிரி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த விசாரணையின் முடிவில், அடுத்த மாதம், 3க்குள், செயல்திட்ட வரையறையை சமர்ப்பிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலாண்மை வாரியம்:


'ஸ்கீம் என்பதன் பொருள் என்ன' என்பது தான் அடிப்படை கேள்வியே. ஆனால், அதற்குரிய விளக்கம் இல்லாமல், 'நடுவர் மன்ற உத்தரவை, இறுதி தீர்ப்புடன் இணைத்து விட்டோம்' என்ற அளவில், நீதிபதிகள் முடித்துக் கொண்டனர். 'மேலாண்மை வாரியம் அமைக்கும்படி கூறியிருந்த நடுவர் மன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது என்பதே இதன் அர்த்தம்' என, தமிழக அரசு ஆறுதல் பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம், நீர்வளத் துறை செயலர், யு.பி.சிங், டில்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நீரை பங்கிடுவது குறித்த செயல் திட்டம் என்ன வென்பதை சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யும் சுதந்திரத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன் மூலம், எங்கள் வசதிக்கேற்ப முடிவெடுக்க முடியும்.

வாரியமோ அல்லது வேறு எதுவோ; அமைப்பின் பெயரில் என்ன இருந்து விடப்போகிறது. அதன் செயல்பாடுகள்தான் முக்கியம். எது சிறந்த அமைப்போ, அதை மத்திய அரசு ஏற்படுத்தும்.2.5 டி.எம்.சி., பல குழப்பங்கள் இருந்தன. அவை எல்லாம் இப்போது சரியாகி விட்டன. செயல்திட்டத்தின் தலைவராக, பல ஆண்டுகள் அனுபவம் மிக்க தலைமைப் பொறியாளர் தான் இருக்க வேண்டுமென்பதில்லை; அதிகாரியாகவும் இருக்கலாம் என்ற சுதந்திரத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவு தந்துள்ளது.

ஜனவரியில் இருந்து, மே வரை, 2.5 டி.எம்.சி., தான் தர வேண்டும். பாசனத் தேவை, ஜூனிலிருந்து தான் துவங்கும். எனவே, காலம் இன்னும் இருக்கிறது. அனைவரது ஒத்துழைப்பும் இல்லாவிட்டால், செயல் திட்டத்தை அமல்படுத்த இயலாது. சம்பந்தப் பட்ட நான்கு மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட பின்பே, எதையுமே செயல்படுத்த முடியும். இதில் அவசரம் காட்டுவதற்கு ஒன்றுமில்லை. நதிநீர் சட்ட, 6ஏ பிரிவின் கீழ் தான் செயல் திட்டம் வகுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம், காவிரி பிரச்னையில் ஏற்பட்டுள்ள சிக்கல், அடுத்த கட்டத்தைஎட்டுவது உறுதியாகி உள்ளது.

வாரியம் அமைவது எப்படி?


மத்திய அரசு, பக்ரா - பீஸ் நதி நீர் மேலாண்மை வாரியத்தை போன்று, காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisementஇதுபற்றி, அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பக்ரா - பீஸ் நதிநீர் மேலாண்மை வாரியம், செயல்படுத்துதல், பராமரிப்பு, ஒழுங்குபடுத்தல், கட்டுப்பாடு ஆகிய பணிகளை கவனிக்கிறது. நர்மதா நதிநீர் கட்டுப்பாடு வாரியம், நீர் சேமிப்பு, கட்டுப்பாடு, ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக, நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்றும் பணியில் மட்டும் கவனம் செலுத்துகிறது.

இதில் தொடர்புள்ள கட்டமைப்புகளின் உரிமை, செயல்பாடு, பராமரிப்பு ஆகியவை, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கானது. இந்த இரண்டில் ஒன்றின் அடிப்படையில், காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்கும் எனத் தெரிகிறது.

பக்ரா - பீஸ் நதிநீர் மேலாண்மை வாரியம், 1966ம் ஆண்டின், பஞ்சாப் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் உருவானது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டில்லி, சண்டிகர் ஆகியவற்றுக்கு, சட்லெஜ், ராவி, பீஸ் நதிகளின் நீரை பங்கிட்டு அளிப்பது, இந்த வாரியத்தின் பணியாக உள்ளது. இவ்வாறு வட்டாரங்கள் கூறின.

