அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலாதேவி மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலா தேவி மாணவியரிடம் தொலைபேசி மூலம் பேசி சில அதிகாரிகளுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டார். இந்த உரையாடல், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருகிறது. பேராசிரியை கண்டித்து அருப்புக்கோட்டையில் மாதர் சங்கத்தினர் மற்றும் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட பேராசிரியை மீது போலீசில் புகார் அளிக்குமாறு கல்வி துறை செயலர் சுனில் பாலிவால் கேட்டு கொண்டார். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தாசில்தார் கார்த்திகேயனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி., தனபாலிடம் , கல்லூரி முதல்வர் பாண்டிய ராஜன், மாதர்சங்கத்தினர் இணைந்து புகார் அளிக்கவுள்ளனர். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., தனபால் கூறியுள்ளார். இதனையடுத்து பேராசிரியை நிர்மலா தேவி கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE