பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ராணுவ கண்காட்சி: இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்

Updated : ஏப் 12, 2018 | Added : ஏப் 12, 2018 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை:சென்னையை அடுத்த திருவிடந்தையில், 'டிபெக்ஸ்போ- - 18' என்ற, பிரமாண்டமான ராணுவ கண்காட்சியை, பிரதமர் நரேந்திர மோடி, இன்று முறைப்படி துவக்கி வைக்கிறார்.மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நடத்தப்படும், 'டிபெக்ஸ்போ- - 18' என்ற ராணுவ கண்காட்சி, நேற்று, சென்னையை அடுத்த, திருவிடந்தையில் துவங்கியது. கண்காட்சி, வரும், 14ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில், ராணுவ கண்காட்சி
Chennai Army Exhibition,Defexpo 18, PM Modi,சென்னை ராணுவ கண்காட்சி, பிரதமர் நரேந்திர மோடி, டிபெக்ஸ்போ 18, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் , ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் , ராணுவ உடையில் தோனி, அமெரிக்கா போயிங், 
 Prime Minister Narendra Modi, Ministry of Defense, Military Armed Manufacturers, Army Clothing Dhoni, USA Boeing,

சென்னை:சென்னையை அடுத்த திருவிடந்தையில், 'டிபெக்ஸ்போ- - 18' என்ற, பிரமாண்டமான ராணுவ கண்காட்சியை, பிரதமர் நரேந்திர மோடி, இன்று முறைப்படி துவக்கி வைக்கிறார்.மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நடத்தப்படும், 'டிபெக்ஸ்போ- - 18' என்ற ராணுவ
கண்காட்சி, நேற்று, சென்னையை அடுத்த, திருவிடந்தையில் துவங்கியது. கண்காட்சி, வரும், 14ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில், ராணுவ கண்காட்சி நடத்தப்படுவது, இதுவே முதல் முறை.ராணுவ தளவாட உற்பத்தியில், இந்தியாவின் வலிமையை, சர்வதேச அளவில் வெளிப்படுத்தவும், உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின், தளவாட உற்பத்திகளை அதிகரிக்கவும், 800 கோடியில், இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

கண்காட்சியில், 162 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட, 701 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, மொத்த அரங்கில், 15 சதவீத இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.'பெல், டாடா, பிரம்மாஸ்' உள்ளிட்ட முக்கிய இந்திய நிறுவனங்களும், அமெரிக்காவின் போயிங், பிரான்சின் ரபேல், ஏர்பஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும், கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
ராணுவ உடையில் தோனி
ராணுவ கண்காட்சியை பார்வையிட, நேற்று பிரபல கிரிக்கெட் வீரர், மகேந்திரசிங் தோனி, ராணுவ உடையில் வந்தார்; ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்டார். அவரது திடீர் வருகை, பார்வையாளர்கள் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
guna - madurai,இந்தியா
12-ஏப்-201814:11:06 IST Report Abuse
guna கோர்ட் சொல்லியும் தண்ணீர் கொடுக்க முடியாது என்று கர்நாடாவை ஆளும் காங்கிரஸ் . காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது நம்ம ஸ்டாலின், தண்ணீர் தரவில்லை என்றால் கூட்டணியை முறித்துக்கொள்ள முடியுமா உன்னால் . தண்ணீர் திறந்தாள் கர்நாடகாவில் காங்கிரஸ் காலியாகிவிடும் . இந்த சமயத்தில் பிஜேபி எதாவது செய்தால் பிஜேபியும் காலி பண்ணி விடுவார்கள் . பிஜேபிக்கு தமிழ்நாட்டை விட கர்நாடகாவில் அதிக ஓட்டு உள்ளது . காவிரி பிரசனை இன்று வந்த பிரச்சனை இல்லை. பல ஆண்டு காலமாக காங்கிரசால் உருவாக்க பட்டது (திமுக கூட்டணி ). மக்களுக்கு சிந்திப்பதற்கு நேரம் கிடையாது . இது அரசியல்வாதிகள் மக்களை பயன் படுத்திக்கொள்கிறார்கள் .
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஏப்-201810:54:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மகேந்திரசிங் தோனி, ராணுவ உடையில் வந்தார்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஏப்-201810:52:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒரு உண்மையை சொல்லட்டுமா. என்னை திட்டுவதால் எந்த பிரயோசநமும் இல்லை. இந்த மாடல்களை செய்தது ரஷியாவில், சீனாவிலும் தான்.. LOL..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X