பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் மனங்களை வெல்ல இந்தியா விருப்பம்: பிரதமர்

Updated : ஏப் 12, 2018 | Added : ஏப் 12, 2018 | கருத்துகள் (76)
Share
Advertisement
சென்னை: போர் தொடுத்து நாடுகளை வெல்வதை விட மனங்களை வெல்லவே இந்தியாவுக்கு விருப்பம் என பிரதமர் மோடி கூறினார்.முறைப்படி துவக்கம்மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நடத்தப்படும், 'டிபெக்ஸ்போ- - 18' என்ற ராணுவ கண்காட்சி, நேற்று, சென்னையை அடுத்த, திருவிடந்தையில் துவங்கியது. கண்காட்சி, வரும், 14ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில், ராணுவ கண்காட்சி நடத்தப்படுவது,
PM Modi, Defense  Ministry ,Defexpo 18, ராணுவ தளவாட கண்காட்சி, பிரதமர் மோடி, தமிழகம், சோழ மன்னர்கள், மக்கள் மனங்களை வெல்ல இந்தியா விருப்பம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் , டிபெக்ஸ்போ 18, சென்னை திருவிடந்தை ராணுவ கண்காட்சி, ராணுவ தளவாட உற்பத்தி,  ராணுவ கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி,
The Army Arbitration Exhibition, Prime Minister Modi, Tamil Nadu, Chola kings, India wish to win people minds, 
Defexpo 2018, Chennai Thiruvidanthai Exhibition, Armed Forces Production, Military Exhibition , Defense Expo2018

சென்னை: போர் தொடுத்து நாடுகளை வெல்வதை விட மனங்களை வெல்லவே இந்தியாவுக்கு விருப்பம் என பிரதமர் மோடி கூறினார்.


முறைப்படி துவக்கம்

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நடத்தப்படும், 'டிபெக்ஸ்போ- - 18' என்ற ராணுவ கண்காட்சி, நேற்று, சென்னையை அடுத்த, திருவிடந்தையில் துவங்கியது. கண்காட்சி, வரும், 14ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில், ராணுவ கண்காட்சி நடத்தப்படுவது, இதுவே முதல் முறை.ராணுவ தளவாட உற்பத்தியில், இந்தியாவின் வலிமையை, சர்வதேச அளவில் வெளிப்படுத்தவும், உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின், தளவாட உற்பத்திகளை அதிகரிக்கவும், 800 கோடியில், இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.


பெருமை

கண்காட்சியை பிரதமர் மோடி முறையாக துவக்கி வைத்து பேசினார். காலை வணக்கம் என தமிழில் தனது உரையை துவங்கிய மோடி, தொடர்ந்து பேசியதாவது: சோழ மன்னர்களால் பெருமை பெற்ற மாநிலம் தமிழ்நாடு. வலிமையான ராணுவத்தை வழிநடத்தி உலகம் முழுதும் சோழ மன்னர்கள் வணிகம் நடத்தினர். ஆயிரகணக்கான ஆண்டுகளாக கடல் கடந்த வணிகத்திலும் சிறந்த விளங்கிய மாநிலம் தமிழகம். சோழ மன்னர்கள் ஆண்ட பகுதியில் நீங்கள் இந்த அளவுக்கு கூடியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அர்த்தசாஸ்திரம் இந்தியாவில் தோன்றியது.


அமைதியை நிலைநாட்ட

உலகிற்கு அகிம்சையை கற்று கொடுத்தது. இந்தியா ஒரு போதும் எல்லையை மீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது இல்லை. போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வதை விட மக்கள் மனங்களை வெல்லவே இந்தியாவிற்கு விருப்பம். அமைதியை விரும்பும் அதேநேரத்தில், நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக எல்லையில் ராணுவம் தனது பங்களிப்பை வழங்குகிறது. ஐ.நா.,வின் அமைதி பணிக்காக உலகம முழுதும் இந்திய வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமைதியான வழியில் ஆட்சி செய்யும் போது, ஆயுதங்கள் எதற்கு என கேள்வி எழுலாம். அமைதியை நிலைநாட்டவும், எதிரிகளுக்கு அடையாளம் காணவும் ஆயுதங்கள் தேவை.


கொள்முதல்


தொழில்துறைக்கு சாதகமாகவும், வெளிப்படையான கொள்கைள் வகுக்கப்பட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன் சிறிய அளவில் துவங்கிய ராணுவ தளவாட உற்பத்தி, தற்போது அசுர வளர்ச்சியடைந்துள்ளது. உள்நாட்டு ராணுவ உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாம் தளவாட கொள்முதல் செய்வதை விட நம்மிடம் கொள்முதல் செய்ய வேண்டும். ஏற்றுமதி கொள்கைகளை எளிமைப்படுத்தி மக்கள் பார்வைக்கு வைத்துள்ளோம். பாதுகாப்பு துறையில் சிறு குறு நடுத்தர தொழில்துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட தேவையான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறை உற்பத்தி, ஏற்றுமதி, அன்னிய நேரடி அன்னிய முதலீடு போன்றவற்றிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


தொழில் வளர்ச்சி


தமிழகம், உத்தர பிரதேசத்தில், பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்படும். இதன் மூலம் தொழில்துறை மேம்படும். வேலைவாய்ப்புகள் பெருகும். எதிர்காலத்தில் இந்த 2 வழித்தடங்கள் தான் இந்தியாவின் தொழில்வளர்ச்சியை நிர்ணயிக்க போகின்றன. தளவாட உற்பத்திக்கு தேவையான உதவி செய்யப்படும் எனப்பேசினார்.
தனது பேச்சில் தொட்டணை தூறும் மணற்கேணி என்ற திருக்குறளையும் மோடி வாசித்தார்.

பின் ராணுவ கண்காட்சியில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, முப்படையினரின் சாகச நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-ஏப்-201802:16:26 IST Report Abuse
Mani . V தமிழகத்தையும், தமிழர்களையும் அழித்து விட்டு 'மனங்களை வெல்லப் போகிறாராம்'.
Rate this:
Cancel
12-ஏப்-201822:45:28 IST Report Abuse
ஆப்பு ஆமா..இந்த ஏவுகணைகளை நிர்மலாம்மா விக்கப் போறாங்க...வாங்குறவங்களும் அதை வெச்சு விவசாயம் பண்ணப்போறாங்க ..வீடு கட்டப் போறாங்க ..
Rate this:
Cancel
முஹமதுகனி(புதுக்கோட்டை) ஆன்டவா தமிழகத்தையும் இந்தியாவையும் இவர்கள் இருவரிடம் இருந்து காப்பாற்றுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X