பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
களமிறங்குகிறார்
கருத்துக் கணிப்புகளை பொய்யாக்க பிரதமர் மோடி...
வரும் 18 முதல் கர்நாடக மாநிலத்தில் தீவிர பிரசாரம்

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தற்போதைய ஆளும் கட்சியான காங்., தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Modi ,CM Siddaramaiah,Karnataka Election,கர்நாடக தேர்தல் கருத்துக் கணிப்பு, பிரதமர் மோடி, கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், மோடி தீவிர தேர்தல் பிரசாரம் ,மே 12ல் கர்நாடக சட்டசபை தேர்தல், முதல்வர் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளம், பிரதமர் நரேந்திர மோடி புதுவியூகம், பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா , 
Karnataka Election opinion polls, Prime Minister Modi, Karnataka state assembly election, Modi serious election campaign,
Karnataka assembly election on May 12, Chief Minister Siddaramaiah, secular Janata Dal, Prime Minister Narendra Modi , Bharatiya Janata national leader Amit Shah,


இந்தக் கணிப்பை பொய்யாக்கும் வகையில் கர்நாடகாவில் 18ம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அவருடன் பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களும் பிரசாரம் செய்யவுள்ளனர். கர்நாடகாவில் காங்கிரசைச் சேர்ந்த சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில் மே 12ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது தொடர்பாக 'இந்தியா டுடே - கார்வி இன்சைட்' நடத்திய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதன் விபரம்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு கடந்த தேர்தலில் கிடைத்ததை போன்று 37 சதவீத ஓட்டுகள் கிடைக்கும். இருப்பினும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றாது. அக்கட்சி 90 - 101 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.பா.ஜ., 35 சதவீத ஓட்டுகள் பெற்று 78 - 86 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளது. 2013 தேர்தலில் பா.ஜ.,வுக்கு 50 தொகுதிகள் கிடைத்தன.

விருப்பம் :


மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 சதவீத ஓட்டுகளுடன் 34 - 43 தொகுதிகளை கைப்பற்றும்.கருத்துக் கணிப்பில் பங்கேற்றோ

ரில் 45 சதவீதம் பேர் முதல்வர் சித்தராமையாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தால் காங்கிரசுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்க வேண்டும் என 39 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. கருத்துக் கணிப்புகளில் தற்போதைய நிலவரப்படி காங்., முந்துவதாகக்கூறப்பட்டாலும் அதை பொய்யாக்கி காங்., - மதச்சார்பற்ற ஜனதா தளத்தை வீழ்த்தி பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி புதுவியூகம் வகுத்துள்ளார். இதன்படி 18ம் தேதி முதல் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் மோடி தீவிர பிரசாரங்களில் ஈடுபட உள்ளார். அவருடன் பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களின் முதல்வர்களும் பிரசார களத்தில் குதிக்க உள்ளனர். இவர்களும் பா.ஜ., மூத்த தலைவர்களும் 18ம் தேதி முதல் மாநிலத்தின் மூலை முடுக்குகளில் தொடர் பிரசாரம் செய்து ஓட்டு வேட்டை நடத்த உள்ளனர்.

விளக்கம் :


கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சியில் ஐந்தாண்டுகளாக நடந்த ஊழல்களை தேர்தல் பிரசாரத்தின் போது மோடியும், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர்களும் மக்களிடம் விளக்கிக் கூற உள்ளனர். மேலும் மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான அரசு அமல்படுத்தி உள்ள மக்கள் நலத் திட்டங்களையும், கர்நாடகாவுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்களையும் விளக்கிக் கூறவுள்ளனர்.இதனால் தற்போதைய சூழலை மாற்றி பா.ஜ.,வை வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்ய முடியும் என்பதில் மோடியும், பா.ஜ., மூத்த தலைவர்களும் உறுதியாகஉள்ளனர்.பிரதமர் மோடி வரும் 18ம் தேதி முதல் மே, 10ம் தேதி வரை 20 இடங்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளி, தாவணகெரே, பெலகாவி, கலபுர்கி, மங்களூரு உள்ளிட்ட நகரங்களில் மோடியின் பிரசாரக் கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக்

Advertisement

கூறப்படுகிறது.ஏற்கனவே பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா கர்நாடகாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி., முதல்வர் ஆதித்யநாத், மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரங்களில் ஈடுபட உள்ளனர்.-

இதுவரை நடந்தது என்ன :


கர்நாடக மாநில சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 224. இதில் 173 தொகுதிகள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவை; 36 தொகுதிகள் எஸ்.சி., எனப்படும் தலித்துகளுக்கான தனித் தொகுதிகள். 15 தொகுதிகள் எஸ்.டி., எனப்படும் பழங்குடியினருக்கானவை.கடந்த 2008ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., 110 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது; 2013 தேர்தலில் காங்., 122 தொகுதிகளை வென்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 1978 முதல் 2008 வரை மத்தியில் ஆட்சியில் இருக்கும் எந்தக் கட்சியும் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் வென்ற தில்லை. இருப்பினும் 2013ல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கர்நாடகா சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்தது. ஆனாலும் இத்தேர்தல் முடிந்த ஒரு ஆண்டுக்கு பின் 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்று, மத்தியில் ஆட்சி அமைத்தது.


Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
17-ஏப்-201810:22:48 IST Report Abuse

ராஜவேலு ஏழுமலைசிறுமிகளே, குமரிகளே, பெண்களே, அம்மாக்களே, பாட்டிகளே, கவனமாக இருங்கள் அல்லது ஒளிந்துகொள்ளுங்கள் பிஜேபி ஆட்கள் வருகிறார்கள்.

Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
16-ஏப்-201803:12:44 IST Report Abuse

Makkal Enn pakamசிங்கம் களம் இறங்கிடிச்சி, எல்லாரும் தெறிச்சி ஒடுங்க ........ ஏமாத்துக்கார சிங்கம், வாயில வடை சுடும் சிங்கம்.

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
15-ஏப்-201819:51:09 IST Report Abuse

siriyaarBJP must take following steps in rape issues so that it will reverse its fortune in karnataka, it is started by congress but can be used by BJP well. 1. Immediatly Ban the all websites and nude videos on web. Arrest the people who puplicise it. 2. Arrest some bollywood actress and jail them for valcour acting. 3. severe punishment law in next parliament scession. 4. change in censor law that will not allow sex promotion. 5. Ask reediting of all movies and makenit recertified. Do it like triple talak

Rate this:
மேலும் 73 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X