பொது செய்தி

தமிழ்நாடு

புதுகையில் 4 புகையில்லா கிராமங்கள்: இலவச சமையல் காஸ் வழங்க முடிவு

Added : ஏப் 16, 2018
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், நான்கு புகையில்லா கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச சமையல் காஸ் வழங்கப்பட உள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மதுரை மேலாளர் தியாகராஜன், நேற்று புதுக்கோட்டையில் அளித்த பேட்டி: நாடு முழுவதும், 15 ஆயிரம், எல்.பி.ஜி., ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதனால், எரிவாயு உபயோக நன்மைகள், மக்களுக்கு முழுவதுமாக சென்றடையும். இந்தக் கூட்டங்கள், கிராம தன்னிறைவு திட்டத்தின் ஓர் அங்கமாகும். இந்த கூட்டங்களின் வாயிலாக, எட்டு கோடி குடும்பங்களுக்கு சமையல் காஸ் கிடைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. மேலும், பெண்கள் உடல் நலம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு, குறைந்த செலவு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச சமையல் காஸ் வழங்கப்பட உள்ளது. இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில், விராச்சிலை, கவிநாடுமேற்கு, திருநள்ளுர், ஓடப்பாவிடுதி ஆகிய கிராமங்கள், புகையில்லா கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் இலவச அரிசி பெறுவோர், மத்திய அரசின் இலவச வீடு திட்ட பயனாளிகள் உட்பட அனைவருக்கும், இலவச சமையல் காஸ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X