சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி போலீசாருக்கு மிரட்டல் 7 பேர் மீது வழக்கு பதிவு 

Added : ஏப் 16, 2018
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருட்டு வழக்கில் தொடர்புடையவரை கைது செய்ய வந்த, புதுச்சேரி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலம், கரையாம்புத்துார் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவபாலன், போலீசார் பழனிச்சாமி ஆகியோர் பாகூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த வாகன திருட்டு வழக்கில், தொடர்புடையவர்களான

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருட்டு வழக்கில் தொடர்புடையவரை கைது செய்ய வந்த, புதுச்சேரி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலம், கரையாம்புத்துார் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவபாலன், போலீசார் பழனிச்சாமி ஆகியோர் பாகூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த வாகன திருட்டு வழக்கில், தொடர்புடையவர்களான விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சொர்ணாவூர், கீழ்பாதியைச் சேர்ந்த ரவி மகன் ரஞ்சித் என்பவரை, நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டிற்கு சென்று கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர்.ரஞ்சித், அவரது உறவினர்கள் பாரதி, அலெக்ஸ், மாணிக்கம், பிரபாகரன், சேகர் மற்றும் தீபிலா ஆகியோர், போலீசார் இருவரையும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து, போலீஸ்காரர் பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில், ரஞ்சித் உள்ளிட்ட ஏழு பேர் மீது வளவனுார் போலீசார், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X