- நமது டில்லி நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Pu - mumbai,இந்தியா
13-ஏப்-201817:18:00 IST Report Abuse

Raj Puஇந்த ஒரு வார்த்தைக்கே பொருள் தெரியாது உயர் அதிகாரிகள், இதில் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேல், வெள்ளிக்கரன் ஆட்சி காலத்தில் இருந்தே அறிவு அதிகமாக மாக்கள் தான் உயர் பதிவியில் இருந்து வந்துள்ளார், நாடு ஏன் இப்படி சீரழிந்து உள்ளது என்பதற்கு இப்போது காரணம் புரிகிறது, கீழ்நிலையில் உள்ளவன் குற்றம் செய்வது குறைவு, தன்னை மாய்த்துக்கொள்வான் இயலாமை காரணமாக, கோபம் வந்தால் தன வட்டாததுக்கள் குற்றம் புரிவான், இப்படி அயோக்கியத்தனம் செய்வது எல்லாம் தங்களை அறிவாளிகள் பெரிய படிப்பு காரர் போல காட்டிக்கொள்ளும் ஒரு சாரார் தான் இன்றைய கணினி காலத்தில் தெரிய வருகிறது

Rate this:
Aravindhakshan - Chennai,இந்தியா
12-ஏப்-201814:27:13 IST Report Abuse

Aravindhakshanஇப்போது செய்துள்ள துரோகத்தின் அடுத்த நிலையாக இதை மாற்ற பிஜேபி துரோகிகள் முயற்சி செய்யலாம். அதன் மூலம் மேலும் சில மாதங்களுக்கு இழுத்தடிக்கலாம்....அதற்குள் பாராளுமன்றத்திற்கு தேர்தல் வந்துவிடும்..நாங்கள் வெற்றிபெற்றால் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று வாய் கூசாமல் கூவலாம்...ஆக காவிரி விஷயத்தில் தமிழகத்திற்கு துரோகம்தான் அதுவும் நிரந்தரமாக...

Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
12-ஏப்-201813:16:48 IST Report Abuse

Sridharஎன்ன வேணா செய்யுங்க ஆனா, ஒரு அமைப்பு செஞ்சு அதிலே கர்நாடக காரன் கை இல்லாதபடி செய்யுங்க. நீர் இருப்பு மற்றும் வெளியீடு அளவுகள் வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் இருந்தால் போதுமே? மேலும் தண்ணீரை அணைக்கே வராதபடி வேறு இடங்களில் சேமிக்கும் திருட்டுத்தனங்கள் நடக்காமல் அந்த அமைப்பு கண்காணிக்குமேயானால், அதை விட வேறு என்ன வேண்டும்? தேர்தல் முடிந்ததும் செய்வீர்கள் என நம்புகிறோம். அங்கு காங்கிரஸ் ஜெயித்தது என்றால் நிச்சயம் ஆப்பு அடிக்க மத்திய அரசு இதை செய்யும். BJP ஜெயித்தால், செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம் பார்க்கப்போனால் காவேரி விஷயம் ஒன்னும் பெருவாரியான கர்நாடக மக்களுக்கு பொருட்டல்ல. மைசூர் மற்றும் அதை சுற்றிய சில பகுதிகள் தாம் இதனால் பாதிக்கப்படப்போகும் பிரதேசங்கள். மிஞ்சிப்போனால் 10 MLA சீட்டுகள். பெங்களூரில் தமிழர் வோட்டு கணிசமாகவே இருக்கு(முடிவை நிர்ணயிக்கும் அளவு இருக்குமா என்பது சந்தேகமே). ஆகவே, அனலிடிகாவை கேட்டால் இந்த விஷயத்திற்கு எவ்வளவு தூரம் பயப்பட வேண்டும் என்று தெளிவு படுத்துவார்கள். ரொம்ப நாட்களாகவே அரசியல் வாதிகள் சரியான அளவீடுகள் இல்லாததால், தேவையில்லாமல் இந்த விஷயத்தில் மிக பெரிய தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X